Type Here to Get Search Results !

மங்கள் பாண்டே / MANGAL PANDEY

 

TAMIL
  • ஜூலை 19 ஆம் தேதியான இன்று இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மங்கள் பாண்டே பிறந்த தினம். இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கிய வீரர்களில் ஒருவரான மங்கள் பாண்டே 1827 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி உத்திரப் பிரதேசத்தில் நாக்வா என்ற கிராமத்தில் பிறந்தார். அதன்படி,இன்று அவருடைய பிறந்த தினம் ஆகும்.
  • பாண்டே 1849 இல் பிரிட்டிஷின் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியில் தனது 22 வது வயதில் இணைந்து 34 வது பிரிவில் பணிபுரிந்தார். 
  • அதன்பின்னர் பிரிட்டிஷின் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்து 1857 இல் இந்தியக் கலகம் அல்லது சிப்பாய்க் கலகம் ஆரம்பிக்க முக்கிய காரணமாக இவர் இருந்தார்.
  • சிப்பாய்க் கலகமானது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ் அடிமைப்பட்டிருந்த இந்திய மக்களின் தேசிய உணர்வையும் விடுதலை வேட்கையையும் தட்டி எழுப்பி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை நடுங்க வைத்த இந்தியாவின் முதல் சுதந்திரப் போராக அமைந்தது.
  • இதனால் இதைப் பற்றிய உண்மையான தகவல்களை மறைக்க பிரிட்டிஷ் அரசாங்கம் பெருமளவு முயற்சி செய்தது. அந்த வகையில்,1857 இல் நடந்த சிப்பாய் கலகம் என்ற புரட்சியை 'இந்திய சுதந்திரப் போர்' என்று அழைக்கக் கூடாது என்ற தடை விதிக்கப்பட்டது.
  • இதனையடுத்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக செயல்பட்டதால் பாண்டே கைது செய்யப்பட்டார்.அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனால்,இவர் தனது 29 வயதில் 1857 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்.
  • இதனையடுத்து இந்திய அரசு மங்கள் பாண்டே நினைவாக 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதியில் அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டு கௌரவித்தது. 
  • மேலும் மங்கள் பாண்டேயின் வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் "மங்கள் பாண்டே - தி ரைசிங்" என்ற திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
ENGLISH
  • Today, July 19, is the birthday of Indian freedom fighter Mangal Pandey. Mangal Pandey was born on July 19, 1827 in the village of Nagwa in Uttar Pradesh. Accordingly, today is his birthday.
  • Pandey joined the British East India Company in 1849 at the age of 22 and worked in the 34th Division. He was then the main reason for starting the Indian Revolt or Soldier's Mutiny in 1857 against the British East India Company.
  • The mutiny was the first war of independence in India that shook the British Empire and shook the national feeling and desire for liberation of the Indian people enslaved under British imperialism.
  • Thus the British government made great efforts to conceal the true information about this. In that sense, the 1857 Soldier's Revolt was banned from being called the 'Indian War of Independence'.
  • Pandey was subsequently arrested and sentenced to death for his actions against the British government. Thus, he was hanged on April 8, 1857, at the age of 29. Following this, the Government of India issued a postage stamp in memory of Mangal Pandey on October 5, 1984.
  • It is worth mentioning that the movie "Mangal Pandey - The Rising" was released in 2005 depicting the history of Mangal Pandey.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel