Type Here to Get Search Results !

TNPSC 14th MAY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

நேபாள பிரதமராக சா்மா ஓலி மீண்டும் பிரதமராக பதவியேற்பு

  • சா்மா ஓலி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியின் தலைவா் புஷ்பகமல் தாஹால் பிரசண்டா திரும்பப் பெற்றதைத் தொடா்ந்து அரசு பெரும்பான்மை இழந்தது. அதையடுத்து, சா்மா ஓலி பதவி விலகினாா்.
  • இந்த நிலையில், வியாழக்கிழமை இரவுக்குள் புதிய அரசை அமைக்குமாறு எதிா்க்கட்சியான நேபாள காங்கிரஸ், பிரசண்டாவின் கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சிகளுக்கு அதிபா் வித்யாதேவி பண்டாரி அழைப்பு விடுத்திருந்தாா். குறித்த நேரத்துக்குள் ஆட்சிமைக்க இரு கட்சிகளும் தவறின.
  • அதையடுத்து, சா்மா ஓலியை மீண்டும் பிரதமராக அதிபா் நியமித்தாா். அதன் தொடா்ச்சியாக, நேபாளத்தின் 43-ஆவது பிரதமராக சா்மா ஓலி வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். அவருடன் அவரது அமைச்சா்களும் பதவியேற்றுக் கொண்டனா்.
  • எனினும் 30 நாள்களுக்குள் நாடாளுமன்றத்தில் அவா் தனது பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும்.

பிக்காசோவின் ஓவியம் ரூ.750 கோடிக்கு ஏலம்

  • ஜன்னலில் பெண் அமர்ந்திருக்கும் வகையில் இவர் 1932ம் ஆண்டு ஓவியம் ஒன்றை வரைந்து நிறைவு செய்தார். இந்த ஓவியம் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள கிறிஸ்டி ஏல மையத்தில் ஏலமிடப்பட்டது. 
  • ரூ.403 கோடிக்கு ஏலம்போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 19 நிமிடங்கள் நடந்த ஏலத்தில் ஓவியமானது ரூ.750 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது.

தூத்துக்குடி வஉசி துறைமுகம் 2020 - 2021ம் நிதியாண்டில் ரூ.113.72 கோடி வருவாய் ஈட்டி சாதனை

  • தூத்துக்குடி வஉசி துறைமுகம் கடந்த நிதியாண்டில் (2020- 2021) 31.79 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இது 2019-2020 நிதியாண்டில் கையாளப்பட்ட 36.08 மில்லியன் டன் சரக்குகளை விட 11.89 சதவிகிதம் குறைவாகும். 
  • இதில் இறக்குமதி 22.53 மில்லியன் டன்களும் (70.86 சதவீதம்), ஏற்றுமதி 9.18 மில்லியன் டன்களும் (28.90 சதவீதம்), சரக்கு பரிமாற்றம் 0.08 மில்லியன் டன்களும் (0.24 சதவீதம்) கையாளப்பட்டுள்ளது.
  • 2020-2021 நிதியாண்டில் மொத்தம் 7.62 லட்சம் சரக்கு பெட்டகங்கள் கையாளப்பட்டுள்ளன. இது முந்தைய நிதியாண்டு கையாண்ட அளவான 8.04 சரக்கு பெட்டகங்களுடன் ஒப்பிடுகையில் 5.22 சதவீதம் குறைவாகும்.
  • வஉசி துறைமுகத்தில் 2020-2021-ம் நிதியாண்டு இயக்க வருவாய் ரூ.549.51 கோடி ஆகும். முந்தைய 2019-2020 நிதியாண்டு இயக்க வருவாய் ரூ.582.90 கோடியாக இருந்தது. 
  • 2020-2021 நிதியாண்டு இயக்க உபரி வருவாய் ரூ.322.63 கோடி ஆகும். முந்தைய 2019-2020 நிதியாண்டு இயக்க உபரி வருவாய் ரூ.328.71 கோடியாக இருந்தது.
  • 2020-2021 நிதியாண்டு வரி பிடித்ததற்கு பின்பு உள்ள நிகர உபரி வருவாய் ரூ.113.72 கோடி ஆகும். முந்தைய 2019-2020 நிதியாண்டு வரி பிடித்ததற்கு பின்பு உள்ள நிகர உபரி வருவாய் ரூ.135.23 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டைவிட நிகர வருவாய் ரூ.21.51 கோடி குறைந்துள்ளது.
  • வஉசி துறைமுகத்தில் ரூ.64.15 கோடி செலவில் வடக்கு சரக்குத் தளம்-3-ஐ 14.20 மீட்டராக ஆழப்படுத்தும் பணி தொடங்கப்படும் நிலையில் உள்ளது. 
  • மேலும் 49 மீட்டர் அகலமும் மற்றும் 366 மீட்டர் நீளமும் கொண்ட பெரிய வகை கப்பல்கள் வருவதற்கு வசதியாக துறைமுக நுழைவுவாயிலை 152.40 மீட்டரிலிருந்து 230 மீட்டராக அகலப்படுத்தும் பணி ரூ.15.24 கோடி செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது. 
  • எளிமையான வர்த்தகம் நடைபெறுவதற்கு வசதியாக ஒரு மணி நேரத்தில் 100 சரக்கு பெட்டக வாகனங்களை ஸ்கேன் செய்யும் வசதி ரூ.47 கோடி செலவில் நிறுவும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel