Type Here to Get Search Results !

TNPSC 14th JUNE 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

பாலைவனமாக்கலை தடுப்பபதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் 14 வது மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி
 • UNCCD என்று அழைக்கப்படும் United Nations Convention to Combat Desertification, அதாவது பாலைவனமாக்கலை தடுப்பபதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் 14 வது மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி இதனை தெரிவித்தார்.
 • பாலைவனமாக்கல், நிலச் சீரழிவு மற்றும் வறட்சி குறித்த ஐநாவின் உயர் மட்ட கூட்டத்தில், "நில சீரழிவு நாங்கள் பாதையில் இருக்கிறோம். 2030க்குள் இருபத்தி ஆறு மில்லியன் ஹெக்டேர் சீரழிந்த நிலத்தை மீட்டெடுப்பதை நோக்கி இந்தியா (India) நடவடிக்கை எடுத்து வருகிறது" என பிரதமர் மோடி ( PM Modi) குறிப்பிட்டார்.
 • மனிதர்களின் செயல்களால் பூமிக்கு ஏற்படும் சேதத்தைக் கட்டுப்படுத்துவது ஒட்டுமொத்த மனிதக்குலத்தின் பொறுப்பு என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, வருங்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான பூமியை விட்டுச் செல்வது என்பது நமது கடமை என்றும் பிரதமர் மோடி பேசினார்.
 • "இந்தியாவில், கடந்த பத்து ஆண்டுகளில், சுமார் சுமார் 30 லட்சம் ஹெக்டேர் வனப்பரப்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் ஒருங்கிணைந்த வனப்பகுதி நாட்டின் மொத்த பரப்பளவில் நான்கில் ஒரு பங்காக அதிகரித்துள்ளது" என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.
 • நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் அறிவியல்பூர்வமான அணுகுமுறையை மேம்படுத்த இந்தியாவில் (India) ஒரு ஆய்வு மையம் அமைக்கப்படுவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். 
 • இந்த உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை நிலம் தான் எனக் கூறிய பிரதமர் மோடி, எனவே நில வளங்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
 • குஜராத்தின் ரான் ஆப் கட்சில் உள்ள பன்னி பிராந்தியத்தில், புல்வெளிகளை வளர்ப்பதன் மூலம் நில மறுசீரமைப்பு எவ்வாறு செய்யப்படுகிறது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். 
 • இதனால் "நில சீரழிவு தடுக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், கால்நடை வளர்ப்பை ஊக்குவித்து, காலநடை வலர்ப்பவர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துகிறது என்றார்.

பணவீக்கம் அதிகபட்சமாக 12.94% ஆக உயர்வு

 • நாட்டின் ஒட்டுமொத்த விலைக் குறியீட்டெண் (டபிள்யூபிஐ) அடிப்படையிலான பணவீக்கம் மே மாதத்தில் மிக அதிகபட்சமாக 12.94 சதவீதமாக உயர்ந்துள்ளது.
 • இதற்கு முன்பு கடந்த ஏப்ரலில் மிக அதிகபட்சமாக 10.49 சதவீதமாக உயர்ந்திருந்தது. இதுவே கடந்த 11 ஆண்டுகளில் மிக அதிகபட்ச உயர்வாகும்.
 • கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக உற்பத்தி பொருள்களின் விலை உயர்ந்ததே இதற்கு முக்கிய காரணம். கடந்த ஆண்டு மே மாதம் பணவீக்கம் மைனஸ் 3.37 சதவீதமாக இருந்தது.

ஒரு மணி நேரத்தில் 73,000 கோடி இழப்பு - ஆசியாவின் 2வது பணக்காரர் அந்தஸ்தை இழக்கும் அதானி

 • புளூம்பெர்க் பில்லியனர்ஸ் குறியீட்டின்படி, ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி 2வது இடத்தில் உள்ளார். 
 • இவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு 5.64 லட்சம் கோடியாகவும், அதானி குழுமங்களின் மொத்த சந்தை மூலதனம் 9.5 லட்சம் கோடியாகவும் உள்ளது. 
 • இந்நிலையில், அதானியின் கிரீன் எனர்ஜி, டிரான்ஸ்மிஷன், எரிவாயு உள்ளிட்ட அதானி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள அல்புலா இன்வெஸ்ட்மென்ட் பண்ட், கிரெஸ்டா பண்ட், ஏபிஎம்எஸ் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் ஆகிய வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் 43,500 கோடி மதிப்பிலான கணக்குகளை தேசிய பிணையம் வைப்பக நிறுவனம் முடக்கியது.
 • இதனால் தேசிய பங்கு சந்தையில் முந்தைய நாள் வர்த்தக முடிவில் 1601.60 ஆக இருந்த பங்கின் விலை நேற்று 91 குறைந்து, 1,510.35 ஆக சரிந்தது. இதனால் அதானி சொத்து மதிப்பில் ரூ.73,250 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர், ஆசியாவின் 2வது பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம் - தமிழக அரசு அறிவிப்பு

 • தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் எம்பி ஏ.கே.எஸ்.விஜயன் நியமிக்கப்படுகிறார். அவர் பதவியேற்கும் நாளில் இருந்து ஒரு ஆண்டுக்கு அந்த பதவியில் இருப்பார்.
 • இவ்வாறு அவர் கூறியுள்ளார்.ஏ.கே.எஸ்.விஜயன் (59), திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் 1999, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் 3 முறை நாகப்பட்டினம் தொகுதியில் திமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு எம்பியாக வெற்றி பெற்றார். 

மே மாதத்திற்கான சிறந்த வீரராக வங்கதேசத்தின் முஷ்பிகுர் ரஹீம் தேர்வு

 • மே மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக வங்கதேச அணியின் முஷ்பிகுர் ரஹீமை தேர்வு செய்துள்ளது சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி). 
 • மே மாதத்தில் இலங்கை அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடி இருந்தார். 
 • அதில் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 84 ரன்களும், இரண்டாவது போட்டியில் 125 ரன்களையும் அவர் எடுத்திருந்தார். மூன்று போட்டிகளையும் சேர்த்து மொத்தமாக 237 ரன்கள் குவித்திருந்தார் அவர்.
 • அதன் மூலம் வங்கதேச அணி இலங்கைக்கு எதிராக முதல்முறை ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், மே மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 
 • இதே போல மகளிர் கிரிக்கெட்டில் ஸ்காட்லாந்து நாட்டு கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் கேத்ரின் ப்ரயஸ் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel