கீழடி 7ம் கட்ட அகழாய்வில் தொட்டி கண்டெடுப்பு
- திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பிப்.13-ம் தேதி முதல் 7-ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதுவரை 700-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன.
- கீழடியில் இதுவரை 7 குழிகள் தோண்டப்பட்டு, மண் பானை, குவளை, காதில் அணியும் தங்க வளையம், பகடை, உழவுக் கருவி, கருப்பு, சிவப்பு நிறப் பானை ஓடுகள், மண் குவளைகள், சுடுமண், கண்ணாடி பாசிகள் கண்டறிப்பட்டன. மேலும் கொந்தகையில் 7-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.
- கீழடியில் சிறிய வேலைப்பாடுடன் கூடிய பானை ஓடு கண்டறியப்பட்டது. முழுமையாக தோண்டியபோது உருளை வடிவிலான தொட்டி போன்ற அமைப்பு வெளியே காணப்பட்டது. 44 செ.மீ உயரம், 77 செ.மீ அகலம் கொண்டது. கீழடியில் ஏற்கனவே நடந்த அகழாய்வில் நெசவு தொழிலில் பயன்படுத்தப்படும் களிமண் குண்டு, நெசவு ஊசி, தக்களி கண்டறியப்பட்டன.
- தற்போது கிடைத்துள்ள தொட்டி போன்ற அமைப்பும் நெசவு தொழிற்சாலையில் பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கோப்பா அமெரிக்கா கால்பந்துப் போட்டி அர்ஜென்டினா அணி சாம்பியன்
- ரியோடி ஜெனிரோ நகரில் நடந்த இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
- கோபா அமெரிக்கா போட்டியில் அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வெல்வது இது 15-வது முறையாகும். ஆட்டநாயகன் விருது கோல் அடித்த அர்ஜென்டினா வீரர் டி மரியாவுக்கு வழங்கப்பட்டது.
- அர்ஜென்டினா சீனியர் அணிக்கு லயோனல் மெஸ்ஸி தலைமையில் பெறும் முதல் கோப்பை இதுவாகும். ஏறக்குறைய 16 ஆண்டுகளுக்குப்பின் தனது அணிக்காக மெஸ்ஸி கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
விண்வெளி செல்லும் 3-ஆவது இந்திய வம்சாவளிப் பெண்
- அமெரிக்காவைச் சோந்த தனியாா் நிறுவனமான வா்ஜின் கலாக்டிக், மனிதா்களை ஏற்றிச் செல்லக்கூடிய 'ஸ்பேஸ்ஷிப்-2 யூனிட்டி' என்ற தனது விண்வெளி ஓடத்தை சோதனை முறையில் விண்வெளியில் செலுத்துகிறது.
- அந்த ஓடத்தில் வா்ஜின் கலாக்டிக் நிறுவன உரிமையாளரான சா் ரிச்சா்ட் பிரான்ஸனுடன் 6 போ செல்கின்றனா். அவா்களில் ஒருவராக, இந்திய வம்சாவளியைச் சோந்த ஸ்ரீஷா பண்டலா (34) தோந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
- ஆந்திராவில் பிறந்த அவா், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம், ஹூஸ்டனில் வளா்ந்தவா். ஸ்பேஸ்ஷிப்-2 யூனிட்டி சோதனை வெற்றிகரமாக நிறைவடையும்போது, விண்வெளிக்குச் சென்ற 3-ஆவது பெண் வீராங்கனை என்ற பெருமையை ஸ்ரீஷா பெறுவாா்.
விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி சாம்பியன்
- கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நடந்தது.
- இந்த ஆட்டத்தில், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டியும், செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவும் மோதினர்.
- ஒரு மணி நேரம், 56 நிமிடங்கள் நீடித்த இந்தபோட்டியில் ஆஷ்லி பார்ட்டி 6-3, 6-7, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பிளிஸ்கோவாவை வீழ்த்தி, முதல் முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்தியாவுக்கு புதிய தூதர் அமெரிக்க அதிபர்
- இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் பதவிக்கு எரிக் கார்சேட்டியை (50) அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். செனட் உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்த பின்னர் இவர் தூதராக நியமிக்கப்படுவார்.
- இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் மேயராக கடந்த 2013ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார்.