2019 - 2020 ஆண்டுக்கான GER (Gross Enrolment Ratio) / உயர் கல்வியில் மாணவர் சேர்க்க குறியீடு 2019 - 2020
TNPSCSHOUTERSJune 17, 2021
0
2019-2020 ஆண்டுக்கான GER (Gross enrolment ratio) அதாவது உயர் கல்வியில் மாணவர் சேர்க்க குறியீடு. அதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே 3-ம் இடம் பிடித்திருக்கிறது.
முதலிடத்தை சிக்கிம், 2-ம் இடத்தை சண்டிகர் ஆகிய மாநிலங்கள் பெற்றுள்ளன. அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது.
அதை எப்படிக் கணக்கிடுகிறார்கள் ?
ஒரு மாநிலத்தில் 18-23 வயதுக்குள் இருக்கும் மக்கள் தொகையில், எவ்வளவு பேர் உயர்கல்வி, அதாவது பள்ளி முடித்து கல்லூரி படிப்புகளில் சேர்ந்திருக்கிறார்கள் என்ற கணக்கு தான் இந்த GER. இதே GER இந்தியா முழுமைக்கும் கணக்கிடப்படுகிறது.
சமீபத்தில் All India Survey on Higher Education முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் தான் GER தகவல் இடம்பெற்றிருந்தது. 2019-2020 ஆண்டுக்கான இந்தியாவின் GER 27.1% ஆக இருப்பதாக சர்வே முடிவுகள் கூறுகின்றனர். அதாவது 18-23 வயதுள்ள இந்திய இளைஞர்கள் 3.85கோடி பேர், உயர்கல்விக்குச் சென்றிருக்கின்றனர்.
தமிழ்நாட்டின் GER, ஒட்டு மொத்த இந்தியாவின் GER அளவை விடக் கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகமாக இருக்கிறது. 2019-2020-ல் தமிழ்நாட்டின் GER 51.4%. இதுவே 2012-2013 கால கட்டத்தில் 42%.
கிட்டத்தட்ட 10% உயர்ந்திருக்கிறது. அதாவது, 2019-2020-ல் 18-23 வயதுள்ள இளைஞர்கள் 35.2 லட்சம் பேர் உயர் கல்வியில் சேர்ந்திருக்கிறார்கள்.
புதிய கல்விக் கொள்கையில் மத்திய அரசு 2035-ம் ஆண்டுக்குள்ள இந்தியாவின் GER-ஐ 50% ஆக உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருக்கிறது.
ஆனால் அந்த இலக்கை 2021-லேயே தமிழ்நாடு அடைந்திருக்கிறது. இது தான் இந்த சர்வே ரிப்போர்ட் வெளியானதிலிருந்து பெருமிதமாகப் பேசப்படுகிறது.
புதிய கல்விக் கொள்கை மட்டுமல்ல, இதற்கு முன்னர் இந்தியாவிலிருந்த கல்விக் கொள்கைகளும் GER-ஐ அதிகரிக்க வேண்டும் என்கிற இலக்கைக் கொண்டு தான் செயல்பட்டிருக்கிறது. இந்த GER குறியீடு கல்வி வளர்ச்சியின் முக்கிய கூராகப் பார்க்கப்படுகிறது.