குறைந்தபட்ச ஆதார விலை நெல்லுக்கு ரூ.72 அதிகரிப்பு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு விநியோகம் செய்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
- காரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படுகிறது. 2021-2022 நிதியாண்டில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.1,868-ல் இருந்து ரூ.72 அதிகரித்து ரூ.1,940 ஆக நிர்ணயிப்பதற்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
- கம்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டால் ரூ.2,150ல் இருந்து ரூ.2,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
17 மாநில அரசுகளுக்கு ரூ.9,871 கோடி ஒதுக்கீடு
- தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு 2021-22ம் ஆண்டுக்கான வருவாய் பற்றாக்குறை மானியத்தை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதன் 3வது தவணைத் தொகையாக ரூ.9,871 கோடியை மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை நேற்று வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- அதில், தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி ஒதுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த 3வது தவணையுடன் சேர்த்து மொத்தம், இந்த நிதியாண்டில் இதுவரையில் மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.29,613 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
- இந்த 17 மாநிலங்களுக்கு இந்த வருவாய் பற்றாக்குறை மானியத்தை வழங்கும்படி 15வது நிதி ஆணையம் ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளது.
- இதில் தமிழகம் ஆந்திரா, அசாம், அரியானா, இமாச்சல், கர்நாடகா, கேரளா, மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் அடங்கும். தற்போது வழங்கப்பட்டுள்ள தொகையுடன், ஏப்ரல், மே மாதங்களையும் சேர்த்து தமிழகத்துக்கு இதுவரையில் மொத்தம் ரூ.551.01 கோடி வழங்கப்பட்டுள்ளது.
2,00,000 கிராமங்களில் 51 லட்ச கழிப்பறைகள்: தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.40,700 கோடி
- கிராமங்களில் தூய்மையை உறுதி செய்வதை பிரதான நோக்கமாக கொண்டுள்ள 'தூய்மை இந்தியா' இயக்கத்தின் கிராமப்புற திட்டத்தில் கழிவு மேலாண்மைக்காக 2021-22-ம் ஆண்டில் ரூ.40,700 கோடியை ஜல் சக்தி அமைச்சகம் ஒதுக்கியுள்ளது.
- இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களில் 51 லட்சம் கழிப்பறைகள் கட்டுமானம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
- இந்த நிதியில், மத்திய அரசின் பங்கு ரூ.14,000 கோடியாகவும், மாநிலங்கள் செலவு செய்ய வேண்டிய தொகை ரூ.8300 கோடியாகவும் இருக்கும்.
- 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் மூலம் ரூ.12,730 கோடியும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் மூலம் ரூ.4,100 கோடியும் கிடைக்க செய்யப்படும்.
- இதை தவிர, வர்த்தக அமைப்புகள் மற்றும் பெருநிறுவன சமுக பொறுப்பு போன்ற திட்டங்களின் மூலம் ரூ.1500 கோடி மாநிலங்களால் முதலீடு செய்யப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கிராமங்களில் தூய்மையை உறுதி செய்வதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.
- தூய்மை இந்தியா இயக்கத்தின் (கிராமப்புறம்) இரண்டாம் கட்டத்தின் கீழ் 2021-22-ம் ஆண்டில் 50 லட்சம் வீட்டுக் கழிவறைகளும், ஒரு லட்சம் சமுகக் கழிவறைகளும் கட்டப்படுவதோடு, 2,400 வட்டங்களில் நெகிழி கழிவு மேலாண்மை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, 386 மாவட்டங்களின் கோபர்தன் திட்டங்களும், 250 மாவட்டங்களில் மனித கழிவு மேலாண்மை ஏற்பாடுகளும், 2 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களில் திட மற்றும் திரவ கழிவு மேலாண்மையும் செயல்படுத்தப்படும்.
ரயில்வேக்கு 5ஜி ஸ்பெக்டரம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் வீடியோ கான்பரன்சிங் முறையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின்னர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறுகையில், ரயில்வே துறைக்கு 5ஜி ஸ்பெக்டரம் வழங்கப்படும்.
- இதன் மூலம் ரயில்வேயில் தொலைதொடர்பு அமைப்பு மேம்படுவதுடன், ரயில் பயணம் பாதுகாப்பாக இருக்கும். தற்போது ரயில்வேத்துறை ஆப்டிக்கள் பைபரை பயன்படுத்துகிறது. ஸ்பெக்டரம் கிடைப்பதன் மூலம், ரேடியோ தொலைதொடர்பு வசதி ரயில்வேக்கு கிடைக்கும்.
- சிக்னல் நவீனமயமாக்கல் மற்றும் 5ஜி ஸ்பெக்ட்ரம் அமலாக்கத்திற்காக அடுத்த 5 ஆண்டுகளில் 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்படும்.
பிட்காயினை சட்டப்பூா்வ நாணயமாக அங்கீகரித்தது எல் சால்வடாா்
- மெய்நிகா் நாணயமான பிட்காயினை பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சட்டப்பூா்வ நாணயமாக மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாா் அங்கீகரித்துள்ளது. இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ள முதல் நாடு எல் சால்வடாா்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
- எல் சால்வடாரின் பொருளாதாரம், அந்த நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பணியாற்றும் தொழிலாளா்கள் அனுப்பும் பணத்தை பெரும்பான்மையாகச் சாா்ந்துள்ளது.
- இந்த நிலையில், நாட்டின் மேம்படுத்த, மெய்நிகா் நாணயங்கள் உதவும் என்று அதிபா் நயீப் புகேலே கூறி வருகிறாா்.
- புயல் ஏற்பட இருப்பதை செயற்கைக்கோள் கண்டுபிடிப்பதற்கு முன்பே, காற்றுச் சுழல் மூலம் அதனைக் கண்டுபிடிப்பதற்கான புதிய தொழில்நுட்பத்தை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனா்.
- இதன் மூலம் புயலை முன்கூட்டியே கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் உயிா்சேதம் மற்றும் பொருள் சேதத்தை தவிா்க்க முடியும்.
- இதுவரை, தொலை உணா்வுசெயற்கை கோள்கள் மூலம் புயுல் உருவாவது முன்கூட்டியே கண்டறியப்பட்டு வந்தது. வெப்பமான கடலின் மேல் பரப்பில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பின்பே, செயற்கைகோள் படங்கள் மூலம் இவற்றை அறிய முடியும்.
- இந்த கண்டுபிடிப்புக்கும், புயல் தாக்குவதற்கும் அதிக இடைவெளி இருப்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.
- வடக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்தம் உருவாவதை செயற்கைகோள் படம்பிடிப்பதற்கு முன்பே, காற்றுச் சுழல் உருவாகிறது. இந்த புயல் சுழல்தான், காற்றழுத்த தாழ்வு பகுதியை உருவாக்கும் முக்கிய அம்சம்.
- இந்த காற்றுச்சுழலை கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை காரக்பூா் ஐஐடி விஞ்ஞானிகள் ஜியா ஆல்பா்ட், விஷ்ணுப்பிரியா சாகு மற்றும் பிரசாத் கே.பாஸ்கரன் ஆகியோா் கண்டறிந்துள்ளனா். இவா்களின் ஆய்வு திட்டத்துக்கு மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பதுறையின் கீழ் உள்ள பருவநிலை மாற்ற திட்டம் உதவியது.
- இந்த காற்றுச் சுழலை ஆய்வு செய்யும் தொழில்நுட்பம் மூலம் வடஇந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயல்களை செயற்கைகோள் கண்டறிவதற்கு முன்பே கண்டறிய முடியும். இந்த ஆய்வு கட்டுரை 'அட்மாஸ்பெரிக் ரிசா்ச்' என்ற இதழில் சமீபத்தில் வெளியானது.
- தமிழகத்தின் கோவையை பூர்வீகமாகக் கொண்ட சுபாஷினி அய்யர், நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் நாசாவின் திட்டத்தில் முக்கிய பங்காற்றி வருகிறார்.
- 1969 ஜூலை 20-ஆம் தேதி அமெரிக்காவின் அப்போலா 11 விண்கலம் நிலவில் தரையிறங்கியது. அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் முதல் மனிதராக நிலவில் கால் பதித்தார்.
- வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்காக "ஓரையன்” (Orion spacecrafi) என்ற விண்கலத்தை நாசா உருவாக்கியுள்ளது.
- நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கு “ஆர்ட்டெமிஸ்" (Artemis) என்று நாசா பெயரிட்டுள்ளது. ஆர்ட்டெமிஸ்-1 திட்டத்தில் வரும் நவம்பர் மாதம் ஓரையன் விண்கலம் 4.5 லட்சம் கி.மீ. தொலைவுக்கு அப்பால் ஆளில்லாமல் நிலவின் விண்வெளி பகுதிக்கு செலுத்தப்பட்டு, பூமிக்கு திரும்ப உள்ளது.
- இது 3 வார பயண திட்டமாகும். "எஸ்எல்எஸ்" (SL.S-Space Launch System) என்ற உலகின் அதிசக்திவாய்ந்த ராக்கெட்டில், ஓரையன் நிலவுக்கு செலுத்தப்பட உள்ளது. நாசா மற்றும் போயிங் நிறுவனம் இணைந்து இந்த ராக்கெட்டை தயாரிக்கிறது.
- 500 விநாடிகளில் 5.3 லட்சம் அடி பாயும் வகையில் ராக்கெட் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன்பிறகு ஆர்ட்டெமிஸ்-2 திட்டத்தில் வரும் 2023 அல்லது 2024-ஆம் ஆண்டில் ஓரையன் விண்கலம், விண்வெளி வீரர்களுடன் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்த திட்டத்தின் முதுகெலும்பாக கருதப்படும் ராக்கெட் தயாரிப்பு திட்டப் பணிகளை, போயிங் நிறுவன குழுவின் மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் சுபாஷினி அய்யர் வருகிறார்.
- தமிழகத்தில் முதல்முறையாக யானைகள் குறித்த விழிப்புணர்வு மையம் கோவையில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவை-மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில், வனத் துறை மரக்கிடங்கு வளாகத்தில், "வேழம் இயலியல்" விழிப்புணர்வு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
- இம்மையத்தில் பல்வேறு இன யானைகளின் விவரங்கள் தொகுக்கப்பட்டு, காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. யானைக்கு, தமிழில் உள்ள பெயர்களில் ஒன்றான "வேழம்” என்ற பெயரில் இம்மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
- இயற்கைக்கும் யானைக்குமான தொடர்பு, மனிதனுக்கும் யானைக்குமான தொடர்பு, மனிதர்களால் யானைகளுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், யானைகளை ஏன் பாதுகாக்க வேண்டும் என்பன குறித்த விளக்கங்கள் இந்த மையத்தில் இடம்பெற்றுள்ளன. வனத்தை பாதுகாப்பதிலும், வன வளத்தைப் பெருக்குவதிலும் யானைகளின் பங்கு குறிப்பிடத்தக்கது.
- கவிக்கோ அப்துல்ரகுமான் அறக்கட்டளை மற்றும் தமிழியக்கம் இணைந்து “கவிக்கோ விருது விழா” காணொலி கூட்டமாக ஜூன்05ந்தேதி நடைபெற்றது. இதில் ரூ.1 லட்சம் பொற்கிழியுடன் 2019-ஆம் ஆண்டுக்கான "கவிக்கோ விருது” பாவலர் அறிவுமதிக்கு வழங்கப்பட்டது.