காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 அங்கன்வாடி மையங்களுக்கு சிறப்பு தகுதிச் சான்று
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் அங்கன்வாடிகளில் பணிபுரியும் பணியாளர்கள் தங்கள் மையங்களுக்கு வரும் குழந்தைகளுக்கு தரமான மற்றும்சத்தான உணவுகளை வழங்குவதுடன், அந்த மையங்களை மிகவும் சுத்தம், சுகாதாரமாக பராமரித்துள்ளனர்.
- இதனைத் தொடர்ந்து தேசிய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 25 அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்தது. அதில் 13 அங்கன்வாடி மையங்களுக்கு 'ஈட் ரைட் கேம்பஸ்' என்ற தகுதிச் சான்றை வழங்கியது.
- இவற்றில் கீழ்படப்பை அங்கன்வாடி மையத்துக்கு 5 ஸ்டார் அந்தஸ்தும், மற்ற அங்கன்வாடி மையங்களுக்கு 4 ஸ்டார் அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளன.
ஆந்திராவில் அரசுப் பணிகளுக்கான நேர்முக தேர்வுகளை ரத்து செய்து ஆணை
- ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தனது தேர்தல் வாக்குறுதியில், தான் ஆட்சிக்கு வந்ததும் ஆண்டுக்கு 2 லட்சம் அரசு வேலை வழங்குவதாக வாக்குறுதி அளித்தார்.
- அதன்படி வழங்காததால், எதிர்க்கட்சியினர் உட்பட பட்டதாரிகள், பெற்றோர் என பலத்தரப்பினர் ஜெகன் அரசை விமர்சிக்க தொடங்கினர். இதனால், சமீபத்தில் 10,200 அரசுப் பணியிடங்களை நிரப்புவதாக அறிவித்து, அதற்கான அட்டவணையையும் முதல்வர் வெளியிட்டார்.
- இந்நிலையில், குரூப் 1 வேலை முதற்கொண்டு அனைத்து அரசு பணிகளுக்கும் எழுத்து தேர்வுகள் மட்டுமே நடத்தப்படும் என்றும், நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படாது எனவும் புதிய அரசாணையை ஆந்திர அரசு வெளியிட்டுள்ளது.
ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர்
- இத்தாலி நாட்டின் ரோம் நகரில் நடைபெற்ற Sette Colli Trophy எனப்படும் நீச்சல் போட்டியில் 1:56.38 நிமிடத்தில் 200 மீட்டர் பந்தய தூரத்தை அடைந்தது மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வானார் இந்திய வீரர் சஜன் பிரகாஷ். இதன் மூலம் இந்தியாவில் இருந்து நீச்சல் பிரிவில் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.
உலகின் சிறந்த 100 மருத்துவக்கல்லூரிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 கல்லூரிகள் தேர்வு
- உலகின் மிக சிறந்த 100 மருத்துவக்கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த 6 மருத்துவ கல்லூரிகள் இடம்பெற்றுள்ளது.
- டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி 23 ஆவது இடத்தையும், புனே ராணுவ மருத்துவ கல்லூரி 34 ஆவது இடத்தையும், புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்லூரி 59 ஆவது இடத்தையும், வாரணாசியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவ கல்லூரி 72 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.
- தமிழகத்தை சேர்ந்த வேலூர் கிறிஸ்டியன் மருத்துவ கல்லூரி 49 ஆவது இடத்தையும், சென்னை மருத்துவ கல்லூரி 64 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.
- மேலும், இந்த தரவரிசையில் முதல் இடத்தை அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைக்கழகம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.