Type Here to Get Search Results !

TNPSC 29th JUNE 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்கிறார் சைலேந்திரபாபு

  • தமிழ்நாட்டில் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வந்தது. டிஜிபி பதவியை கைபற்ற கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில், அது தொடர்பான பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு அனுப்பியது.
  • இந்நிலையில், யுபிஎஸ்சியிலிருந்து வந்த பட்டியல் அடிப்படையில் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபுவை நியமித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கூடங்குளத்தில் 5, 6-வது அணு உலை கட்டும் பணி தொடக்கம்

  • திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 மற்றும் 6வது அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் பூமிபூஜையுடன் தொடங்கின. 
  • ரூ.49,621 கோடி மதிப்பில் அமைக்கப்படும் இந்த அணுஉலைகளில் 2027-28ல் மின்உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தமாக 6 அணு உலைகளிலும் மின்உற்பத்தி செய்யப்படும்போது, 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் நாட்டுக்கு கிடைக்கும்.

லக்னோவில் ரூ.45 கோடியில் அமையவுள்ள அம்பேத்கர் நினைவு இல்லத்துக்கு குடியரசுத் தலைவர் அடிக்கல்

  • லக்னோவில் உள்ள அய்ஷ்பாக் பகுதியில் சட்டமேதை அம்பேத்கரின் நினைவு இல்லத்தை அமைக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.
  • இதனைத் தொடர்ந்து, இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அம்பேத்கர் நினைவு இல்லத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
  • அய்ஷ்பாக்கில் சுமார் 5,493 சதுர அடியில் அம்பேத்கர் நினைவு இல்லம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக ரூ.45.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நினைவு இல்லத்தை ஒட்டி 750 பேர் அமரும் வசதி கொண்ட கலையரங்கமும் அமைக்கப்படவுள்ளது.
  • இதுதவிர நூலகம், ஆராய்ச்சி மையம், அருங்காட்சியகம் உள்ளிட்டவையும் இங்கு அமைக்கப்படுகின்றன. இந்த நினைவு இல்லத்தில் அம்பேத்கரின் 25 அடி சிலையும் நிறுவப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறுபான்மையினர் ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ்

  • தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக் காத்திடவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் , கடந்த 1989-ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13ம் நாள் அன்று அப்போதைய முதல்வர் கருணாநிதியால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது.
  • தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருவதாகவும், இந்த ஆணையத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் திருத்தியமைத்து, அதன் தலைவராக எஸ்.பீட்டர் அல்போன்ஸை நியமித்து உத்தரவிட்டுள்ளார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இணைய பாதுகாப்பு அட்டவணை - இந்தியாவுக்கு 10வது இடம்

  • இணையவெளி தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள உறுப்பு நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
  • 'சைபர் செக்யூரிட்டி' எனப்படும் சர்வதேச இணைய பாதுகாப்பு அட்டவணையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டு வருகிறது.
  • கடந்த 2019ல் வெளியிடப்பட்ட அட்டவணையில் இந்தியா 47வது இடத்தில் இருந்தது. தற்போது வெளியாகி இருக்கும் அட்டவணையில் 10வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.இதில் சீனா 33வது இடத்திலும் பாகிஸ்தான் 79வது இடத்திலும் உள்ளன.

ஜி-20 கூட்டமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாடு

  • இத்தாலியில் நடைபெறும் ஜி-20 கூட்டமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாட்டில், இந்தியா சாா்பில் மத்திய அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை பங்கேற்று பேசியதாவது:
  • உலகமயமாக்கலை பரவலாக்குவதுதான் இன்றைய உண்மையான பொருளாதார வளா்ச்சிக்கு அவசியமாகும். அனைவருக்கும் பிரதிபலன் கிடைக்கும் வகையில் சா்வதேச கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.
  • கரோனா தடுப்பூசியை சமமாக விநியோகம் செய்வதுதான் தற்போதைய உடனடி தேவையாக உள்ளது. தடுப்பூசிகள், மருந்துகள், பாதுகாப்பு கவச உடை, ஆக்சிஜன் என எதுவாக இருந்தாலும் கரோனா சவாலுக்கு சா்வதேச நாடுகளின் ஒத்துழைப்பே பதிலாகும் என்றாா் அவா்.
  • அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட ஜி-20 நாடுகளின் மாநாடு அக்டோபா் மாதம் இத்தாலியில் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை ஏற்க உள்ளது.

புகழ்பெற்ற இந்திய இலக்கிய நூல்கள் - எஸ்சிஓ அமைப்புக்கு பரிசளிப்பு

  • வெவ்வேறு இந்திய மொழிகளில் எழுதப்பட்ட 10 புகழ்பெற்ற நவீன இலக்கிய நூல்களை மொழிபெயா்த்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு (எஸ்சிஓ) இந்தியா பரிசளித்துள்ளது.
  • பெய்ஜிங்கில் உள்ள எஸ்சிஓ தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த நூல்களை எஸ்சிஓ பொதுச் செயலா் விளாதிமீா் நோரோவிடம் சீனாவுக்கான இந்திய தூதா் விக்ரம் மிஸ்ரி வழங்கினாா்.
  • ஜெயகாந்தனின் 'சிலநேரங்களில் சில மனிதா்கள்', தாராசங்கா் பந்தோபாத்யாய எழுதியுள்ள ஆரோக்ய நிகேதன் (வங்க மொழி), ராஜேந்திர சிங் பேடியின் 'ஏக் சதா் மைலி ஸி' (உருது), ரச்சகொண்டா விஸ்வநாத சாஸ்திரியின் 'இல்லு' (தெலுங்கு), நிா்மல் வா்மாவின் 'கவ்வே ஔா் காலா பானி' (ஹிந்தி), மனோஜ் தாஸ் எழுதி ஒடியா சிறுகதைகள், குா்தயாள் சிங்கின் 'மரீ த தீவா' (பஞ்சாபி), எஸ்.எல்.பைரப்பா எழுதிய 'பா்வ' (கன்னடம்), ஜாவோசந்த் மேக்னானி எழுதிய 'வேவிஷால்'(குஜராத்தி), சையத் அப்துல் மாலிக்கின் 'சூா்ய முகீா் ஸ்வப்னா' (அஸ்ஸாமி) ஆகிய நூல்களின் சீன, ரஷிய, ஆங்கில மொழிபெயா்ப்புகள் பரிசளிக்கப்பட்டுள்ளன.

கொரோனா 3வது அலையை தடுக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு - முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

  • மிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கை கொடுக்கின்ற வகையில் நிதி வழங்க வேண்டுமென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததற்கிணங்க ரூ.353 கோடி நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது.
  • பொது நிவாரண நிதியில் இருந்து, கொரோனா நோய் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் திரவ மருத்துவ ஆக்சிஜனை வாங்குவதற்காகவும், இந்த தொற்றின் மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் மாடர்னா தடுப்பூசிக்கு டி.சி.ஜி.ஐ அனுமதி
  • இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான டி.சி.ஜி.ஐ மும்பையைச் சேர்ந்த மருந்து நிறுவனமான சிப்லாவுக்கு நாட்டில் அவசரகால பயன்பாட்டிற்காக மாடர்னா கோவிட்-19 தடுப்பூசியை இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது.
  • இந்தியாவில் ஏற்கெனவே, கோவிஷீல்ட், கோவாக்சின் மற்றும் ஸ்பூட்னிக் V ஆகிய கொரோனா வைரஸ் தடுப்புசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே பழங்குடிகளுக்கு 100% தடுப்பூசி இலக்கை எட்டிய முதல் மாவட்டம்
  • மாவட்ட நிர்வாகத்தின் அசாத்திய முயற்சியால் தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பழங்குடிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 
  • இதன் மூலம் நாட்டிலேயே பழங்குடிகளுக்கு 100 சதவிகிதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம் என்ற நம்பிக்கையைப் பெற்றுள்ளது நீலகிரி.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel