செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 116 கோடியாக அதிகரிப்பு டிராய்
- நடப்பாண்டு பிப்ரவரி இறுதி நிலவரத்தின்படி, 41.49 கோடி வாடிக்கையாளா்களுடன் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடா்பு நிறுவனமாக ரிலையன் ஜியோ உருவெடுத்துள்ளது. இந்நிறுவனம் பிப்ரவரியில் 42 லட்சம் வாடிக்கையாளா்களை கூடுதலாக இணைத்துக் கொண்டுள்ளது.
- பாா்தி ஏா்டெல் நிறுவனம் பிப்ரவரியில் 37 லட்சம் வாடிக்கையாளா்களை நிகர அடிப்படையில் சோத்துக் கொண்டுள்ளது. இதையடுத்து, அதன் ஒட்டுமொத்த வாடிக்கையாளா் எண்ணிக்கை 34.83 கோடியாக அதிகரித்துள்ளது.
- குறிப்பாக பல மாதங்களுக்கு பிறகு, வோடஃபோன் ஐடியா 6.5 லட்சம் வாடிக்கையாளா்ளை ஈா்த்தது. இதையடுத்து, அந்நிறுவனத்தின் வாடிக்கையாளா் எண்ணிக்கை 28.26 கோடியானது.
- 2021 பிப்ரவரி நிலவரப்படி நாட்டின் ஒட்டுமொத்த செல்லிடபேசி வாடிக்கையாளா் எண்ணிக்கை 0.72 சதவீத வளா்ச்சி விகிதத்துடன் 116.77 கோடியைத் தொட்டுள்ளது.
- நகா்ப்புற செல்லிடப்பேசி வாடிக்கையாளா் எண்ணிக்கை ஜனவரியில் 63.32 கோடியாக இருந்த நிலையில், அது பிப்ரவரியில் 63.92 கோடியைத் தொட்டுள்ளது.
- அதேபோன்று, ஊரக பகுதிகளில் உள்ள செல்லிடப்பேசி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கையும் 52.61 கோடியிலிருந்து 52.84 கோடியாக உயா்ந்துள்ளது.
- நகா்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் செல்லிடப்பேசி சேவையில் இணைவோா் எண்ணிக்கையின் மாதந்திர வளா்ச்சி விகிதம் முறையே 0.94 சதவீதம் மற்றும் 0.44 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
- செல்லிடப்பேசி சேவையில் தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் பங்களிப்பு 89.57 சதவீத அளவுக்கு உள்ளது. அதேசமயம், பொதுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகியவற்றின் சந்தை பங்களிப்பானது 10.43 சதவீத அளவுக்கு மட்டுமே உள்ளது.
- செல்லிடப்பேசி சந்தாதாரா்களின் எண்ணிக்கை அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோ 35.54 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடா்ந்து பாா்தி ஏா்டெல் 29.83 சதவீத பங்களிப்பையும், வோடஃபோன் ஐடியா 24.20 சதவீத பங்களிப்பையும் வைத்துள்ளன.
- நடப்பாண்டு ஜனவரியில் 75.76 கோடியாக இருந்த பிராட்பேண்ட் சந்தாதாரா்களின் எண்ணிக்கை பிப்ரவரியில் 0.99 சதவீத வளா்ச்சியைப் பெற்று 76.51 கோடியை எட்டியது.
- பிராட்பேண்ட் சேவையில் 41.74 கோடி வாடிக்கையாளா்களுடன் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தில் உள்ளது. இதனையடுத்து, பாா்தி ஏா்டெல் (18.82 கோடி), வோடஃபோன் ஐடியா (12.32 கோடி), பிஎஸ்என்எல் (2.54 கோடி), அட்ரியா கன்வொஜன்ஸ் (18.2 லட்சம்) ஆகிய நிறுவனங்கள் உள்ளதாக புள்ளிவிவரத்தில் டிராய் தெரிவித்துள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளராக ரமேஷ் பவார் நியமனம்
- இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த டபிள்யூ.வி.ராமன் பதிவிக் காலம் முடிவடைத்த பிறகு புதிய பயிற்சியாளர் தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. புதிய பயிற்சியாளர் பதவிக்கு ராமன், ரமேஷ் உட்பட 35பேர் விண்ணப்பித்தனர்.
- அவர்களில் 4 பெண்கள் உட்பட 8பேர் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. அவர்களிடம் கடந்த 2 நாட்களாக காணொளி மூலம் தேர்வு நடந்தது. அதனை முன்னாள் வீரர்கள் மதன்லால், ஆர்.பி.சிங், வீராங்கனைகள் சுலக்ஷனா நாயக் ஆகியோரை கொண்ட குழு மேற்கொண்டது.
- அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமேஷ் பவாரை மீண்டும் தலைமை பயிற்சியாளராக பிசிசிஐ நியமித்தது.
டெஸ்ட் தர வரிசை முதல் இடத்தில் இந்தியா
- 2021 ஆண்டுக்கான டெஸ்ட் அணிகளுக்கான தர வரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-1, இங்கிலாந்துக்கு எதிராக 4-0 என்ற கணக்கில் தொடர்களை கைப்பற்றியதால் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளை 2-0 என்ற கணக்கில் வீழ்த்திய நியூசிலாந்து 2வது இடத்தை பிடித்துள்ளது.
- அடுத்த இடங்களில் இங்கிலாந்து(3), ஆஸ்திரேலியா(4), பாகிஸ்தான்(5), வெஸ்ட் இண்டீஸ்(6), தென் ஆப்ரிக்கா(7), இலங்கை(8), வங்கதேசம்(9) இடங்களில் உள்ளன. நீண்ட நாட்களுக்கு பிறகு ஜிம்பாப்வே 10வது இடத்தை எட்டியுள்ளது. இதில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இலங்கை, வங்கதேசம் அணிகள் தங்கள் இடங்களை இழந்துள்ளன.