Type Here to Get Search Results !

TNPSC 10th JUNE 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

50 கோடி ஃபைசர் வேக்சின் உலக நாடுகளுக்கு இலவசமாக அளிக்கும் அமெரிக்கா - பிடன் அறிவிப்பு

  • 50 கோடி ஃபைசர் வேக்சின்களை உலக நாடுகளுக்கு அமெரிக்கா இலவசமாக அளிக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அறிவித்துள்ளார்.
  • கனடா போன்ற அண்டை நாடுகளுக்கும் வேக்சின் அளித்துள்ளோம். ஏற்கனவே நம்மிடம் இருக்கும் 8 கோடி வேக்சின்களை ஜூன் மாத இறுதிக்குள் உலக நாடுகளுக்கு அளிக்கும் முடிவை எடுத்து இருக்கிறோம். 
  • இந்த நிலையில் 50 கோடி ஃபைசர் வேக்சின்களை உலக நாடுகளுக்கு அமெரிக்கா இலவசமாக வழங்க உள்ளது. ஃபைசர் நிறுவனத்திடம் வாங்கி, அமெரிக்கா உலக நாடுகளுக்கு கொடுக்கும்.
24 ஆயிரம் ஆண்டுக்கு பின் உயிர்த்தெழுந்த நுண் விலங்கு
  • ரஷ்யாவின் புஷ்சினோ அறிவியல் மையத்தைச் சேர்ந்த, ஸ்டாஸ் மலாவின் தலைமையிலான குழு, சைபீரியாவில், உறைநிலையில் காணப்படும் அலசியா ஆற்றில், ஆறு ஆண்டுகளாக ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. 
  • இந்த ஆய்வில், 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பனியில் உறைந்து போன, 'ரோட்டிபர்' எனப்படும், ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான புழு போன்ற, மிக நுண்ணிய விலங்கை, விஞ்ஞானிகள் கண்டெடுத்துள்ளனர்.
  • உறைபனியில், பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது உண்டு. ஆனால் நரம்பு மண்டலம், மூளை உள்ளிட்ட அனைத்து அவையங்களுடன் மிக நுண்ணிய விலங்கான, ரோட்டிபர் கண்டு பிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதன் முறை. 
  • நீரில் காணப்படும் இந்த வகை ரோடிபர், 23 ஆயிரத்து, 960 முதல், 24 ஆயிரத்து, 485 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய நுண்விலங்கு என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. உறைபனியில் இருந்து ரோட்டிபரை எடுத்து, உணவு கொடுத்ததும், அது இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. 
  • ரோட்டிபர், பெண் துணையின்றி, இனப் பெருக்கம் செய்யும் வகையைச் சேர்ந்தது. அதனால், உடனே, குட்டிகளை ஈனத் துவங்கி விட்டது. இந்த கண்டுபிடிப்பு, விலங்கியல் அறிவியல் ஆய்வில் புதிய சகாப்தத்தை தோற்றுவித்து உள்ளது. 
ஐ.நா., பொது சபை தலைவரின் முதன்மை செயலராக, நாகராஜ் நாயுடு குமார்
  • ஐ.நா., பொதுச் சபை தலைவர் பதவிக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், மாலத்தீவு வெளியுறவு துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித் வெற்றி பெற்றார். 
  • அவருக்கு, 143 ஓட்டுகளும், எதிர்த்து போட்டியிட்ட ஆப்கன் வெளியுறவு துறை அமைச்சர் சல்மாய் ரசூலுக்கு, 48 ஓட்டுகளும் கிடைத்தன. 
  • இந்நிலையில் அப்துல்லா ஷாஹித், தன் சிறப்பு துாதராக, ஐ.நா.,வுக்கான மாலத்தீவு துாதர், தில்மீசா உசேன், முதன்மை செயலராக, இந்திய துணை துாதர் கே.நாகராஜ் நாயுடு ஆகியோரை நியமித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel