Type Here to Get Search Results !

TNPSC 7th APRIL 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ஏ.சி., எல்.இ.டி. விளக்கு உற்பத்திக்கு ஊக்கத்தொகை மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் குளிர்சாதன இயந்திரங்கள், எல்இடி விளக்குகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு ஊக்கம் தரும் வகையிலான 6,238 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்திற்கு ஒப்புதல் தரப்பட்டது. 
  • இம்முடிவால் அடுத்த 5 ஆண்டுகளில் குளிர்சாதன இயந்திர உற்பத்தி மற்றும் எல்இடி விளக்குகள் உற்பத்தியில் 7 ஆயிரத்து 920 கோடி ரூபாய் கூடுதலாக முதலீடு செய்யப்படும் என்றும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூடுதலாக 4 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அரசு எதிர்பார்க்கிறது.
  • இது தவிர சூரிய ஒளி மின்னுற்பத்தி சாதனங்கள் தயாரிப்புக்கும் 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கத்திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
  • இதனால் ஒன்றரை லட்சம் வேலைகள் உருவாகும் என அரசு மதிப்பிட்டுள்ளது. இந்தியாவில் உற்பத்தியாகும் பல்வேறு பொருட்களை சர்வதேச சந்தையில் போட்டியிட வைப்பதற்காக உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டத்தை மத்திய அரசு அண்மைக்காலமாக செயல்படுத்தி வருகிறது. அத்திட்டம் ஒவ்வொரு துறையாக விரிவாக்கப்பட்டு வருகிறது

காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் மாதேஸ்வரன் பொறுப்பேற்பு

  • காந்திகிராமத்தில் உள்ளது காந்திகிராம கிராமியப் பல்கலைகழகம். இங்கு துணைவேந்தராக பணிபுரிந்த நடராஜன், 2019 மே 19- ல்ஓய்வு பெற்றார். இதையடுத்து துணைவேந்தர் பணியிடம் காலியாக இருந்தது.
  • இந்நிலையில் காந்திகிராமப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக டாக்டர் எஸ்.மாதேஸ்வரனை, பல்கலைக்கழக வேந்தர் அண்ணாமலை நியமித்தார். இதையடுத்து அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு பல்கலை. பதிவாளர் சிவக்குமார், பேராசிரியர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
  • ஈரோடு மாவட்டம், கூகலூரைசேர்ந்த டாக்டர் எஸ்.மாதேஸ்வரன், பெங்களூருவில் உள்ள சமூகப் பொருளாதார ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர், கர்நாடகமாநில அரசின் திட்டக்குழு உறுப்பினர், இந்திய சமூக அறிவியல் கழகத்தின் தென்மண்டல ஆலோசகர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார்.
  • இவர், பொருளாதாரம் சார்ந்த ஆய்வுகளுக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். சர்வதேச நிறுவனங்களுக்காக பொருளாதாரம் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். இதுவரை 106 ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். 
  • அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற பொருளாதார கருத்தரங்குகளில் பங்கேற்று பேசியுள்ளார். இவர்,5 ஆண்டுகாலம் காந்தி கிராமப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பொறுப்பு வகிப்பார்.

கால்நடை பல்கலை. துணை வேந்தராக டாக்டா் செல்வகுமாா் நியமனம்

  • கால்நடை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இதுவரை இருந்து வந்த பாலசந்திரனின் பதவிக் காலம் அண்மையில் நிறைவடைந்தது. இதையடுத்து, அப்பொறுப்புக்கு செல்வகுமாா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
  • கால்நடை மருத்துவத்தில் முதுநிலைப் பட்டமும், பெங்களூரு வேளாண் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டமும் பெற்றுள்ள டாக்டா் செல்வகுமாா், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஏறத்தாழ 32 ஆண்டுகள் பணியாற்றி வருகிறாா்.
  • பல்வேறு நிா்வாகப் பொறுப்புகளை வகித்துள்ள அவா் பேராசிரியராகப் பணியாற்றி ஆயிரக்கணக்கான கால்நடை மருத்துவா்களை உருவாக்கியுள்ளாா். ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வா், பல்கலைக்கழக தோவுக் கட்டுப்பாட்டு அலுவலா், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வா் என பல பதவிகளை அவா் வகித்துள்ளாா்.
  • இந்நிலையில்தான் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆளுநா் மாளிகையில் அதற்கான நியமன ஆணையை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்திடமிருந்து செல்வகுமாா் புதன்கிழமை பெற்றுக் கொண்டாா். இந்த நிகழ்வின்போது ஆளுநரின் தனிச் செயலா் ஆனந்தராவ் பாட்டீல் உடனிருந்தாா்.

அரியர் தேர்வு ரத்தை ஏற்க முடியாது நீதிமன்றம் உத்தரவு

  • கொரோனா பரவல் காரணமாக கல்லூரி மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்த தமிழக அரசு, அரியர் மாணவர்களின் தேர்வுகளையும் ரத்து செய்து உத்தரவிட்டது. 
  • இது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அரியர் தேர்வை ரத்து செய்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
  • இந்நிலையில் அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்த தமிழக அரசு பரிசீலனை பரிசீலிக்க வேண்டும். 
  • கல்வியின் புனிதத்தில் சமரசம் செய்யாமல் எந்த மாதிரி தேர்வு நடைமுறையை மேற்கொள்ளலாம் என ஆலோசியுங்கள். தேர்வு நடத்துவது குறித்து யுஜிசி, தமிழக அரசு இரண்டும் கலந்து ஆலோசிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • அத்துடன் அரியர் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் எத்தனை பேர்? தேர்ச்சி என அறிவிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? என பல்கலை. வாரியாக முழு விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்வராயன் மலை சமவெளி வனப்பகுதியில் வாழும் இருவாச்சி பறவைகள்
  • சேலம் மாவட்டம், கல்வராயன் மலை, தருமபுரி மாவட்டம், சித்தேரி மலைப்பகுதி இடையே காணப்படும் சமவெளி வனப்பகுதியில் இந்திய சாம்பல் இருவாச்சி பறவைகள் அதிக அளவில் வாழ்ந்து வருவது வனத் துறையினர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • சேலம் மாவட்டம், கல்வராயன் மலை, தருமபுரி மாவட்டம், சித்தேரி மலைத் தொடர்களுக்கு இடையே, சேலம் மாவட்டம் தும்பல் மாமாஞ்சியில் தொடங்கி, தருமபுரி மாவட்டம், சேலூர், வேலனுôர், சிட்லிங், கோட்டப்பட்டி வரை 50 சதுர மைல் பரப்பளவில் சமவெளி வனப்பகுதி காணப்படுகிறது.
  • இந்த வனப்பகுதியில் காட்டெருமை, பல்வேறு இன மான்கள், கரடி உள்ளிட்ட ஏரளமான வனவிலங்குகளும், பறவைகளும் வாழ்ந்து வருகின்றன.
  • இந்த சமவெளி வனப்பகுதியில், வினோதமான முறையில் அடைகாக்கும் பழக்கமுடைய பறவையான, அருகி வரும் இந்திய சாம்பல் இருவாச்சி பறவைகள் அதிக அளவில் வாழ்ந்து வருவது, வனத் துறையினரின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • சித்தேரி - கல்வராயன் மலைகளுக்கு இடையே, ஏறக்குறைய 50 சதுர மைல் பரப்பளவில் வளமான சமவெளி வனப்பகுதி காணப்படுகிறது. இப்பகுதியில் பல்வேறு அரியவகை பறவை இனங்கள் வாழ்ந்து வருகின்றன. இவற்றில் இந்திய சாம்பல் இருவாச்சி பறவைகளும் அதிக அளவில் காணப்படுகின்றன.
  • இந்திய சாம்பல் இருவாச்சி பறவைகள், முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொரித்து, இனவிருத்தி செய்யும் முறை, மற்ற பறவைகளிலிருந்து மாறுபட்டதோடு, ஆச்சரியமும், சுவாரசியமும் நிறைந்ததாகும்.
  • முட்டையிடும் இருவாச்சி பெண் பறவை மரப்பொந்தின் உள்ளே சென்றதும் பொந்தின் வாயிலை தனது எச்சக்கழிவினாலும், ஆண் பறவை கொண்டுவந்து தரும் சிறு களிமண் உருண்டைகளைக் கொண்டும் மூடிவிடும். 
  • நீள வாக்கில் ஒரு சிறு பிளவு இடைவெளியை மட்டும் விட்டு வைக்கும். பெண் பறவை இந்தப் பொந்துக்குள் முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொரிக்கும் வரை, ஆண் பறவை சிறிய இடைவெளி வழியாக பெண் பறவைக்கு உணவைக் கொண்டுவந்து அளிக்கும்.
  • இதுமட்டுமின்றி, கூட்டுக்குள் தனது முட்டைகளை அடைகாக்கும் பெண் பறவை தனது சிறகுகளை, தனது முட்டைகளின் மேல் உதிர்த்து அடைகாத்து குஞ்சு பொரிக்கும். 
  • தனது குஞ்சுகள் வளரும் வரை பொந்துக்குள்ளேயே வசிக்கும் பெண்பறவைக்கு, குஞ்சுகள் வளர்வதற்குள் மீண்டும் சிறகுகளும் வளர்ந்து விடும். இதன் பிறகே அடைகாத்த மரப் பொந்தின் நுழைவாயிலை உடைத்துக் கொண்டு வெளியே வந்து இரைதேடத் தொடங்கும் என்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel