- சிட்னியின் பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் (ஐஇபி), உலகின் அமைதியான நாடுகளின் வரிசைப் பட்டியலைக் ஜூன் 18ஆம் தேதியன்று வெளியிட்டுள்ளது. மொத்தம் 163 நாடுகள் உள்ள இந்த பட்டியலில், இந்தியா 135வது இடத்தில் உள்ளது.
- தெற்காசியாவின் 7 நாடுகளில் 5வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. கடந்த 2020 ஆண்டின் அமைதியான நாடுகளின் பட்டியலில் 139வது இடத்தை பிடித்திருந்த இந்தியா இம்முறை 4 புள்ளிகள் முன்னேறி 135வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்நாட்டு மோதல்களை களையெடுப்பதில் 21 நாடுகள் முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. இதில் மிகப்பெரிய முன்னேற்றங்கள் இந்தியா மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் அமைதியான நாடுகளின் வரிசைப் பட்டியல் / LIST OF WORLD MOST PEACEFUL COUNTRY
June 20, 2021
0
Tags