உலக வில்வித்தை தரவரிசையில் தீபிகா குமாரி முதலிடம்
- உலகக் கோப்பை வில்வித்தை போட்டி பாரீஸ் நகரில் நடந்து வந்தது. கடைசி நாளான நடந்த பெண்களுக்கான ரீகர்வ் அணிகள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் தீபிகா குமாரி, அங்கிதா பகத், கோமாலிகா பாரி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 5-1 என்ற செட் கணக்கில் மெக்சிகோவை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.
- கலப்புப் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர தம்பதியான அதானு தாஸ்- தீபிகா குமாரி ஆகியோர் 5-3 என்ற கணக்கில், நெதர்லாந்தின் செப் வான் டென் பெர்க்-கேப்ரியலா கூட்டணியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வசப்படுத்தினர்.
- தொடர்ந்து பெண்களுக்கான ஒற்றையர் ரீகர்வ் பிரிவிலும் ரஷியாவின் எலினா ஒசிபோவாவை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தனதாக்கினார்.
- ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தீபிகா குமாரி ஒரே நாளில் 3 தங்கப் பதக்கத்தை சொந்தமாக்கி கவனத்தை ஈர்த்துள்ளார். இதன் மூலம் தீபிகா குமாரி ஒட்டுமொத்த உலக தரவரிசை பட்டியலில் கிடுகிடுவென புள்ளிகள் உயர்வை சந்தித்து முதலிடத்துக்கு முன்னேறினார்.
- ரஷ்ய வீராங்கனை எலெனா ஓசிபோவா, அமெரிக்க வீராங்கனை மெக்கன்சி பிரவுன் ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதல் முறையாக முதல் இடத்துக்கு முன்னேறியிருக்கிறார் தீபிகா குமாரி.
தேசிய தடகள சாம்பியன்ஷிப் கம்பு ஊன்றித் தாண்டுதலில் தமிழகத்துக்கு தங்கம்
- தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான கம்பு ஊன்றித் தாண்டுதலில் தமிழகத்தின் பரணிகா இளங்கோவன் முதலிடம் பிடித்தாா்.
- அவா் 3.90 மீட்ட தாண்டி தங்கம் வெல்ல, மத்திய பிரதேசத்தின் பபிதா படேல் (3.40 மீ), தமிழகத்தின் ரோஸி மீனா பால்ராஜ் (3.30 மீ) ஆகியோா் முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தனா்.
- மகளிருக்கான உயரம் தாண்டுதலில், கேரளத்தின் ஏஞ்செல் பி.தேவசியா (1.65 மீ) முதலிடமும், தமிழக வீராங்கனை ஜிஜி ஜாா்ஜ் ஸ்டீபன் (1.60 மீ) 2-ஆம் இடம் பிடித்தனா்.
- ஆடவா் 800 மீட்டா் ஓட்டத்தில் ஹரியாணாவின் கிருஷன் குமாா் 1 நிமிடம் 50.15 விநாடிகளில் இலக்கை எட்ட, உத்தரகண்டின் அனு குமாா் (1 நிமிடம் 51.05 விநாடி) 2-ஆம் இடமும், ஹரியாணாவின் மஞ்ஜித் சிங் (1 நிமிடம் 51.44 விநாடி) 3-ஆம் இடமும் பிடித்தனா். மகளிா் பிரிவில் ஹா்மிலன் 2 நிமிடம் 2.57 விநாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்ய, தில்லியின் சந்தா (2 நிமிடம் 3.36 விநாடி) 2-ஆம் இடம், நிமலி (2 நிமிடம் 5.69 விநாடி) 3-ஆம் இடமும் பிடித்தனா்.
உலகக்கோப்பை துப்பாக்கி சூடு - இந்தியாவுக்கு வெள்ளி
- உலகக் கோப்பை 10 மீட்டர் ""ஏர் பிஸ்டல்" கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த மனு பார்கர், சௌரப் சௌதிரி ஆகியோர் வெள்ளி பதக்கத்தை வென்றது. இறுதி சுற்றில் ரஷ்யாவை எதிர்கொண்ட இந்தியா 12 - 16 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தது.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் - இந்தியாவுக்கு வெண்கலம்
- குரோஷியாவின் ஒசிஜெக் நகரில் ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது, வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிா் 10 மீ. ஏா்பிஸ்டல் பிரிவு போட்டியில் இந்தியாவின் மானுபாக்கா், யஷஸ்வினி, ராஹி சா்னோபத் ஆகியோா் 16-12 என்ற புள்ளிக்கணக்கில் ஹங்கேரியின் வெரோனிகா, ஜாகோ, சாரா ரபேலை வீழ்த்தி வெண்கலம் வென்றனா்.
- ஆடவா் 10 மீ. ஏா்ரைபிள் பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சொபிய அணியிடம் 14-16 என்ற புள்ளிக்கணக்கில் ஈஸ்வரி பிரதாப், தீபக்குமாா், திவ்யான்ஷிங் பவாா் ஆகியோா் அடங்கிய இந்திய அணி தோல்வியுற்றது. தொடக்க நாளில் 10 மீ. ஏா்பிஸ்டல் பிரிவில் சௌரவ் சௌதரி வெண்கலம் வென்றிருந்தாா்.
பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.1.10 லட்சம் கோடி கடனுதவி - நிதியமைச்சர் அறிவிப்பு
- டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட துறைகளை மீட்டெடுக்க 8 வகையான பொருளாதார திட்டங்களை அவர்கள் அறிவித்தனர்.
- இதில், ஏற்கனவே உள்ள 4 திட்டங்கள் கூடுதல் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் எனவும், சுகாதாரத் துறைக்கு தனியாக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நலிவடைந்த துறைகளை மீட்க ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவித் திட்டத்தை அப்போது அவர் அறிவித்தார்.
- சுகாதாரத்துறைக்கு மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். புதிய திட்டத்தின் மூலம், சிறு வியாபாரிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும், சிறிய நிதி நிறுவனங்கள் மூலம், ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
- இந்த சிறிய கடன் உதவி திட்டங்களின் மூலம் 25 லட்சம் பேர் பயனடைவர் எனவும் அவர் தெரிவித்தார். ஊரடங்கால், சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய நிதியமைச்சர், சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையிலான சலுகைகளையும் அறிவித்தார்.
- விமான சேவை தொடங்கிய பின்னர் வெளிநாடுகளில் இருந்து, இந்தியாவுக்கு வரும் முதல் 5 லட்சம் சுற்றுலாப் பயணிகள் விசா கட்டணம் செலுத்தத் தேவையில்லை என நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
- இந்த ஆண்டு ஏழை மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்ய 3 ஆயிரத்து 869 கோடி ரூபாய் நிதி செலவிடப்படும் என்றும் கூறினார். விவசாயிகளுக்கு உர மானியமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
- வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக புதிதாக பணியாளர்களை நியமிக்கும் நிறுவனங்களுக்கு, `ஆத்ம நிர்பார் பாரத் ரோஸ்கார் யோஜனா' திட்டத்தின் கீழ், சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஊழியர்களின் மாத ஊதியம் ரூ.15,000 அல்லது அதற்கும் கீழாக இருந்தால் பணியாளர்கள் பங்களிப்பாக 12% பி.எஃப். தொகை , நிறுவனத்தின் பங்களிப்பாக 12% பி.எஃப். தொகை என 24% பி.எஃப். தொகை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கப்படும். இதற்கு பணியாளர்களின் எண்ணிக்கை 1,000-க்குள் இருக்க வேண்டியது அவசியம். ஒருவேளை, வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனத்தில் 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றினால், பணியாளர்கள் பங்களிப்பான 12% மட்டும் நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கப்படும். இந்தத் திட்டம் 30.06.2021-லிருந்து 31.03.2022-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலாத் துறைக்கு முக்கிய பங்கு உண்டு. கடந்த 2019-ம் ஆண்டில் 1.10 கோடி சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். இவர்களால் 31 பில்லியன் டாலர் அதாவது, சுமார் ரூ.2.30 லட்சம் கோடி அளவுக்கு வருமானம் கிடைத்துள்ளது. சர்வதேச சுற்றுலா பயணிகள் சராசரியாக 21 நாட்கள் இந்தியாவில் தங்குகிறார்கள். எனவே, சுற்றுலாத் துறையை உக்குவிக்கும் விதமாக, கொரோனா பிரச்னைகள் முடிந்து, இந்தியாவில் சுற்றுலா விசா வழங்கப்பட ஆரம்பிக்கும்போது முதல் ஐந்து லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படும்
அணு ஆயுதத்தை தாங்கி செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
- ஒடிசா மாநிலத்தின் பாலாசோர் அருகே உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தளத்தில் இருந்து காலை 10:55 மணிக்கு இந்த ஏவுகணை சோதனை நடைபெற்றது.
- இந்த அக்னி-பிரைம் ஏவுகணை அணு ஆயுதத்தை சுமந்துசென்று தாக்குதல் நடத்தும் திறன் பெற்றதாகும். இது அக்னி ஏவுகணைகளின் புதிய தலைமுறை மேம்பட்ட மாறுபாடாகும்.
- நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பயணித்து இந்த ஏவுகணை மிகத்துல்லியமாக இலக்கை அடைந்தது. அக்னி-பிரைம் ஏவுகணை 1,000 முதல் 2,000 கிலோ மீட்டருக்கு இடையிலான இலக்கைத் தாக்கும் திறன்கொண்டது''என்றனர்.
- 'அக்னி பி' எனப்படும் இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டிஆர்டிஓவுக்கு தனது டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகின் இரண்டாவது மிகப் பெரிய நீா்மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம்
- சீனாவின் தென்மேற்கே பாயும் யாங்ஸே ஆற்றின் துணை நதியான ஜின்ஷா ஆற்றின் குறுக்கே இந்த நீா்மின் நிலையத்துக்கான பய்ஹேட்டன் அணையை சீனா கட்டியுள்ளது. சுமாா் 954 அடி உயரம் கொண்ட இந்த அணையில், தலா 10 லட்சம் கிலோ வாட்ஸ் மின் உற்பத்தித் திறன் கொண்ட 16 அலகுகள் அமைக்கப்பட்டுள்ளன.
- முன்னதாக, யாங்ஸே ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்ட 2.25 கோடி கிலோ வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 'த்ரி கோா்ஜஸ்' அணையை சீனா கடந்த 2003-ஆம் ஆண்டு திறந்து செயல்பாட்டுக்கு கொண்டுவந்தது.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் - தங்கம் வென்றார் இந்தியாவின் ராகி சர்னோபத்
- குரோஷியாவின் ஓசிஜெக் நகரில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார் 30 வயதான இந்திய வீராங்கனை ராஹி சர்னோபத்.
- இதன் மூலம் தற்போது நடந்து வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் முதல் தங்கத்தை அவர் வென்றுள்ளார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளைச் சேர்ந்த "தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம்” ஜூன் 23, 24 ஆகிய தேதிகளில் தஜிகிஸ்தான் நாட்டு தலைநகர் துஷான்பேயில் நடைபெற்றது.
- இதில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (National Security Advisor) அஜீத் தோவல் கலந்து கொண்டார். கரோனாவுக்கு பிறகு உலக அளவில் பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், திட்டமிட்ட குற்றங்கள் அதிகரிப்பை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
- 2001-ல் அமைக்கப்பட்ட "ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் கூட்டமைப்பில்” (Shanghai Cooperation Organisation (SCO)) ரஷ்யா, சீனா, கிரிகிஸ்தான், கஜகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பேகிஸ்தான் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
- இந்தியாவும் பாகிஸ்தானும் 2017-ல் நிரந்தர உறுப்பு நாடுகளாகின. பயங்கரவாத அழிப்பு, பாதுகாப்பு ஆகியவற்றை மையப்படுத்தி இந்த 8 நாடுகளின் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.
அருணாசல் எல்லை அருகே புல்லட் ரயிலை அறிமுகம் செய்தது சீனா
- ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா, வரும் ஜூலை 1ஆம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தேதி தலைநகர் லாசாவில் இருந்து அருணாசல பிரதேச திபெத் எல்லையை ஒட்டியுள்ள நியிங்சி வரை 435.5 கி.மீ. தொலைவுக்கு புல்லட் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரயில் லாசா, ஷான், நியிங்சி உள்பட 9 ரயில் நிலையங்களில் நின்று செல்லும். பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்காக இந்த ரயில் இயக்கப்படும். இந்த ரயில் பாதையில் 47 சுரங்கப் பாதைகளும் 121 பாலங்களும் வருகின்றன.
- இதுதவிர பிரம்மபுத்ராநதி 16 இடங்களில் குறுக்கிடுகிறது. சீனாவில் பிரம்மபுத்ரா நதி "யார்லங் ஜங்கோ” என்று அழைக்கப்படுகிறது.