Type Here to Get Search Results !

TNPSC 7th JUNE 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ராணுவ அமைப்புகளைக் கண்காணிக்கும் சா்வதேச ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகல்

  • அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட நாடுகள் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. கடந்த 2002-ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட விமானங்கள் சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள ராணுவக் கட்டமைப்புகளைக் கண்காணித்துள்ளன.
  • இதன் வாயிலாக ராணுவ விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி ரஷியா நடந்து கொண்டதாகக் கடந்த ஆண்டில் குற்றஞ்சாட்டிய அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிா்வாகம், அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது.
  • அதிபா் ஜோ பைடன் தலைமையிலான நிா்வாகம் இந்த ஒப்பந்தத்தில் மீண்டும் இணையும் என்று ரஷியா எதிா்பாா்த்தது. ஆனால், இந்த விவகாரத்தில் அமெரிக்கா எந்த முடிவும் எடுக்காத நிலையில், சா்வதேச ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ரஷியா அறிவித்தது. 
  • இதற்கான மசோதாவில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கையெழுத்திட்டாா். இதன் மூலம் ரஷியாவின் ராணுவ கட்டமைப்புகளை மற்ற நாடுகள் கண்காணிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்திய எம்எஸ்எம்இ துறையை ஊக்குவிக்க ரூ. 3,650 கோடி திட்டம் - உலக வங்கி ஒப்புதல்

  • கரோனா பொது முடக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையைப் புத்துயிரூட்ட இந்திய அரசு தேசிய அளவிலான திட்டத்தை அறிவித்துள்ளது.
  • இதற்கு உதவும் வகையில் ரூ. 3,650 கோடி திட்டத்துக்கு உலக வங்கியின் செயல் இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் இந்தியாவில் உள்ள 5,55,000 குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்த உதவும். 
  • அத்துடன், இந்தத் துறைக்கு புத்துயிா் அளிக்க மத்திய அரசு அறிவித்துள்ள ரூ. 24,820 கோடி கடனுதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ. 1,13,150 கோடி நிதியைத் திரட்டவும் உதவும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
  • இந்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உலக வங்கி அளிக்கும் இரண்டாவது உதவித் திட்டம் இது. ஏற்கெனவே, எம்எஸ்எம்இ அவசரகால உதவித் திட்டத்தின கீழ் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலையில் ரூ. 5,475 கோடி திட்டத்துக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்தது. 
  • அதன்மூலம், 50 லட்சம் குறு, சிறு நிறுவனங்கள் அரசிடமிருந்து கடனுதவி பெற்று, தொழிலை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
  • இப்போது புதிதாக அளித்திருக்கும் ஒப்புதல் மூலம், எம்எஸ்எம்இ துறையின் உற்பத்தியைப் பெருக்கவும், நிதி நிலையை மேம்படுத்துவதற்கென கடந்த ஓராண்டில் ரூ. 9,125 கோடி அளவில் உலக வங்கி ஒப்புதல் அளித்திருக்கிறது. 

18 வயதிற்கு மேல் அனைவருக்கும் இலவச தடுப்பூசி - மோடி

  • பாரத பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தற்போது உரையாற்றி வருகிறார். 
  • இதில் முக்கியமாக 18 வயதிற்கு மேல் அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்தப்படும் எனக் கூறியுள்ளார். அதாவது வரும் 21 ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் எனக் கூறியுள்ளார்.
  • மேலும், நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை தீர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் ஜூன் 21 ஆம் தேதி முதல் அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி இலவசமாக விநியோகிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
  • அதேசமயம் வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு தீபாவளி வரை இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா பொதுச்சபை தலைவராக மாலத்தீவுகள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாகித் தேர்வு

  • ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 75-வது தலைவராக துர்மெனிஸ்தான் நாட்டின் வோல்கன் போஸ்கிர் உள்ளார். இவரது பதவிக்காலத்திற்கு பிறகு புதிய தலைவரை தேர்வு செய்ய ஓட்டெடுப்பு நடந்தது. 
  • இதில் மாலத்தீவுகள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாகித், ஆப்கானிஸ்தான் வெளியுற அமைச்சர் ஜல்மய் ரசூல் என்பவரும் போட்டியிட்டனர். 
  • 193 உறுப்பினர்கள் கொண்ட பொதுச்சபையில் 191 உறுப்பினர்கள் ஓட்டளித்தனர். இதில் அப்துல்லா ஷாகித்திற்கு 143 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து ஐ.நா. பொதுச்சபையின் 76-வது தலைவராக தேர்வு பெற்றார். வரும் செப்டம்பரில் 76-வது பொதுச்சபை கூட்டம் நடக்கிறதுா ஷாகித் துவக்கி வைப்பார்.

அரசு, உள்ளாட்சி துறையில் உள்ள ஒப்பந்த பணியாளர்களுக்கு ரூ.160 கோடி ஊக்கத்தொகை - தமிழக அரசு ஒப்புதல்

  • கோவிட் தொடர்புடைய பணியில் ஈடுபட்டு வரும் அரசு மற்றும் உள்ளாட்சி துறைகளில் பணியாற்றி வருபவர்களுக்கு எப்ரல், மே, ஜூன் மாதத்திற்காக ஊக்கத்தொகை வழங்க ரூ.160 நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
  • கோவிட் தொடர்புடைய பணியில் கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் காலமுறை ஊதியத்துடனான பணியில் உள்ள அரசு பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க உத்தரவு வெளியிடப்பட்டது.
INS சந்தயாக் கப்பல் பணியிலிருந்து ஜூன் 04-ஆம் தேதி விடுவிப்பு
  • உள்நாட்டிலேயே வடிவமைத் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ்.சந்தயாக் கப்பல் (INS Sandhayak) கடந்த பிப்ரவரி 26-ந்தேதி இந்திய கடற்படையில் 1981 சேர்க்கப்பட்டது. 
  • கடல் மட்டம், கடல் வளம், மாசுபாடு மற்றும் ஹைட்ரோகிராபிக் ஆய்வுக்காக (Iydrographic survey ship) கடந்த 40 ஆண்டுகளாக மிகப்பெரும் பணிகளை இந்திய கடற்படைக்கு வழங்கியது. Chakra IAS academy சந்தயாக் வகை கப்பல்களில் முதல் கப்பலான இந்த கப்பல் பின்னர் இந்தியா கட்டிய பல்வேறு கப்பல்களுக்கு முன்னோடியாகவும் விளங்கி வந்தது.
  • ஹைட்ரோகிராபிக் ஆய்வுப்பணி நடவடிக்கைகளிலும் இந்த கப்பல் மட்டுமின்றி பல்வேறு முக்கிய தனது அளப்பரிய பங்களிப்பை வழங்கியிருக்கிறது. 
  • குறிப்பாக 1987-ஆம் ஆண்டு இலங்கையில் இந்திய அமைதிப் படைக்கு (Indian Peace Keeping Force) உதவியது. ஆபரேஷன் சரோங் (Operation Sarong), ஆபரேஷன் ரயின்போ (Operation Rainbow) போன்ற நடவடிக்கைகளிலும் பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகளிலும் சிறப்பான பங்களிப்பை இந்த கப்பல் வழங்கியுள்ளது.
சர்வதேச புக்கர் விருது 2021
  • At Night All Blood is Black என்றநாவலுக்காக டேவிட் டியோப் (David Diop) என்ற பிரெஞ்சு நாவலாசிரியர் 2021-ஆம் ஆண்டிற்கான சர்வதேச புக்கர் பரிசை (International Booker Prize 2021) பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் DAVID DIOP இந்த விருதை பெறும் முதல் பிரெஞ்சு நாவலாசிரியர் ஆவார்.
  • இந்த புத்தகம் அன்னா மஸ்கோவாகிஸ் (Anna Moschovakis) என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 
ஜூன் 03 - உலக மிதிவண்டி தினம்
  • உலக மிதிவண்டி நாள் ஆண்டுதோறும் ஜூன் 03-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. 2018 எப்ரலில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை இந்நாளை பன்னாட்டு நாளாக அறிவித்தது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel