Type Here to Get Search Results !

2021ம் ஆண்டில் உலகின் மிகச் சிறந்த வாழக்கூடிய 10 நகரங்கள் / THE 10 BEST LIVABLE CITIES IN THE WORLD BY 2021

 

1. ஆக்லாந்து, நியூசிலாந்து
  • நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து உலகளவில் மிகவும் வாழக்கூடிய நகரங்களில் முதல் இடத்தில் உள்ளதாக தி எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் (ஈஐயு) அறிவித்துள்ளது. 
  • இது நியூசிலாந்து நாட்டின் மிகப்பெரிய நகரமாகும். இங்கு 1.4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். ஆக்லாந்து உலகில் மிகுந்த பொலினீசிய மக்கள் வாழும் நகரமாகும்.
2. ஒசாகா, ஜப்பான்
  • ஒசாகா ஜப்பான் நாட்டில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது ஜப்பானின் நான்கு பிரதான தீவுகளில் பெரிய தீவான ஹோன்சு தீவில் யோடோ ஆறு கடலில் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. 
  • ஜப்பானிய மொழியில் ஒசாகா என்றால் 'பெரிய குன்று' என அர்த்தம். இது ஜப்பான் நாட்டின் தொழில் தலைநகரமாகக் கருதப்படுகிறது.
3. அடிலெய்ட், ஆஸ்திரேலியா
  • 2019ம் ஆண்டில் உலகளாவிய வாழக்கூடிய நகரங்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் பத்தாவது இடத்தில் இருந்த நிலையில் தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 
  • அடிலெய்ட் ஆஸ்திரேலிய மாநிலமான தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரம். இது ஆஸ்திரேலியாவின் ஐந்தாவது பெரிய நகரம். மேலும் இங்கு தான் அடிலெய்ட் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
4. வெலிங்டன், நியூசிலாந்து
  • வெலிங்டன் நியூசிலாந்தின் தலைநகரமாகும். இது நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும். வாடேர்லூ யுத்தத்தில் வெற்றி பெற்ற ஆர்தர் வேல்லேச்லே என்பவரை சிறப்பிக்கும் விதமாக இந்த பெயர் இந்நகருக்கு வழங்கபட்டுள்ளது. 
  • முன்னதாக Mercer நிறுவனம் நடத்திய 2007 ஆண்டுக்கான ஆய்வில், இந்நகரம் உலக அளவில் 12வது சிறந்த வாழ்க்கை தரம் கொண்ட நகரமாக இருந்தது.
5. டோக்கியோ (ஜப்பான்)
  • ஜப்பான் நாட்டின் 47 மாநிலங்களில் ஒன்று டோக்கியோ, மேலும் ஜப்பானின் தலைநகரமுமாகும். இது மக்கள் தொகை அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நகரமாகும். இதனால் டோக்கியோ, ஜப்பானிய அரசு மற்றும் அரசரின் தலைமையிடமாகும். 
  • இந்நகரத்தின் மொத்த மக்கள் தொகை 12 மில்லியன் ஆகும். நாட்டின் மக்கள் தொகையில் 10% பேர் இங்கு வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
6. பெர்த் (ஆஸ்திரேலியா)
  • மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரம் மற்றும் ஆஸ்திரேலியாவின் நான்காவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான பெர்த். 2021ம் ஆண்டு மிகவும் வாழக்கூடிய நகரங்கள் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.
7. சூரிச் (சுவிட்சர்லாந்து)
  • சூரிக் (Zürich) என்பது சுவிட்சர்லாந்து நாட்டின் மிகப்பெரிய நகரம். இதுவே சுவிட்சர்லாந்தின் பண்பாட்டுத் தலைநகராகவும் கருதப்படுகிறது. 2006ம் ஆண்டு முதல் 2008 வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளில் இதுவே உலகின் வாழ்க்கைத் தரம் மிகுந்த நாடாகக் கண்டறிப்பட்டது. 
  • தற்போது உலகின் வாழக்கூடிய நகரங்களின் பட்டியலில் ஏழாவது இடத்தைப் பிடித்தது.
8. ஜெனீவா, சுவிட்சர்லாந்து
  • ஜெனீவா (Geneva) மக்கள் தொகையின் படி சுவிட்சர்லாந்து நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய நகரமாகும். சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு பேசும் பகுதியின் மிகப்பெரிய நகரம் ஆகும். ஜெனீவா ஏரியிலிருந்து ரோன் ஆறு பாய்கிற இடத்தில் அமைந்த இந்நகரத்தில லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர்
9. மெல்போர்ன் (ஆஸ்திரேலியா)
  • மெல்பேர்ண் (Melbourne) ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். மேலும் இது ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும். 
  • 2006ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்நகரத்தின் மக்கள் தொகை 3.8 மில்லியன் ஆகும். 2019 பட்டியலில், மெல்போர்ன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது, இப்போது ஜெனீவாவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது.
10. பிரிஸ்பேன் (ஆஸ்திரேலியா)
  • பிரிஸ்பேன் ஆஸ்திரேலியாவின் குயின்சுலாந்து மாநிலத்தின் தலைநகரும். அம்மாநிலத்தின் மக்கள் அடர்த்தி கூடிய நகரமும், ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய மக்கள்தொகை கொண்ட நகரமும் பிரிஸ்பேன் ஆகும்.
உலகின் குறைந்தப்பட்சம் வாழக்கூடிய 10 நகரங்களின் பட்டியல்
  • டமாஸ்கஸ் (சிரியா)
  • லாகோஸ் (நைஜீரியா)
  • போர்ட் மோரெஸ்பி (பப்புவா நியூ கினியா)
  • டாக்கா (பங்களாதேஷ்)
  • அல்ஜியர்ஸ் (அல்ஜீரியா)
  • திரிப்போலி (லிபியா)
  • கராச்சி (பாகிஸ்தான்)
  • ஹராரே (ஜிம்பாப்வே)
  • டூவாலா (கேமரூன்)
  • கராகஸ் வெனிசுலா)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel