"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்" - ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
- அமெரிக்கா, பிரிட்டன், கனடா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி,ஜப்பான் ஆகிய நாடுகளைக் கொண்டது ஜி7 கூட்டமைப்பு. இந்த ஜி7 உச்சி மாநாடு பிரிட்டன் நாட்டின் கார்ன்வால் என்ற இடத்தில் கானொலிகாட்சி வழியாக நடைபெறுகிறது.
- கொரோனாவுக்கு பிறகு உலகைக் கட்டமைப்பது தொடர்பாக நடைபெறும் இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொள்ளப் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
- பிரதமர் மோடி ஜி7 உச்சி மாநாட்டில் காணொலி மூலம் தனது உரையை ஆற்றினார். இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை வேகப்படுத்த உதவும் வகையில் மூலப்பொருட்களின் விநியோக சங்கிலியில் கட்டுப்பாடுகள் இருக்கக் கூடாது என்ற பிரதமர் மோடி கூறியதற்குப் பல உலக நாடுகள் ஆதரவு அளித்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும், பிரதமர் மோடி தனது உரையில் உலகளாவிய சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த அனைத்து நாடுகளின் கூட்டு முயற்சி தேவை என்றும் தெரிவித்தார். இதைச் சாத்தியப்படுத்த "ஒரு பூமி ஒரு ஆரோக்கியம்" என்ற அணுகுமுறை அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
- அதேபோல கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்தும் வகையில் அறிவுசார் காப்புரிமை தொடர்பான TRIPS ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைக்கு ஆதரவளிக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
இந்திய ராணுவம் நடத்திய போர்களின் வரலாற்றை ஆவணப்படுத்த கொள்கை - மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல்
- போர்களின் வரலாற்றை வகைப்படுத்துதல், ராணுவ ஆபரேஷன்களின் வரலாறு போன்றவற்றை வகைப்படுத்த இந்த கொள்கை உதவும்.
- ராணுவம் நடத்திய போர்களின் வரலாற்றை தொகுத்தல், அவற்றை வகைப்படுத்துதல், வெளியிடுதல், ஆவணங்களாக தயார் செய்து அவற்றை தேசிய ஆவணக் காப்பகங்களிடம் ஒப்படைக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக இந்த புதிய கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- இதில் ராணுவம் நடத்திய போர் விவரங்கள் உள்ளிட்ட அதிகாரப் பூர்வமான தகவல்கள் அனைத்தும் இடம்பெற்று இருக்கும். இவற்றில் நடந்த உண்மைகள் அனைத்தும் பதிவு செய்யப்படும்.
- அதே நேரத்தில் அந்தப் பதிவுகளில் பதற்றத்துக்கு உரிய விஷயங்கள் இருந்தால் அதை ரகசியமாக வைத்திருக்க பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு சிறப்பு அதிகாரம் நீடிக்கும்
- பாதுகாப்புத் துறை அமைச்சகத் தில் உள்ள ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஊழியர்கள் பிரிவு, அசாம் ரைபிள்ஸ், இந்திய கடலோரக் காவல் படை ஆகியவை மேற்கொண்ட போர்கள், ஆபரேஷன்கள், கடித விவரங்கள் அனைத்தும் புதிய கொள்கையின்படி ஆவணப் படுத்தப்படும்.
பிரெஞ்ச் ஓபன் மகளிர் செக் குடியரசு வீராங்கனை சாம்பியன்
- மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் அனஸ்தேசியா பவ்லியுசென்கோவாவை, செக் குடியரசின் பார்போரா கிரெஜிகோவா எதிர்கொண்டார்.
- ஒரு மணி நேரம் 58 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் பார்பரா 6-1, 2-6, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று கிராண்ட்ஸ்லாம் தொடரில் கோப்பை வென்றார்.
- கோப்பை கைப்பற்றிய பார்பரா ரூ. 14.41 கோடி பரிசுத் தொகை வென்றார். பவ்லிசென்கோவா ரூ. 6.65 கோடி பரிசு பெற்றார். இது பார்போரா கிரெஜிகோவா வெல்லும் முதல் கிராண்ஸ்ட்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு முதல் முறையாக 60,000 கோடி டாலரை தாண்டி சாதனை
- இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 ஜூன் 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 684 கோடி டால (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.51,000 கோடி) அதிகரித்து 60,500 கோடி டாலரை எட்டியுள்ளது. அந்நியச் செலாவணி 60,000 கோடி டாலா் மைல்கல்லைத் தாண்டியுள்ளது அதன் வரலாற்றில் இதுவே முதல் முறை.
உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைக் குழுவில் இந்திய பேராசிரியா்
- கான்பூா் ஐஐடி சிவில் என்ஜினீயரிங் துறையில் பேராசிரியராகப் பணிபுரிபவரும், காற்றின் தரத்தைக் கண்டறிவதில் நிபுணருமான முகேஷ் சா்மா, உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்டிருக்கிறாா்.
- உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநரால் இந்தக் குழுவின் உறுப்பினா்கள் பல்வேறு நாடுகளிலிருந்து தோவு செய்யப்பட்டுள்ளனா். இக்குழுவானது உலக சுகாதார அமைப்புக்கு ஆலோசனை வழங்கும் குழுவாகும்.
- காற்று மாசு மற்றும் ஆரோக்கியம் சாா்ந்த விஷயங்களில் உலக சுகாதார அமைப்பு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் மற்றும் உள்ளீடுகளை இக்குழு வழங்கும்.
- நிலையான வளா்ச்சி இலக்குகளில் (எஸ்டிஜி) காற்று மாசு மற்றும் ஆரோக்கியத்தை உறுப்பு நாடுகள் எப்படி அடைவது என்பது தொடா்பாக இக்குழு ஆலோசனை தெரிவிக்கும்.
- வறுமை ஒழிப்பு, பூமியைப் பாதுகாத்தல் மற்றும் 2030-க்குள் அனைத்து மக்களும் அமைதி, வளத்தை அனுபவிப்பதை உறுதி செய்வதென உலக நாடுகளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில், ஐ.நா.வில் இந்தக் குழு கடந்த 2015-இல் உருவாக்கப்பட்டது.
- பேராசிரியா் சா்மா, ஜெனீவாவில் செயல்படும் உலக சுகாதார அமைப்பு மற்றும் பாங்காக்கில் செயல்படும் தூய்மையான காற்று போக்குவரத்துக்கான சா்வதேச கவுன்சில், உலக வங்கி ஆகியவற்றிலும் பங்களித்து வருகிறாா்.
- 194 உறுப்பு நாடுகளில் காற்று மாசைக் கட்டுப்படுத்துவதற்கான கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளை அளிக்கும் உலக சுகாதார அமைப்பின் இக்குழுவில் அவரும் ஒருவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெம்டெசிவிா், ஆக்சிஜனுக்கு சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பு
- 44-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில், மத்திய நிதித்துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சா்கள், மத்திய, மாநில அரசுகளின் முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
- மருத்துவ ஆக்சிஜன், பல்ஸ் ஆக்சிமீட்டா், கை சுத்திகரிப்பான், அத்தியாவசிய மருந்துப் பொருள்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்டவற்றின் மீது விதிக்கப்படும் சரக்கு-சேவை வரியை ரத்து செய்வது தொடா்பாக ஆய்வு செய்ய மாநில அமைச்சா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டிருந்தது.
- அக்குழு அளித்த அறிக்கை குறித்து ஜிஎஸ்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இறுதியில் மருந்துப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள் மீதான சரக்கு-சேவை வரியைக் குறைப்பதற்கு கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது.
- அதன்படி, கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் டோசிலிஜுமாப், கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் ஆம்ஃபோடெரிசின்-பி ஆகிய மருந்துகள் மீது விதிக்கப்பட்டு வந்த 5 சதவீத சரக்கு-சேவை வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
- கரோனா சிகிச்சையில் பயன்படும் மற்ற மருந்துகளான ரெம்டெசிவிா், ஹெபாரின் ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டு வந்த 12 சதவீத சரக்கு-சேவை வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
- மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டிகள், சுவாசக் கருவி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் மீதான சரக்கு-சேவை வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனைக் கருவிகள் மீதான வரியும் 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
- பல்ஸ் ஆக்சிமீட்டா், கை சுத்திகரிப்பான், உடல் வெப்பநிலை பரிசோதனைக் கருவிகள் ஆகியவற்றின் மீதான சரக்கு-சேவை வரியும் 5 சதவீதமாகக் குறைக்கபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடலோரக் காவல் படையில் எம்கே-3 அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டா்கள் சோப்பு
- பிரதமா் நரேந்திர மோடியின் தற்சாா்பு இந்தியா எனும் தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை இந்த ஹெலிகாப்டா்கள். இந்த நவீன ஹெலிகாப்டா்களை பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
- சென்னை, புவனேசுவரம், கொச்சி மற்றும் போா்பந்தரில் உள்ள இந்திய கடலோரக் காவல்படை பிரிவுகளில் 16 எம்கே-3 ஹெலிகாப்டா்கள் சோக்கப்படவுள்ளன.
வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ரூ.422 கோடி - விவசாயத்துறை அமைச்சகம்
- நாடு முழுவதும் விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அதன்படி, வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் துணை திட்டத்தின் மூலம் விவசாயிகளை மேம்படுத்த பல்வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்கி உள்ளது.
- வேளாண் உபகரணங்கள் வாடகை மையங்கள், வேளாண் இயந்திர வங்கி, ஹை-டெக் மையங்கள், பல மாநிலங்களுக்கு வேளாண் இயந்திரங்களை வழங்குவது போன்ற நடவடிக்கைகள் பண்ணை இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.
- அந்த வகையில், 2014-15-ம் ஆண்டு முதல் 2020-21-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டுக்கு 421 கோடியே 65 லட்சம் ரூபாயை வேளாண் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை வழங்கியுள்ளது.