Type Here to Get Search Results !

TNPSC 14th JULY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

புதிய கார்டுகளை வழங்க மாஸ்டர் கார்டு நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி தடை

  • வாடிக்கையாளர்களுக்கு புதிய கார்டுகளை வழங்க மாஸ்டர் கார்டு நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இந்த தடை ஜூலை 22ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஆர்பிஐ தெரிவித்திருக்கிறது.
  • ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, இந்திய வாடிக்கையாளர்களின் தகவல்கள் குறித்த விவரங்களில் சேகரிக்கப்படும் சர்வர்கள் இந்தியாவில் இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
  • ஆனால், இந்த உத்தரவை மாஸ்டர் கார்டு நிறுவனம் பின்பற்றவில்லை என்பதால், ரிசர்வ் வங்கி இந்தத் தடையை விதித்திருக்கிறது. அதேசமயம் மாஸ்டர் கார்டு பயன்படுத்தி வரும் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை என ஆர்பிஐ தெரிவித்திருக்கிறது.

விகாஸ் இன்ஜின் சோதனை வெற்றி

  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் எனப்படும் இஸ்ரோ புவியின் தாழ் வட்டப்பாதைக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. ககன்யான் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  • இந்நிலையில் ககன்யான் திட்டத்தில் பயன்படுத்தப்படும் இன்ஜின் சோதனை இன்று வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நெல்லையிலுள்ள காவல்கிணறு மகேந்திரகிரியின் இஸ்ரோ மையத்தில் இந்த சோதனை நடைபெற்றது.

நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை தாக்கல்

  • நீட் தோவால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஆய்வு செய்த நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தனது அறிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியது. 
  • மாணவா்கள், பெற்றோா்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள், புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே கருத்துகளைத் தொகுத்துள்ளதாக குழுவின் தலைவா் நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்தாா்.
  • நீட் தோவால் மாணவா்கள், அவா்களது பெற்றோா்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழுவை முதல்வா் மு.க.ஸ்டாலின் அமைத்தாா். 
  • இந்தக் குழுவில் டாக்டா் ஜி.ஆா்.ரவீந்திரநாத், டாக்டா் ஜவகா் நேசன், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளா், சட்டத்துறைச் செயலாளா், சுகாதாரத் துறை சிறப்புப் பணி அலுவலா், மருத்துவக் கல்வி இயக்குநா், மருத்துவக் கல்வி இயக்கக் கூடுதல் இயக்குநா் ஆகியோா் இடம்பெற்றிருந்தனா்.

ஷாங்காய் மாநாட்டில் ஜெய்சங்கர் பேச்சு

  • ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில், தலிபான்கள் கை ஓங்கி உள்ளது. ஆப்கானிஸ்தான் பெரும்பகுதிகளை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 
  • இந்நிலையில் தஜிகிஸ்தான் தலைநகர் துசான்பேவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு நடைபெற்றது. இதில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சகர்கள் கலந்து கொண்டனர்.
  • மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், ''ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களின் எதிர்காலமானது கடந்த காலத்தில் இருந்ததைபோலவே இருக்கக்கூடாது.
  • வன்முறை மற்றும் வலுகட்டாயமாக ஆட்சியை பறிக்கும் நடவடிக்கைக்கு இந்த உலகம் எதிரானது. காபூலின் அண்டை நாடுகள் தீவிரவாதம், பிரிவினை மற்றும் உச்சபட்ச தீவிரவாதத்தால் அச்சுறுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்வது அவசியமாகும்'' என்றார். 
  • சீனா வெளியுறவு துறை அமைச்சர் வாங் யீ அளித்த பேட்டியில், ''ஆப்கானிஸ்தானில் போர் மேலும் பரவுவதற்கு தலிபான்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'' என்றார்.

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்வு - அமைச்சரவையில் ஒப்புதல்

  • மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது. விலைவாசி உயர்வுக்கேற்ப ஜனவரி, ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும். 
  • ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்காமல் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. 
  • இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில், அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 28 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பாபா ராம்தேவின் பதஞ்சலிக்கு 5 ஆண்டுகள் வரிச் சலுகை, ஆராய்ச்சி நிறுவன அந்தஸ்து

  • பதஞ்சலி குழுமம், மூலிகை தயாரிப்புகள், நோய் எதிர்ப்பு சக்தி பொருட்கள், பற்பசை, நூடுல்ஸ், சோப்பு மற்றும் கழிப்பறை சுத்திகரிப்பான்கள் வரை விற்பனை செய்கிறது. இந்த நிறுவனத்திற்கு ஆராய்ச்சி நிறுவன அந்தஸ்தினை வழங்கியிருக்கும் வருமானத்துறை பல்வேறு வரிச்சலுகைகளை அறிவித்திருக்கிறது.
  • 2021-2022 நிதியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் இந்த சலுகைகள், 2022-23 நிதியாண்டு முதல் 2027-28 நிதியாண்டு வரை ஐந்து ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் என வருமான வரித்துறை தெரிவித்திருக்கிறது.
நீதித்துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான அமைச்சரவை ஒப்புதல்
  • நீதித்துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான மத்திய நிதியுதவித் திட்டத்தை 01.04.2021 முதல் 31.03.2026 வரை ரூ. 9000 கோடி செலவில் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
  • வழக்குகள் மற்றும் நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இன்றியமையாதது. 
  • 3800 நீதிமன்ற அரங்குகள், மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களின் நீதி அதிகாரிகளுக்கு 4000 குடியிருப்பு பிரிவுகள் (ரூ. 4500 கோடி மதிப்பில்), 1450 வழக்கறிஞர் அரங்குகள் (ரூ.700 கோடி மதிப்பில்), 1450 கழிவறைகள் (ரூ. 47 கோடி மதிப்பில்), மற்றும் ரூ. 60 கோடி மதிப்பீட்டில் 3,800 மின்னணு கணிப்பொறி அறைகளை அமைக்க இந்தத் திட்ட முன்மொழிவு உதவிகரமாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
  • நீதித்துறையின் செயல் திறனை மேம்படுத்துவதிலும், புதிய இந்தியாவிற்கு மேம்பட்ட நீதிமன்றங்களை கட்டமைக்கவும் இந்த முயற்சி ஏதுவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கிராம நியாயாலயா திட்டங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ரூ. 50 கோடி செலவில் உதவிகளை அளிக்கவும் அமைச்சரவை அனுமதி அளித்தது. 
  • எனினும் அறிவிக்கப்பட்ட கிராம நியாயாலயா பயன்பாட்டிற்கு வந்த பிறகு, அதற்கான அதிகாரி நியமிக்கப்பட்ட பிறகு, நீதித்துறையின் கிராம நியாயாலயா தளத்தில் அறிவிப்பு வெளியான பிறகே இந்த நிதி மாநிலங்களுக்கு விடுவிக்கப்படும். இந்தத் திட்டத்தின் செயல்பாடு குறித்து ஒரு வருடம் கழித்து ஆய்வு செய்யப்படும்.

தேசிய ஆயுஷ் இயக்கத்தை மத்திய நிதியுதவித் திட்டமாக தொடர ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

  • தேசிய ஆயுஷ் இயக்கத்தை மத்திய நிதியுதவித் திட்டமாக 01-04-2021 முதல் 31-03-2026 வரை ரூ. 4607.30 கோடி மதிப்பில் (மத்திய அரசின் பங்காக ரூ. 3000 கோடி, மாநில அரசின் பங்காக ரூ. 1607.30 கோடி) தொடர பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • குறைந்த செலவில் ஆயுஷ் சேவைகளை வழங்குவது, ஆயுஷ் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்கள், சமுதாய மருத்துவ மையங்கள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள வசதிகளை தரம் உயர்த்துவது, ஆயுஷ் கல்வி நிறுவனங்களின் தரத்தை உயர்த்துவதன் வாயிலாக நிறுவன திறனை வலுப்படுத்துவது, 50 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனைகள் மற்றும் ஆயுஷ் பொது மருத்துவத் திட்டங்களை உருவாக்குவது, 12500 ஆயுஷ் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு மையங்களை அமைப்பது உள்ளிட்டவை மத்திய நிதியுதவித் திட்டத்துடன் கூடிய தேசிய ஆயுஷ் இயக்கத்தின் நோக்கமாகும்

புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல்

  • டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் ஓர் ஆண்டுக்குப்பின் மீண்டும் கூடியது. அப்போது, சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவம் பயில புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் அமைக்க பிரதமர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு நாட்டு மருத்துவ மையத்தை வடகிழக்கு ஆயுர்வேதம் மற்றும் நாட்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் என பெயர் மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வடகிழக்கு நாட்டு மருத்துவ மையத்தை வடகிழக்கு ஆயுர்வேதம் மற்றும் நாட்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் என்று பெயர் மாற்றி ஆணை பிறப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
  • நாட்டு மருந்து மையத்துடன் ஆயுர்வேதமும் இணைக்கப்படுவதால் வடகிழக்குப் பகுதிகளில் உள்ள மக்கள் நாட்டு மருந்து மற்றும் ஆராய்ச்சியில் தரமான கல்வியறிவு மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு மிகவும் பயனளிக்கும்.
  • இந்தியாவில் ஆயுர்வேதம் மற்றும் நாட்டு மருந்து பயிலும் மாணவர்கள் மட்டுமல்லாமல் அண்டை நாடுகளான திபெத், பூட்டான், மங்கோலியா, நேபாளம், சீனா மற்றும் இதர மத்திய ஆசிய நாடுகளின் மாணவர்களுக்கும் இந்த மையம் பல்வேறு வாய்ப்புகளை அளிக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel