Type Here to Get Search Results !

TNPSC 3rd JUNE 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

மஹிந்திரா நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்

  • நம் நாட்டில், 'சுயசார்பு இந்தியா' திட்டத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முன்னுரிமை வழங்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
  • இந்நிலையில், விமான நிலைய கண்காணிப்பு ரேடார் அமைப்புகளை 'மஹிந்திரா டெலிபோனிக்ஸ் இன்டகிரேடட் சிஸ்டம்ஸ் லிமிடட்' நிறுவனத்திடம் இருந்து வாங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • அதற்கான ஒப்பந்தம், ராணுவ அமைச்சகம் - மஹிந்திரா டெலிபோனிக்ஸ் நிறுவனம் இடையே கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்காக 11 கண்காணிப்பு ரேடார் அமைப்புகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
  • இதற்காக 323.47 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.வழக்கமான ரேடார் அமைப்புகளை விட, மஹிந்திரா டெலபோனிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த கண்காணிப்பு ரேடார் அமைப்புகள் மிகவும் துல்லியமானவை.

கேஎஸ்ஆர்டிசி பெயர் கேரளாவுக்கே சொந்தம்

  • 'கேஎஸ்ஆர்டிசி என்ற பெயரை இனிமேல் கேரள அரசு போக்குவரத்து கழகம்தான் பயன்படுத்த வேண்டும்,' என்று கர்நாடகாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் வணிக முத்திரை பதிவு துறை உத்தரவிட்டுள்ளது. 
  • கேரள அரசின், 'கேரளா ஸ்டேட் ரோடு டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன்,' என்ற பெயர் 'கேஎஸ்ஆர்டிசி' என்ற சுருக்கமாக அழைக்கப்படுகிறது. 
  • அனைத்து கேரள அரசு பஸ்களிலும் இந்த எழுத்துகள்தான் குறிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழக பஸ்களிலும் இதே எழுத்துகள்தான் பொறிக்கப்பட்டுள்ளது. இதனால், குழப்பம் ஏற்பட்டு வந்தது.
  • இதனால், கேரள போக்குவரத்து கழகத்தின் அப்போதைய நிர்வாக இயக்குனர் ஆன்டனி சாக்கோ, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் வணிக முத்திரை பதிவு துறையில் வழக்கு தொடர்ந்தார். 
  • கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், 'கேஎஸ்ஆர்டிசி என்ற எழுத்தை கேரள போக்குவரத்து கழகம்தான் பயன்படுத்த வேண்டும்,' என்று உத்தரவிடப்பட்டது. 

உள்நாட்டில் உருவாகும் 2வது தடுப்பூசி பயாலஜிக்கல் -இ நிறுவனத்திடம் 30 கோடி டோஸ் வாங்க ஒப்பந்தம்

  • ஐதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனத்திடம் இருந்து 30 கோடி டோஸ் தடுப்பூசியை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு செய்துள்ளது. 
  • இந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு ரூ.1,500 கோடியை முன்தொகையாக செலுத்த வேண்டும். அதன் முதல் கட்டமாக ரூ.40 கோடி முன்பணம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது. 

கலைஞர் பிறந்தநாள் - ஐந்து திட்டங்களைத் தொடங்கிவைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின்

  • மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
  • தென்சென்னையில் கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் ரூ.250 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.
  • திருவாரூரில் 10 வட்டாரத்தில் 16,000 டன் கொள்ளளவுடன், ரூ.30 கோடியில் நெல் சேமிப்பு கிடங்குகள் மற்றும் உலர்களங்கள் ஏற்படுத்தப்படும்.
  • மதுரையில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.70 கோடியில் கருணாநிதி நினைவு நூலகம் அமைக்கப்படும்.
  • திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் நகரப் பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை வழங்கப்படும்.
  • தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் இலக்கிய மாமணி விருது உருவாக்கப்படும். தமிழ் எழுத்தாளர்கள் மூவருக்கு ஆண்டுதோறும் ரூ. 5 லட்சம் ரொக்கப்பரிசுடன் விருது வழங்கப்படும்.
  • ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற விருதுகள், மாநில விருதுகளை பெறும் எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கப்படும்.
  • கொரோனா காலத்தில் களப்பணியாற்றிய இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1,17,184 காவல்துறையினருக்கு ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
  • தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும்
  • இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக விருது வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், "இலக்கிய மாமணி" என்ற விருது உருவாக்கப்பட்டு, தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும். இவ்விருதாளர்களுக்கு பாராட்டுப் பத்திரம் மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் ரொக்க வழங்கப்படும்
  • கரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையாக ரூபாய் 2,000 வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
  • கரோனா நிவாரண உதவியாக 14 மளிகைப் பொருட்களை ரேஷனில் வழங்கும் திட்டம் தமிழகத்தில் தொடங்கியது.
  • பூசாரிகள், அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்களுக்கு ரூபாய் 4,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழகத்தில் தொடங்கியது. 12,959 கோயில்களில் மாத சம்பளமின்றிப் பணியாற்றும் சுமார் 14,000 பேருக்கு ரூபாய் 4,000 நிதியுதவி வழங்கப்படும். ரூபாய் 4,000-த்துடன் 10 கிலோ அரிசி, 15 வகை மளிகைப் பொருட்களும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு வழங்கப்படுகிறது.
  • கரோனாவால் இறந்த முன்களப்பணியாளர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார். கரோனாவால் இறந்த மருத்துவர், மருத்துவப் பணியாளர், காவலர், நீதிபதிகள் குடும்பத்துக்கு ரூபாய் 25 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. கரோனாவால் இறந்த பத்திரிகையாளர் குடும்பத்துக்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
  • 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில் 10 பயனாளிக்கு அரசு பயன்களை வழங்கினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
அரசு அலுவலக கம்ப்யூட்டரில் புதிய தமிழ் எழுத்துரு பதிவு
  • தமிழகம் முழுவதும் அரசு துறை அலுவலகங்களில், கம்ப்யூட்டர்களில் வானவில், அவ்வையார் ஆகிய எழுத்துருக்கள் (பான்ட்) பயன்படுத்தி தமிழ் தட்டச்சு செய்யப்பட்டது.
  • தற்போது இதற்கு பதிலாக தமிழ் இணைய கல்விக் கழகம் (தமிழ் விர்சுவல் அகாடமி) உருவாக்கியுள்ள தமிழ் யுனிகோட் எழுத்துருக்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு தலைமை செயலர் இறையன்பு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். 
ஆசிரியர்களுக்கான தகுதி சான்று வாழ்நாள் சான்றாக மாற்றம்: மத்திய அரசு உத்தரவு
  • ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் 7 ஆண்டு சான்று, இனி வாழ்நாள் சான்றாக செல்லுபடியாகும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 
  • அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற விரும்புவோர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று 2009ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. 
  • முன்னதாக மத்திய அரசின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர்களுக்கும் மத்திய அரசு தேசிய அளவிலான தகுதித் தேர்வை நடத்தி ஆசிரியர்களை தெரிவு செய்து வந்தது. 
  • அதேபோல கடந்த 2010ம் ஆண்டில் இருந்து மற்ற மாநிலங்களிலும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தியே பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
சர்வதேச எனி விருது 2020
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் (renewable energy sources) மற்றும் எரிசக்தி சேமிப்பு பற்றிய ஆராய்ச்சிக்காக, 2020-ஆம் ஆண்டிற்கான இத்தாலி நாட்டின் "சர்வதேச எனி விருதிற்கு' (International Eni Award 2020 also called 'Energy Frontier award') விஞ்ஞானி & பேராசிரியர் C.N.R.ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
  • இந்த விருதானது எரிசக்தி ஆராய்ச்சிக்கான நோபல் பரிசாகவும் கருப்படுகிறது. இவர் 2013-ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்றுள்ளார். 
  • சர்.சி.வி.ராமன் மற்றும் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஆகியயோருக்கு பிறகு பாரத ரத்னா விருது பெறும் மூன்றாவது விஞ்ஞானி C.N.R.ராவ் ஆவார். ஒடிசாவில் உள்ள கோனார்க் சூரியன் கோயில், குஜராத்தில் உள்ள சர்தார்
கால்பந்து தரவரிசை இந்தியாவுக்கு 105-ம் இடம் 
  • பிபா வெளியிட்டுள்ள கால்பந்து தரவரிசை பட்டியலில் இந்திய கால்பந்து ஆடவர் அணி 105-வது இடத்தில் உள்ளது. அதே நேரம் மகளிர் பிரிவில் இந்திய அணி 57-வது இடத்தில் உள்ளது. 
  • பெல்ஜியம், பிரான்ஸ், பிரேசில், இங்கிலாந்து, போர்ச்சுக்கல் ஆகிய அணிகள் முறையே 1 முதல் 5 இடங்களில் உள்ளன.
சிஐஐ கூட்டமைப்பின் புதிய தலைவராக நரேந்திரன் தேர்வு 
  • இந்திய தொழிலக கூட்டமைப்பின் (CII-Confederation of Indian Industry) புதிய தலைவராக டி.வி.நரேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் டாடர் ஸ்டீல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநரும் ஆவார். 
முக்கிய துறைகளின் உற்பத்தி 56,1 % அதிகரிப்பு
  • முக்கிய 8 துறைகளின் உற்பத்தி கடந்த ஏப்ரல் மாதத்தில் 56.1 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது. 
  • நாட்டின் முக்கிய 8 துறைகளான, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி, சுத்திகரிப்பு தயாரிப்புகள், உரம், உருக்கு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் உற்பத்தி பொது முடக்கம் காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 37.9 சதவீதம் பின்னடைவைக் கண்டது. 
ஜூன் 01 - உலக பால் தினம் (World Milk Day) 
  • ஐ.நா., சார்பில் ஜூன் 01-ஆம் தேமில்லியன் தேதி உலக பால் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தியா, ஆண்டுக்கு, டன் பாலை, உற்பத்தி செய்து, உலகிலேயே, பால் உற்பத்தியில் முதலாவதாக திகழ்கிறது. 
  • தமிழகம், ஒரு நாளுக்கு, 206 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்து, இந்தியாவில் நான்காம் இடம் வகிக்கிறது. 
  • இந்தியாவில் பால், பால் பொருட்களுக்கான வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டவர் டாக்டர் வர்கீஸ் குரியன். இவர் பால் வளத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக வெண்மை புரட்சியின் தந்தை என அழைக்கப்படுகிறார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel