Type Here to Get Search Results !

TNPSC 20th MAY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்தது

  • புவி வெப்பமயமாதல் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இயற்கையை மனிதர்களாகிய நாம் மாற்றுவதால் பருவமழை தப்பி பெய்வது, கடல் உள் வாங்குவது என பல்வேறு மாறக்கூடாத மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
  • இவை எல்லாம் பெரும் ஆபத்தில் கொண்டு போய் முடியும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர். ஆனாலும் உலகம் முழுவதும் இயற்கைக்கு எதிரான செயல்பாடுகள் தொடர்கிறது. அதன் வெளிப்பாடு தான் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்திருப்பது.
  • ஏ-76 என்ற பெயர் கொண்ட உலகின் மிகப்பெரிய பனிப்பாறை வெடல் கடற்பகுதிக்குள் உடைந்து விழுந்து மிதந்து கொண்டிருப்பதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த பனிப்பாறை இன்னும் சில நாட்களில் துண்டு துண்டாக உடையும் என தெரிகிறது.
  • இந்த பாறை 4,320 சதுர கி.மீ., 175 கி.மீ., நீலமும், 25 கி.மீ., அகலமும் கொண்டது. அதாவது டெல்லி நகரை விட மூன்று மடங்கு பெரியது. இதனால் கடலின் நீரின் மட்டம் உயர்ந்து, பல கரையோர நகரம் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
  • உலக வெப்பமயமாதலால் கடந்தாண்டு உடைந்து விழுந்த ஏ23ஏ என்ற பனிப்பாறையைவிட ஏ76 பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள முதல்வராக பினராயி விஜயன் தொடர்ந்து 2-வது முறையாக பதவியேற்பு

  • கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற எளிய விழாவில் மீண்டும் முதல்வராக பினராயி விஜயன் பதவியேற்றார். அவருக்கு கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
  • முதல்வர் பினராயி விஜயனை தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றனர். புதிய அமைச்சரவையில் முதலமைச்சர் பினராயி விஜயனைத் தவிர மற்ற 20 பேரும் புதுமுகங்கள் ஆவர்.
  • சுகாதாரத்துறை அமைச்சராக பத்திரிகையாளர் வீணா ஜார்ஜ் பதவியேற்றார். எளிய முறையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கொரோனா தடுப்பு விதிமகளை பின்பற்றி 350 பேர் மட்டுமே பங்கேற்றனர். விழாவில் தமிழக அரசு சார்பில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டார்.

தமிழகத்தில் ஆக்சிஜன் விநியோகத்தை கண்காணிக்க தாரேஸ் அகமது தலைமையில் குழு அமைப்பு

  • தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்துக்கான ஆக்சிஜன் அளவை மத்திய அரசு அண்மையில் அதிகரித்துள்ளது.
  • அதேசமயம், தேசிய அளவிலும், மாநில அளவிலும் சிறப்பு பணிக் குழுக்களை அமைத்து ஆக்சிஜன் விநியோகத்தை கண்காணிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • அதன்படி, தமிழகத்துக்கான சிறப்பு பணிக் குழு, தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநர் தாரேஸ் அகமது தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. அவரே ஆக்சிஜன் ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 
  • இக்குழுவில் மத்திய அரசு சார்பில், ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் செயலர் ஹுகும் சிங் மீனாவும், பெட்ரோலியம் மற்றும் வெடி பொருட்கள் பாதுகாப்பு நிறுவன அதிகாரி சஞ்சனா சர்மாவும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • சென்னை மருத்துவக் கல்லூரியின் மயக்கவியல் பிரிவு தலைவர் இக்குழுவின் உறுப்பினர் செயலராகவும், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மயக்கவியல் பிரிவு தலைவர் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா சிகிச்சைக்கான மருந்து பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை நீக்கியது உலக சுகாதார நிறுவனம்

  • கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தும் மருந்துகளில் ரெம்டெசிவிர் முக்கிய இடம் வகித்தது.
  • இரண்டாம் அலை பரவலில் மூச்சுத்திணறலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டு வந்தது. இந்த மருந்தால் பெரிதாக எந்த பயனும் இல்லை அதற்கு பதிலாக ஸ்டீராய்டு மருந்துகளை பயன்படுத்தலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறி வந்த போதிலும் ரெம்டெசிவிர் மருந்துக்கான தேவை அதிகரித்து வந்தது.
  • இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு தற்போது கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தினை நிக்கியுள்ளது.

கருப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்றாக அறிவித்தது தெலங்கானா மாநில அரசு

  • கர்நாடகா, உத்தராகண்ட், தெலங்கானா, மத்திய பிரதேசம், ஆந்திரா, ஹரியாணா, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது. 
  • கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மத்திய அரசு 1897-ம் ஆண்டின் பெருந்தொற்று சட்ட விதிகளின்படி கருப்பு பூஞ்சை நோயை இணைத்துள்ளது. இதனை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற அறிக்கையும் அனுப்பியுள்ளது.
  • இதன்படி தெலங்கானா அரசு கருப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்று வரிசையில் இணைத்தது. "சர்க்கரை நோய் அதிகமாக உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நோயால் மூக்கின் தோல் நிறம் மாறும், கண் பார்வை மங்கலாகும், சுவாசக் கோளாறு ஏற்படும்.

தமிழகத்திற்கு கூடுதலாக 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு மத்திய அரசு உத்தரவு

  • தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால்,கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
  • மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதன்காரணமாக ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.
  • இந்நிலையில்,மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்,தமிழகத்திற்கு 180 டன் கூடுதலாக அதாவது மொத்தம் 900 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel