Type Here to Get Search Results !

111 நாடுகளில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் / Distribution of delta Corona Virus in 111 countries

 

TAMIL
  • உலக சுகாதார அமைப்பு வாராந்திர தொற்றுநோய் புள்ளிவிபர பட்டியலை வெளியிட்டது. அதில் உலகில் 111 நாடுகளில் அதிக வீரியமுள்ள 'டெல்டா' வைரஸ் பரவியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
  • டெல்டா, ஆல்பா, காமா, பீட்டா என நான்கு வகை உருமாறிய வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மிக விரைவாக பரவும் ஆற்றல் டெல்டாவுக்குத் தான் உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
  • இதனால் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. குறிப்பாக மிகக் குறைவாக தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் சுகாதார வசதிகளை உருவாக்குவதில் அதிக நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • உலகில் 178 நாடுகளில் ஆல்பா வைரஸ் பரவல் பரவியுள்ள நிலையில், பீட்டா, காமா வைரஸ்கள் முறையே 123 மற்றும் 75 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளன. 
  • தற்போது 13-ந் தேதி நிலவரப்படி டெல்டா வைரஸ், 111 நாடுகளில் பரவி உள்ளதாகவும் வரும் மாதங்களில் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் வைரசாக இது இருக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
  • பல நாடுகளில் நோய் கண்காணிப்பு, பரிசோதனை உள்ளிட்ட வசதிகள் குறைவாக உள்ளதால், எப்போது எந்த வகை கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
ENGLISH
  • The World Health Organization has released a weekly epidemic statistics list. It warns of the spread of the highly contagious 'Delta' virus in 111 countries around the world.
  • While four types of mutated viruses have been identified: delta, alpha, gamma, and beta, it is said that delta has the ability to spread rapidly.
  • The World Health Organization (WHO) has warned that this could lead to a crisis in improving health facilities. It has also been reported that countries with the lowest vaccinations in particular will face a greater crisis in the development of health facilities.
  • While the alpha virus has spread to 178 countries around the world, beta and gamma viruses have been detected in 123 and 75 countries, respectively.
  • The World Health Organization (WHO) has warned that the delta virus, which is currently circulating in 111 countries, will become the world's most prevalent virus in the coming months.
  • World Health Organization (WHO) President Tetras Adanom said it was not possible to confirm when any type of corona virus would be transmitted due to lack of facilities, including surveillance and testing in many countries.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel