ஐ.நா. பொதுச் செயலராக குட்டெரெஸ் மீண்டும் தோவு
- ஐ.நா. பொதுச் செயலா் பதவிக்கு தற்போது அந்தப் பொறுப்பை வகித்து வரும் அன்டோனியோ குட்டெரெஸ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளாா்.
- அவரது இரண்டாவது பதவிக் காலம் வரும் 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி தொடங்கி, 2026-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் 31-ஆம் தேதியுடன் நிறைவடையும் என்றாா் அவா்.
- அதனைத் தொடா்ந்து, ஐ.நா பொதுச் சபை அரங்கில் குட்டெரெஸுக்கு போஸ்கிா் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
மேகதாட்டு அணை தொடர்பான வழக்கு ஆய்வுக் குழுவை கலைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
- 'மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு அனுமதி கோரி கர்நாடக அரசு சார்பில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தில் அளிக்கப்பட்ட மனு நிலுவையில் உள்ளது.
- அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. எனவே, பசுமை தீர்ப்பாயத்தில் இந்த வழக்கை விசாரித்தால் குழப்பம் ஏற்படும். எனவே, இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும்'.
- இதை ஏற்றுக்கொண்ட அமர்வின் தலைவர், ஏற்கனவே மேகதாட்டு அணை தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை கலைத்து, வழக்கை முடித்து வைத்தார்.
கனடா உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியர்
- வட அமெரிக்க நாடான கனடாவில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக உள்ள ரோசாலி சில்பர்மேன் அபெல்லா ஓய்வுபெற உள்ளார்.
- கனடா உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஓன்டாரியோ மாகாண மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹ்மூத் ஜமாலை நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
- கனடா உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி என்ற பெருமையை ஜமால் பெற்றுள்ளார்.
மதிய உணவு திட்டத்துக்கு ஜி.எஸ்.டி.,யில் விலக்கு
- மதிய உணவு திட்டத்தின் கீழ், பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு உணவு வினியோகம் செய்யும் நிறுனங்களுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
- அரசு மானியம் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற்று, மதிய உணவு திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது.
- அரசு மானியம் மற்றும் நிறுவனங்களிடம் நன்கொடை பெற்று, பள்ளிகள், ஆரம்ப பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- மேலும், மத்திய மற்றும் மாநில கல்வி வாரியங்கள் நடத்தும் தேர்வுகள் மற்றும் கல்வி நிறுவன சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகளின் போது வசூலிக்கப்படும் கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
நிதி முறைகேடு புகாரில் சிக்கிய பிஎம்சி வங்கியை வாங்குகிறது சென்ட்ரம் - நிதி வங்கி தொடங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்
- நிதி முறைகேடுகளை தொடர்ந்து, இந்த வங்கியில் பணம் எடுக்க ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்தது. பின்னர் சிறிது தளர்த்தப்பட்டது.
- கடந்த 2020 மார்ச் 31ம் தேதிப்படி, பிஎம்சி வங்கியின் மொத்த டெபாசிட் 10,727.12 கோடியாகவும், மொத்த கடன் வழங்கல் 4,472.78 கோடியாகவும் உள்ளது.
- இந்த வங்கியை வாங்குவதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என, பிஎம்சி வங்கி கடந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
- இதற்கு விருப்பம் தெரிவித்து சென்ட்ரம் நிதிச்சேவைகள் நிறுவனம் கடந்த பிப்ரவரி 1ம் தேதி விண்ணப்பித்திருந்தது. இந்த சூழ்நிலையில், சென்ரம் நிதிச்சேவைகள் நிறுவனம், சிறு நிதி வங்கி தொடங்க, ரிசர்வ் வங்கி கொள்கை அடிப்படையில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியா - ஐரோப்பிய யூனியன் கடற்படை கூட்டுப் பயிற்சி
- கடற்கொள்ளை தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்தியப் போா்க் கப்பல் ஐஎன்எஸ் த்ரிகண்ட், ஐரோப்பிய யூனியன் நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் ஆகியவற்றின் கடற்படையுடன் இணைந்து வெள்ளிக்கிழமை கூட்டு போா்ப் பயிற்சியை தொடங்கியது. இந்த பயிற்சி ஏடன் வளைகுடா பகுதியில் இருநாள்கள் நடக்கிறது. இதில் 4 நாடுகளைச் சோந்த 5 போா்க்கப்பல்கள் பங்கேற்றுள்ளன.
- இத்தாலி கடற்படை கப்பல் ஐடிஎஸ் கராபினெரி, ஸ்பெயின் கடற்படை கப்பல் இஎஸ்பிஎஸ் நவாரா, பிரான்ஸ் கடற்படையின் 2 போா்க் கப்பல்கள், எப்எஸ் டானெரி மற்றும் எப்எஸ் சா்கஃப் ஆகியவை இந்த பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன.
- இதில் வான் பாதுகாப்பு, நீா்மூழ்கி கப்பல்களை தாக்கும் பயிற்சி உட்பட பல்வேறு போா்ப் பயிற்சிகள், மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள், கடல்சாா் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடா்பான பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
- இதன் மூலம் இந்த 4 நாட்டு கடற்படைகள் ஒருங்கிணைந்த படையாக செயல்பட்டு அவற்றின் போா்த் திறன், கடல் பகுதியில் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவை மேம்படுத்தப்படும்.
- ஐரோப்பிய யூனியன் கடற்படையும், இந்திய கடற்படையும் தற்போது ஒன்றிணைந்து கடற்கொள்ளை தடுப்பு பணிகள் உட்பட பல பணிகளில் ஈடுபட்டுள்ளன. ஐ.நா உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செல்லும் கப்பல்களுக்கு இவை பாதுகாப்பு அளிக்கின்றன. இவற்றின் மூலம் இந்திய கடற்படை மற்றும் ஐரோப்பிய யூனியன் கடற்படை இடையிலான ஒருங்கிணைப்பு அதிகரித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் பச்சை பூஞ்சை நோய் பாதிப்பு
- மத்திய பிரதேசத்தில் கரோனாவிலிருந்து மீண்டவருக்கு என்பது நாட்டிலேயே முதல் முறையாக பச்சை பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பச்சை "அஸ்பெர்ஜில்லோசிஸ்" தொற்று ஆகும். மிகவும் அரிதாக பூஞ்சை ஏற்படும் இந்த நோய் நுரையீரலையும் தாக்கும்.
- கருப்பு பூஞ்சை முகம், மூக்கு, கண் அல்லது மூளையை பாதிக்கிறது. இதனால் பார்வையிழப்பு ஏற்படவும், நுரையீரலுக்கு பரவவும் வாய்ப்பு உள்ளது. பூஞ்சை நோய எந்தெந்த உடல் பாகத்தை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை தனித்தனியாக அடையாளம் காணவே வண்ணங்களின் பெயரால் இந்த நோய் அழைக்கப்படுகிறது.
ஆர்க்டிக் பனிப்பாறை உருக தொடங்கியது
- புவி வெப்பமடைவதால் ஆர்க்டிக் பனிப்பாறை உருகத் தொடங்கி விட்டதாக, இது குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளும் குழுவின் தலைவர் மார்கஸ் ரெக்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- ஆர்க்டிக் பிராந்தியத்தின் வடதுருவத்தில் 20 நாடுகளைச் சேர்ந்த 300 விஞ்ஞானிகள் பேராசிரியர் ரெக்ஸ் தலைமையில் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
அமெரிக்க பல்கலை.தலைவராக நியமிக்கப்பட்ட ராஜகோபால் ஈச்சம்பாடி
- அமெரிக்காவில் உள்ள 131 ஆண்டுகள் பழமையானதும் உலகப் புகழ்பெற்றதுமான இந்த தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தலைவராக பொறுப்பேற்கும் முதல் இந்தியர் ராஜகோபால் ஈச்சம்பாடி என்பதால் தமிழர்களுக்கும், தமிழகத்துக்கும் மட்டுமின்றி இந்திய துணை கண்டத்துக்கே உலகளாவிய பெருமையை அவர் பெற்றுத் தந்துள்ளார்.