முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவை தீர்மானம்
- கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, மே 10ம் தேதி முதல் 2 வாரங்களுக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுகவின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
- அதன்படி, தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் கையிருப்பை உறுதி செய்ய வேண்டும். அரசு தனியார் நிறுவனங்கள் மூலம் ஆக்ஸிஜன் உற்பத்தியைத் தொடங்க ஊக்குவிக்கப்படும்.
- எக்காரணம் கொண்டும் மருத்துவ ஆக்ஸிஜன் வீணாக அனுமதிக்கக் கூடாது. மருதுவ ஆக்ஸிஜன் முறையாகப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
- அனைத்து மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். உடங்கை முழுமையாக அமல்படுத்த உறுதி செய்வதை உறுதி செய்ய வேண்டும். ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்.
- கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதில், மருத்துவத் துறை, வருவாய்த் துறை காவல் துறை, நகர்புறத் துறை, ஊரக வளர்ச்சி துறைகள் இணைந்து செயல்பட வேண்டும் என்பன மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்திய ராணுவ வரலாற்றில் 'காலாட் படை போலீஸ்' பிரிவில் 83 பெண்கள் முதல் முறை சேர்ப்பு
- இந்திய ராணுவத்தில் காலாட் படை, விமானப்படை, கடற்படை ஆகிய 3 பிரிவுகள் உள்ளன. இந்தப் படைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரிவுகளில் மட்டும் 1990-களில் தொடங்கி பெண்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
- எனினும், களப்பணிகளில் அவர்களை ஈடுபடுத்தாமல் 'அதிகாரி நிலை' பதவிகளில் மட்டுமே பெண்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் நம் நாட்டின் முப்படைகளில் பணியாற்றுகின்றனர்.
- இந்நிலையில், வரலாற்றில் முதன்முறையாக இந்திய ராணுவத்தின் அதிகாரி நிலை பதவி அல்லாத 'காலாட்படை போலீஸ்' பிரிவில் 83 பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- 61 வாரங் \கள் கடுமையான பயிற்சிக்கு பிறகு பெங்களூருவில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர்கள் முறைப்படி ராணுவத்தில் இணைக்கப்பட்டனர்.
- இனி ஆண்டுக்கு 52 பெண்கள் வீதம் மொத்தம் 800 பேரை 'காலாட்படை போலீஸ்' பிரிவில் இணைக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு ரூ.8,923 கோடி நிதி
- 2021-22 நிதி ஆண்டுக்கான ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீட்டில் முதல் தொகுப்பாக இந்த தொகைவழங்கப்பட்டுள்ளது. இந்த நிதிஉதவி, கரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டிய முக்கிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட உள்ளதாக நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
- கரோனா பரவலை கட்டுப்படுத்த 15-வது நிதிக் குழு பரிந்துரையின்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல் தொகுப்பு நிதி ஒதுக்கீடு ஜூன் மாதம் வழங்கப்படுவதாக இருந்தது. தற்போது கரோனா பரவல் சூழல் மிக மோசமாக இருப்பதால் அதை கட்டுப்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீட்டை ஒரு மாதம் முன்பாகவே வழங்க நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
- மேலும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீடு வழங்குவதில் 15-வது நிதிக் குழு வகுத்திருந்த நிபந்தனைகளிலும் தளர்வுகளை கொண்டுவர நிதி அமைச்சகம் முன்வந்துள்ளது.
- மத்திய அரசு வழங்கியுள்ள நிதியில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்துக்கு ரூ.1,441.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு ரூ.533.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- மகாராஷ்டிரா, பிஹார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக சிக்கிம் மாநிலத்துக்கு ரூ.6.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அசாம் முதல்வரானார் ஹிமந்த பிஸ்வா சர்மா
- அசாமில், மொத்தமுள்ள, 126 இடங்களில், ஆளும் பா.ஜ., 60 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள், 15 இடங்களிலும் வென்றன. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு, பா.ஜ.,வுக்கு கிடைத்தது. பதவியேற்பதில் இழுபறிவடகிழக்கு மாநிலங்களில் காங்., அல்லாத கட்சி, தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சி அமைப்பது இதுவே முதல் முறை.
- கவுஹாத்தியில் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. இதில், முதல்வர் பதவிக்கு ஹிமந்த பிஸ்வா சர்மாவின் பெயரை, சர்பானந்தா சோனவால் பரிந்துரைத்தார். ஒருமனதாக அவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக, மத்திய வேளாண் அமைச்சரும், கட்சியின் மத்திய பார்வையாளருமான நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
பூமி நோக்கி கட்டுப்பாடின்றி திரும்பிய சீன ராக்கெட்டின் 18 டன் பாகம் இந்திய பெருங்கடலில் விழுந்தது
- விண்வெளி மையத்தை அமைக்கும் முயற்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக கடந்த மாதம் 29ம் தேதி ஹைனனில் உள்ள வின் சாங் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் 5பி ராக்கெட் மூலம் விண்கலத்தை விண்வெளிக்கு சீனா ஏவியது.
- விண்கலத்தை சுமந்து சென்ற ராக்கெட் தன்னுடைய பணியை முடித்ததும் கட்டுப்பாட்டை இழந்தது. இது பூமியை நோக்கி திரும்பியது. ராக்கெட்டின் 18 டன் எடை கொண்ட பெரிய பாகம் பூமியில் எந்த இடத்தில் விழும் என்பதை அமெரிக்காவால் கூட கணிக்க முடியவில்லை.
- இந்நிலையில், சீன நேரப்படி ராக்கெட்டின் 18 டன் பெரிய பாகம் மாலத்தீவு அருகே இந்திய பெருங்கடலில் விழுந்ததாக சீனா உறுதி செய்தது. இதனை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய விண்வெளி அமைப்புகளும் உறுதிபடுத்தின.
சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம்
- நோய்த் தொற்று: தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் நாளொன்றுக்கு நோய்த் தொற்றின் அளவு 7 ஆயிரத்தைத் தாண்டி வருகிறது.
- தினமும் 50-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் பணியில் பெருநகர சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
- இந்த நிலையில், முதன்மைச் செயலாளா் அந்தஸ்திலான அதிகாரியான ககன்தீப் சிங் பேடி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.