Type Here to Get Search Results !

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்துக்கு சர்தார் பட்டேல் விருது / The National Banana Research Center has received the Sardar Patel Award

 

TAMIL
  • திருச்சியில் இயங்கிவரும் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில், வாழையில் காவேரி, கல்கி, உதயம், காவேரி, காவேரி சுகந்தம், காவேரி ஹரிதா, மற்றும் காவிரி கன்னியா போன்ற ரகங்களை வெவ்வேறு தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப பல ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
  • நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த ரகங்கள் தற்போது உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில் உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு புரிந்துணர்வு திட்டங்களையும் வாழை ஆராய்ச்சி மேற்கொண்டு உள்ளது.
  • இந்திய மக்கள் தொகையில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுகளான வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் பயோ ஃபோர்டிபைய்டு ரகங்களை உற்பத்தி செய்யும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.
  • சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான வாழைக் கன்றுகள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக குறைந்த விலை வாழை கன்றுகளை உற்பத்தி செய்யும் கேளா விருத்தி என்ற தொழில் நுட்பத்தையும் நபார்டு வங்கியின் கூட்டு முயற்சியோடு செயல்படுத்தி வருகிறது.
  • ஆராய்ச்சிக் கூடங்களில் உள்ள தொழில் நுட்பங்கள் அவர்களை சென்றடையும் பொழுதும் அந்த தொழில் நுட்பங்களின் உள்ள வேறுபாடுகளை வயல்வெளிகளில் இருந்து ஆராய்ச்சிக் கூடத்திற்கு எடுத்து வருவதில் வேளாண் விரிவாக்க நோக்கமாகக் கொண்டு இந்த மையம் வேளாண் விரிவாக்க ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க நிகழ்வுகளையும் முன்னெடுத்து வருகிறது.
  • இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் அங்கமாக உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியில் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சிறந்த ஆராய்ச்சி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு அந்த போட்டியில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது.
  • தேசிய அளவில் முதல் இடத்தைப் பிடித்த நிறுவனத்திற்கு உயர்ந்த விருதான சர்தார் பட்டேல் சிறந்த ஆராய்ச்சி நிறுவனத்திற்கான 2020 ஆம் ஆண்டிற்கான விருதை திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் பெற்றுள்ளது.
ENGLISH
  • At the National Banana Research Center, Trichy, varieties of bananas such as Kaveri, Kalki, Udayam, Kaveri, Kaveri Sukantham, Kaveri Harita, and Kaveri Kanya have been released for different climatic conditions.
  • Banana research is being carried out in collaboration with the World Food and Agriculture Organization in collaboration with the World Food and Agriculture Organization as these varieties are currently in the process of production in various parts of the country.
  • Research is underway to produce bio-fortified varieties to address nutritional deficiencies such as vitamin A and iron deficiency in the Indian population.
  • NABARD is also implementing a joint venture called Kela Viruthi, a technology that produces low cost banana seedlings to meet the demand for banana seedlings for small and marginal farmers.
  • The Center also conducts agricultural extension research and extension events with the aim of agricultural extension in bringing the differences in the technologies from the fields to the laboratory when the technologies in the laboratories reach them.
  • The National Banana Research Center has been selected as the best research institute in the competition between research institutes that are part of the Agricultural Research Council of India and has won the first place in the competition. Trichy National Banana Research Center has bagged the Sardar Patel Award for Best Research Institute for the year 2020.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel