ஈரான் அதிபராகிறாா் இப்ராஹிம் ரய்சி
- ஈரானில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதிபா் தோதலில் தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட அந்த நாட்டின் தலைமை நீதிபதி இப்ராஹிம் ரய்சி அமோக வெற்றி பெற்றாா்.
- அந்த நாட்டின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியின் ஆதரவு பெற்றுள்ள அவா், ஈரான் வரலாற்றில் மிகக் குறைந்த விகிதத்தில் வாக்குகள் பதிவாகியுள்ள இந்தத் தோதலில் 1.78 கோடி வாக்குகள் பெற்று வெற்றி பெற்ாக முதல்கட்ட தோதல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
- ஈரான் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, பதவியேற்பதற்கு முன்னதாகவே அமெரிக்கவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட முதல் அதிபராக இப்ராஹிம் ரய்சி இருப்பாா்.
- கடந்த 1988-ஆம் ஆண்டில் ஏராளமான அரசியல் கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்ட விசாரணைக் குழுவில் அங்கம் வகித்ததால் அவருக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.4,000 நிவாரணம்
- கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் 4,000 ரூபாய் நிவாரண தொகை வழங்கும் திட்டம் தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கட்டமாக செயல்படுத்தப்பட்டது.
- இதைத் தொடர்ந்து, தமிழக முகாமிற்கு வெளியே இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தை, முதல் கட்டமாக ஐந்து இலங்கைத் தமிழர்களுக்கு 4,000 ரூபாய் வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
சிறு நகரங்களில் ஐடி, பிபிஓ வேலை உருவாக்கம் - தமிழ்நாடு 2-ம் இடம்
- STPI எனப்படும் இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா அமைப்பு இத்தகவலை தெரிவித்துள்ளது. சிறு நகரங்களிலும் ஐடி வேலை வாய்ப்பை உருவாக்க மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தின் கீழ் ஆந்திராவில் 12 ஆயிரத்து 234 பேருக்கு பணி வாய்ப்பு கிடைத்துள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
- தமிழ்நாட்டில் இத்திட்டம் மூலம் 9 ஆயிரத்து 401 பேருக்கு ஐடி மற்றும் BPO வேலை கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அண்மைக்காலமாக இந்தியாவில் சிறு நகரங்களில் ஐடி மற்றும் BPO துறைகளில் 40 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாகவும் இதில் பயன்பெற்றவர்களில் 38% பேர் பெண்கள் என்றும் STPI தெரிவித்துள்ளது
இந்தியாவில் வாழ்வதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியல்
- டெல்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுசூழல் மையம் வெளியிட்டுள்ள ஆய்வு ஒன்றில் வாழ்வதற்கு ஏற்ற 10 மாநில தலை நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. வாழ்க்கை தரம், பொருளாதார திறன், நிலைத்தன்மை, மக்களின் எண்ணம் என்ற 4 அளவுகோலை அடிப்படையாக கொண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
- வாழ்க்கை தரத்திற்கு 35 புள்ளிகள், பொருளாதார திறனுக்கு 15 புள்ளிகள், நிலைத்தன்மைக்கு 20 புள்ளிகள், மக்களின் எண்ணத்திற்கு 30 புள்ளிகள் என மொத்தம் 100 புள்ளிகளுக்கு அளவீடு எடுக்கப்பட்டு வாழ்வதற்கு ஏற்ற நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
- பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் அடிப்படையில் சராசரி கணக்கீட்டு கொடுக்கப்பட்ட விவரத்தின்படி, பெங்களூரு 66.7% பெற்று எளிதான வாழ்க்கைக்கான நகரங்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
- சென்னை 62.61% பெற்று 2ம் இடத்தை பிடித்துள்ளது.சிம்லா, புவனேஸ்வர், மும்பை, டெல்லி, போபால் ராய்ப்பூர் ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
- இதே போன்று தரமான வாழ்க்கைக்கான நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. மக்களின் எண்ணம் குறித்த பட்டியலில் டெல்லி கடைசி இடத்தை பிடித்துள்ளது.
சிறந்த சுகாதாரப்பணி - 2021 ஐரோப்பிய பல்கலைக்கழக சொசைட்டி விருதுக்கு தேர்வான ஷைலஜா டீச்சர்
- கேரளாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் கொரோனா சூழலில் சிறப்பாக பொது சுகாதாரத்துறை பணிகளை மேற்கொண்டமைக்காக 2021 ஆண்டுக்கான ஐரோப்பிய பல்கலைக்கழக ஓப்பன் சொசைட்டி விருத்துக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
- இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த ஆண்டு பரவ ஆரம்பித்தபோது முதன்முதலில் கொரோனா கண்டறியப்பட்ட மாநிலம் கேரளாதான்.
- அதிலிருந்து, கொரோனா தடுப்பு பணிகளை மிகச்சிறப்பாக மேற்கொண்டார், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர். அதற்காக, புகழ்மிக்க வோக் அட்டைப்படத்தில் இடம் பிடித்தது, ஐ.நாவின் பாராட்டு என புகழ்பெற்றார்.