- உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயல்படும் 'ஐ.நா. நிலையான அபிவிருத்தி தீர்வுகள் நெட்வொர்க்' என்ற அமைப்பு இந்த பட்டியலை தொடர்ந்து 9 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது.
- மொத்தம் 149 நாடுகளில் உள்ள மக்களிடம் அவர்களின் வாழ்க்கை மதிப்பீடுகள், தனி மனித சுதந்திரம், சமூக ஆதரவு, ஜிடிபி, ஊழல், மக்களின் நேர்மறை உணர்ச்சிகள் மற்றும் எதிர்மறை உணர்ச்சிகள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு கேள்விகள் கேட்டதன் அடிப்படையில் இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
- அதன்படி தொடர்ந்து 4வது ஆண்டாக இந்த ஆண்டும் பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. டென்மார்க் 2ம் இடத்தையும், ஸ்விட்சர்லாந்து 3ம் இடத்தையும் பிடித்துள்ளன. ஐஸ்லாந்து மற்றும் நெதர்லாந்து முறையே 4வது மற்றும் 5ம் இடங்களை பிடித்துள்ளன.
- உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் முதல் 10 இடங்களை ஐரோப்பிய நாடுகளே ஆக்கிரமித்துள்ளன. முதல் 10 இடங்களுக்குள் ஐரோப்பிய நாடு அல்லாத ஒரே நாடாக இருப்பது நியூசிலாந்து மட்டுமே. கடந்த ஆண்டு 8ம் இடத்தில் இருந்த நியூசிலாந்து ஒரு இடம் சரிந்து 9வது இடத்துக்கு சென்றது.
- ஜெர்மனி 17வது இடத்தில் இருந்து 13வது இடத்துக்கும், பிரான்ஸ் 23ம் இடத்தில் இருந்து 21ம் இடத்துக்கும் முன்னேறியுள்ளன. பிரிட்டன் 13வது இடத்தில் இருந்து 17வது இடத்துக்கு சரிந்துள்ளது. இதே போல அமெரிக்கா ஒரு இடம் சரிந்து 19வது இடத்தில் உள்ளது.
- ஆப்பிரிக்க நாடுகளான லெசெதொ, போட்ஸ்வானா, ருவாண்டா, ஜிம்பாப்வே போன்ற நாடுகள் இப்பட்டியலில் கடைசி இடங்களில் உள்ளன. இருப்பினும் கடைசி இடத்தில் ஆஃப்கானிஸ்தான் உள்ளது. இது மகிழ்ச்சியற்ற நாடாக கருதப்படுகிறது.
- 156 நாடுகள் கொண்ட இப்பட்டியலில் 3.573 புள்ளிகளுடன் இந்தியா 144வது இடம் பெற்றுள்ளது. 2019ம் ஆண்டு இதே பட்டியலில் இந்தியா 140வது இடத்தை பிடித்திருந்தது, அதே போல 2018ல் 133வது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் / WORLD HAPPIEST COUNTRY LIST
March 20, 2021
0
Tags