தேவேந்திரகுல வேளாளர் மசோதா நிறைவேற்றம்
- தமிழகத்தின் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி மற்றும் வாதிரியான் ஆகிய 7 சமூகங்கள் இடம் பெற்றுள்ளன.
- இவை ஒரே சமூகத்தின் 7 பிரிவுகள் எனவும், இவற்றை 'தேவேந்திரகுல வேளாளர்' என ஒரே பெயரில் அழைக்க வேண்டும் என்றும் அந்த சமூகங்களின் பெரும் பாலானவர்களிடம் கோரிக்கை எழுந்தது. தமிழக அரசின் பரிந்துரையின்படி மத்திய அரசும் அதன் மீதான சட்டதிருத்தம் கொண்டுவர முடிவு செய்தது.
- இதற்காக 'இந்திய அரசியல் சட்டம் (பிற்படுத்தப்பட்ட சமூகங்கள்) சட்டதிருத்த மசோதா 2021' எனும் பெயரில் மசோதா பொது பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாகத்தின் இறுதி நாளான பிப்ரவரி 13-ல் மக்களவையில் தாக்கலானது. இதையடுத்து இந்த சட்டதிருத்த மசோதா மக்களவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள் ளது.
200மீட்டர் ஓட்டத்தில் தனலட்சுமி மீண்டும் சாதனை
- பாட்டியலாவில் 24வது தேசிய கூட்டமைப்பு கோப்பை தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் பெண்களுக்கான 200மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை எஸ்.தனலட்சுமி தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 23.26 விநாடிகளில் கடந்து புதிய தேசிய சாதனை படைத்தார்.
- தங்க மங்கை பி.டி.உஷா 1998ம் ஆண்டு சென்னையில் நடந்த போட்டியில் 23.20 விநாடிகளில் கடந்ததே இதுவரை தேசிய சாதனையாக இருந்தது. இந்தியாவுக்காக சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் ஹிமா தாஸ்(24.29விநாடி) இந்தப்போட்டியில் 2வது இடத்தை பிடித்தார். ஏற்கனவே தனலட்சுமி 100மீட்டர் ஓட்டத்தில் ஒடிசாவின் டுட்டி சந்தை பின்னுக்கு தள்ளி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
பீரங்கிகளை தாக்கி அழிக்க கொள்முதல் ரூ1,188 கோடியில் 4,690 ஏவுகணை: பாரத் டைனமிக்சுடன் ஒப்பந்தம்
- இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் வலு சேர்க்கும் விதமாக, பல்வேறு ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் கடந்த சில மாதங்களாக பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து வருகிறது.
- இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், `பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்முதல் பிரிவு, பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஆயுதம் தாங்கிய வாகனங்கள், பீரங்கிகளை தாக்கி அழிக்கும் 4,960 மிலன்-2டி ரக ஏவுகணைகளை ரூ1,188 கோடி செலவில் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.
- இன்னும் 3 ஆண்டுகளில் இவை ராணுவத்தில் சேர்க்கப்படும்,' என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் 1,850 மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளையும் குறி வைத்து தாக்கும் திறன் கொண்டவை. இவை பெரும்பாலும், ராணுவ வாகனங்களைத் தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
தான்சானியா அதிபராக முதல்முறையாக பெண் பதவியேற்பு
- தான்சானியா அதிபராக செயல்பட்டு வந்தவர் ஜான் மகுஃபுலி கடந்த சில வருடங்களாக இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 2 வார காலமாக பொது நிகழ்ச்சியில் மகுஃபுலி கலந்து கொள்ளாத நிலையில் அவரது உடல்நலம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தன.
- மகுஃபுலி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் இதய நோய் காரணமாக புதன்கிழமை உயிரிழந்ததாக துணை அதிபர் சமியா சுலுஹூ அறிவித்தார்.
- இந்நிலையில் தான்சானியா புதிய அதிபராக சமியா சுலுஹூ தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து சமியா வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். இவர் தான்சானியா நாட்டின் முதல் பெண் அதிபர் என்னும் பெருமையையும் பெற்றுள்ளார்.