Type Here to Get Search Results !

TNPSC 16th APRIL 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

Champions of Change Award 2020' விருது
  • கோவா மாநிலம் தாஜ் ரெசார்ட் & கன்வென்ஷன் செண்டரில் நடைபெற்ற விழாவில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு Interactive Forum on Indian Economy அமைப்பு சார்பாக 'Champions of Change Award 2020' விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி தலைமை தாங்கினார்கள்.
  • இந்த விருதை 2018-ஆம் ஆண்டு துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, 2019-ஆம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்கள்.

தேசிய கபடி ரயில்வே சாம்பியன்

  • இறுதிப் போட்டியில், தமிழக வீரர் தர்மராஜ் சேரலாதன் தலைமையிலான நடப்பு சாம்பியன் இந்தியன் ரயில்வே 44-23 என்ற புள்ளி கணக்கில் சர்வீசஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 
  • ரயில்வே தொடர்ந்து 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது. மொத்தம் 30 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் 'ஜி' பிரிவில் 2வது இடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய தமிழகம், சர்வீசஸ் அணியிடம் 24-56 என்ற புள்ளிக் கணக்கில் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறியது.

கீழடி 7ம் கட்ட அகழாய்வில் பகடைகாய் உழவு கருவி, கருப்பு ஓடு கண்டெடுப்பு

  • கீழடியில் 7ம் கட்ட அகழாய்வில் சதுர வடிவ பகடை, கல் உழவு கருவி, கருதுள்ளது.ஏற்கனவே மத்திய தொல்லியல் துறை நடத்திய 2ம் கட்ட அகழாய்வில் தந்தத்தால் செய்யப்பட்ட தாயக்கட்டை கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
  • தொடக்க காலத்தில் உழவிற்கு கூர்மையான கல்லால் செய்யப்பட்ட உழவு கருவியை பயன் படுத்தியுள்ளனர். 
  • மேற்புறம் மண்ணை கீறி செல்ல கூர்மையாகவும்,மண்ணை கிளற பக்க வாட்டில் பளபளப்பாகவும் இந்த கல் உள்ளது. 
  • இதுவரை கருப்பு சிவப்பு வண்ண பானை ஓடுகள் கிடைத்த நிலையில் கருப்பு நிற பானை ஓடும் கண்டறியப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel