Type Here to Get Search Results !

சர்வதேச ஒலிம்பிக் தினம் / INTERNATIONAL OLYMPICS DAY

 

TAMIL
  • உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டி என்றால் அது ஒலிம்பிக் தான். சர்வதேச விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது பல விளையாட்டு வீரர்களுக்கு பெருங்கனவு. அப்படி பல சர்வதேச நாடுகளை சேர்ந்த வீரர்களால் போற்றப்படும் ஒலிம்பிக் போட்டியின் தினம்.
இந்த நாள் ஏன் சர்வதேச ஒலிம்பிக் தினம் என கொண்டாடப்படுகிறது?
  • ஒலிம்பிக் விளையாட்டின் ஐடியாவை அனைவரிடத்திலும் கொண்டு செல்லும் நோக்கத்தில் இந்த நாள் காலண்டரில் மார்க் செய்யப்பட்டுள்ளது. 
  • கடந்த 1948 முதல் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதே நாளில் கடந்த 1894இல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் வரலாறு
  • பழங்காலத்தில் ஒலிம்பிக் போட்டியை ஒரு விளையாட்டு திருவிழாவாக கருதி கொண்டாடியுள்ளனர் கிரீஸ் நாட்டு மக்கள். அங்கு அமைந்துள்ள ஒலிம்பியாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த போட்டி ஆரம்ப காலங்களில் நடத்தப்பட்டுள்ளன. 
  • கிரேக்க நகரமான ஒலிம்பியாவில் கி.மு.776-ம் ஆண்டு முதல் கி.மு.393-ம் ஆண்டு வரை, ஜீயஸ் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வந்தன.
  • ரோமாபுரியைச் சேர்ந்த தியோடோஷயஸ் ஆட்சிக்கு வந்ததும், இந்த போட்டி தடை செய்யப்பட்டது. இந்தப் போட்டியானது, 1894-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி நவீன வடிவம் பெற்று, ஒலிம்பிக் போட்டியாக மாறியது. 
  • இதனை ஒருங்கிணைத்தவர், பியரிடி கூபர்டின், இவரே ஒலிம்பிக் போட்டியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இதையடுத்து நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
  • பெரும்பாலும் தடகள விளையாட்டுகளை முன்வைத்து ஆதிகால ஒலிம்பிக் நடத்தப்பட்டுள்ளது. அதோடு மல்யுத்தம் மாதிரியான விளையாட்டுகளும் நடைபெற்று உள்ளது. 
  • இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் விளையாட்டை வழிபட்டனர். இப்படியாக தூவப்பட்ட விதை இன்று விருட்சமாக 'மாடர்ன் டே' ஒலிம்பிக் விளையாட்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. அண்மைய காலமாக சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வருகின்றன.
  • 1896இல் கிரீஸ் நாட்டின் ஏதன்ஸில் மாடர்ன் டே ஒலிம்பிக்கின் முதலாவது ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதனை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒருங்கிணைத்தது. 
  • இதுவரை 31 முறை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளன. 32வது முறையாக டோக்கியோவில் வரும் ஜூலை 23ஆம் தேதி முதல் ஒலிம்பிக் நடைபெற உள்ளது. ஒலிம்பிக் கோடை காலம் மற்றும் குளிர் காலம் என இரண்டு வெர்ஷனாக நடைபெற்று வருகிறது.
ஒலிம்பிக்கில் இந்தியா
  • இந்தியா கடந்த 1900ம் ஆண்டு முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்று வருகிறது. இதுவரை 9 தங்கம், 8 வெள்ளி, 12 வெண்கலம் என 28 ஒலிம்பிக் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. 
  • 2000க்கு பிறகு இந்தியா ஒரே ஒரு தங்கம்தான் வென்றுள்ளது. அதை வென்றவர் அபினவ் பிந்த்ரா. அதே நேரத்தில் இந்தியா ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விளையாட்டு பிரிவுகளில் ஒலிம்பிக்கில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டு வருகிறது. 
  • டோக்கியோ ஒலிம்பிக்கில் 16 விளையாட்டு பிரிவுகளில் இந்தியா பங்கேற்க உள்ளது. சுமார் 103 வீரர்கள் இந்த 16 பிரிவுகளில் பங்கேற்க உள்ளனர்.
2022 ஒலிம்பிக் தினத்தின் தீம் - ஒன்றாக, அமைதியான உலகத்திற்காக
  • இந்த ஆண்டு தீம் 'ஒன்றாக, அமைதியான உலகத்திற்காக', இது சமூக ஊடக ஹேஷ்டேக்குகளுடன் #MoveForPeace மற்றும் #OlympicDay. 2022 ஆம் ஆண்டு உலக ஒலிம்பிக் தினம், மக்களை அமைதியுடன் ஒன்றிணைப்பதன் மூலம், சிறந்த உலகை உருவாக்க விளையாட்டின் சக்தியின் மீது கவனம் செலுத்தும்.
ENGLISH
  • If the world's premier sport is the Olympics. Winning a medal at the Olympics, an international sporting event, is a dream come true for many athletes. It is the day of the Olympic Games, which is celebrated by athletes from many international countries.
Why is this day celebrated as International Olympic Day?
  • This day is marked on the calendar with the aim of bringing the idea of ​​the Olympic Games to everyone. This day has been celebrated since 1948. The International Olympic Committee was formed on the same day in 1894 in Paris, France.
Olympic history
  • In ancient times, the Greek people considered the Olympics to be a sporting event. The competition is held once every four years in Olympia, where it is located. In the Greek city of Olympia, from 776 BC to 393 BC, traditional sports were held every year in honor of the god Zeus.
  • When Theodosius of Romapuri came to power, the contest was banned. The Games took on a modern form on June 23, 1894, becoming the Olympic Games. It was co-ordinated by Pierre Cooper, who has been called the father of the Olympics. The Olympics are subsequently held every four years.
  • The primitive Olympics have often been preceded by athletics. There are also wrestling games. The players participating in this match adored the game. The sown seed is being celebrated today as the 'Modern Day' Olympic Games. More than 200 countries have recently competed in the Olympics.
  • In 1896 the first Olympic Games of the Modern Day Olympics were held in Athens, Greece. It was coordinated by the International Olympic Committee.
  • The Olympics have been held 31 times so far. The 32nd edition of the Olympic Games will be held in Tokyo on July 23. The Olympics are being held in two versions, summer and winter.
India in the Olympics
  • India has been participating in the Olympics since 1900. So far, India has won 28 Olympic medals, including 9 gold, 8 silver and 12 bronze.
  • India has won only one gold since 2000. The winner was Abhinav Bindra. At the same time India has been making a habit of participating in the Olympics in different sports every time.
  • India is set to compete in 16 sports at the Tokyo Olympics. About 103 players are expected to take part in these 16 divisions.
The theme of 2022 Olympic Day - Together, for a peaceful world
  • This year's theme is 'Together, for a Peaceful World', with social media hashtags #MoveForPeace and #OlympicDay. World Olympic Day 2022 will focus on the power of sport to create a better world by uniting people in peace.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel