திருப்பத்தூர் புதூர்நாட்டில் நவிரமலை கல்வெட்டுகள் கண்டெடுப்பு
- திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் க.மோகன்காந்தி, காணி நிலம் மு.முனிசாமி, தொல்லியல் அறிஞர் பெ.வெங்கடேசன், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி குப்புசாமி, வரலாற்று ஆர்வலர்கள் வேந்தன், வீரப்பன் ஆகியோர் அடங்கிய ஆய்வுக்குழுவினர் கடந்த 12 ஆண்டுகளாக திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலைப்பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
- அதனடிப்படையில், ஜவ்வாதுமலைக்கு உட்பட்ட புதூர் நாட்டில்அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டபோது, 'நவிரமலை கல்வெட்டை' கண்டெடுத்துள்ளனர்.
- திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலைக்கு உட்பட்ட புதூர்நாடு ஊராட்சி, முழலை கிராமத்தில் முழலை நாதர் (சிவபெருமான்) கோயில் உள்ளது. இதன் வலது பக்கத்தில் உள்ள விவசாய நிலத்தில் 2 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் சிவபெருமான் கோயிலுக்கு தானமாக வழங்கியதாக தெரிகிறது.
- இதன் மூலம் நவிரமலையில் சிவபெருமான் வீற்றிருந்தார் என்பது தெரிகிறது. பிற்கால நாயக்கர் காலத்தில் நவிரமலையில் முழலை நாதர் வீற்றிருக்கிறார் என்ற செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
- சங்க காலம் தொட்டு நவிரமலை என்ற பெயர் வழக்கு சோழர், நாயக்கர் காலம் வரை அதே பெயரிலேயே இருந்து வந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வாசனைப் பொருட்கள் அதிகமாக கிடைத்ததால் ஜவ்வாதுமலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- எனவே, இம்மலைக்கு பண்டைய பெயரான நவிரமலை என்றே பெயர் சூட்ட வேண்டும் எனஎங்கள் ஆய்வுக்குழு தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை மூலம் தெரிவித்து வருகிறோம். புதூர்நாட் டில் கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் சிவபெருமான் கோயிலுக்கு அறப்பணி செய்ய தேவதானம் கொடுத்த செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
- இறைவன் சொத்தை தவறாக பயன்படுத்துவோர் பசுவைக் கொன்ற பாவத்துக்கு ஆளாகிப் போவார்கள் என இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- அக்காலங்களில் பசுவை கொல்வது என்பது மிகுந்த பாவம் கொடிய செயல் எனக்கருதியுள்ளனர். தவறு செய்பவர்கள் பசுவைக்கொன்ற பாவத்துக்கு ஆட்படுவார்கள் என இக்கல்வெட்டு கூறுகிறது.
- இக்கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள ஈசன் நவிரமலை முழலை உடையார் என அழைக்கப்பட் டுள்ளார். ஜவ்வாதுமலையின் பண்டைய பெயரான நவிரமலை என்ற சொல்லாட்சியும் இக்கல் வெட்டில் இடம்பெற்றுள்ளது.
- இக்கல்வெட்டானது தானம் வழங்கிய கல்வெட்டு என்பதால் இதில், சூரியன், சந்திரன், சூலா யுதம், குத்துவிளக்குப்படங் களோடு சைவ கோயிலுக்கு கொடுத்த தானச்செய்தியும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உற்பத்தி சார் ஊக்க சலுகை (பிஎல்ஐ) திட்டம்
- தொழில்துறையின் உற்பத்தியை அதிகரிக்க அரசு அறிவித்துள்ள உற்பத்தி சார் ஊக்க சலுகை (பிஎல்ஐ) திட்டம் குறித்த காணொலி கருத்தரங்கில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
- இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும் சிறிய அளவில் அல்லது பெருநிறுவனங்கள் துவங்கும் தொழிலுக்காக பல உரிமங்கள் பெற வேண்டி உள்ளது. இவை, அப்பகுதி நிர்வாகம், மாநில அரசு மற்றும் மத்திய அரசு என பல எண்ணிக்கையில் தொடரும் நிலை உள்ளது. இதன்மீது இந்திய தேசிய உணவுவிடுதிகள் சங்கம் சார்பில்,எப்.ஒய்20 எனும் பெயரில் ஒரு புள்ளி விவரம் வெளியிடப்பட்டது.
- அதில், ஒரு உதாரணமாக டெல்லியில் ஒரு உணவு விடுதிதொடங்க, காவல்துறை, தீயணப்புத்துறை, மத்திய, மாநில அரசுகள்உள்ளிட்ட 45 வகையான உரிமங்கள் பெற வேண்டி இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
- இதைகவனத்தில் கொண்ட பிரதமர்மோடி பேசும்போது, இந்தியாவில் தொழில் துவங்குவதில் உள்ள சிக்கல்கள் களையப்பட்டு எளிமைப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். 'இந்த பிரச்சினைக்கு அதிகமுக்கியத்துவம் அளித்து தீர்க்கஉள்ளோம். தொழில் துவங்குவதற்காக பல விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் முறைவில் இருந்து விடுபட உரிய நடவடிக்கை எடுப்போம்' என்று மோடி தெரிவித்தார்.
சென்னிமலை அருகே மீண்டும் அகழ்வாராய்ச்சி கல்மணிகள், இரும்பு கரண்டி பழங்கால பொருள் கண்டுபிடிப்பு
- சென்னிமலை அருகே கொடுமணல் பகுதியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் மீண்டும் அகழாய்வு பணி தொடங்கியது. ஆரம்ப நிலையிலேயே கல்மணிகள் உள்ளிட்ட பல்வேறு பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன.
- ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொடுமணல் கிராமத்தில், தமிழக தொல்லியல் துறை சார்பில் அதன் திட்ட இயக்குநர் ஜெ.ரஞ்சித் தலைமையில் தொல்லியல் பொறுப்பாளர் டாக்டர் கே.சுரேஷ், ஆய்வு மாணவர் பி.அருண்குமார் ஆகியோர் மேற்பார்வையில் 9வது அகழாய்வு பணி மீண்டும் துவங்கி நடந்து வருகிறது. இதில், ஆரம்ப கட்ட ஆய்விலும் பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன.
- கடந்த மாதம் 26ம் தேதி முதல் கொடுமணல் அருகே நொய்யல் ஆற்று பகுதியில் அகழாய்வு பணியை தொடங்கி உள்ளோம். தற்போது, 2 இடங்களில் 10 மீட்டர் நீளம் மற்றும் 10 மீட்டர் அகலத்தில் குழிகள் தோண்டி அகழாய்வு செய்த போது 30 செ.மீ. ஆழத்திலேயே பல வகையான கல்மணிகள், அதற்கான மூல பொருட்கள், கண்ணாடி மற்றும் சங்கு வளையல்கள், இரும்பை உருக்கும் உருக்கிகள், மண் பானைகள் செய்யும் போது அதனை வடிவமைப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் கால்வாய் இருந்ததற்கான அடையாளம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- மேலும், சுமார் 12 செ.மீ. நீளத்தில் இரும்பினால் ஆன கரண்டி போன்ற பொருள் ஒன்றும் கிடைத்துள்ளது. 30 செ.மீ. ஆழத்திலேயே பழங்கால பொருட்கள் கிடைத்து வருவதால் மிக கவனமாக ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
- இதுவரை நடந்த ஆய்வுகளில் தொழிற்கூடங்கள் மற்றும் கல்லறைகள் ஆகியவை தனியாருக்கு சொந்தமான நிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டன.
- தற்போதைய அகழாய்வு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நொய்யல் ஆற்றங்கரையின் வடகரை பகுதியில் நடைபெறுகிறது. தொடர்ந்து, நடைபெறும் ஆய்வில் பழங்கால பொருட்கள் அதிக அளவில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அசுத்தமான பகுதிகள் அதிகம் இருக்கும் மாநிலங்களின் பட்டியல்
- நம் நாட்டில் நச்சு மற்றும் அபாயகரமான பொருட்களால் 112 இடங்கள் மாசு அடைந்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ன.இதில் அதிகபட்சமாக ஒடிசா மாநிலத்தில் 23 இடங்கள் மிகவும் அசுத்தமாக உள்ளன.
- உத்தர பிரதேசத்தில் 21 இடங்கள்; டில்லியில் 11 இடங்களும் மாசு அடைந்துள்ளன.குஜராத், ஜார்க்கண்ட், கேரளா, மஹாராஷ்டிரா, ஒடிசா, தமிழகம் மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் உள்ள மாசு அடைந்துள்ள பகுதிகளை சுத்தம் செய்யும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
ஸ்விஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு ஃபைனலில் பி.வி.சிந்து தோல்வி
- ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதி பிரிவின் ஃபைனலில், இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி அடைந்துள்ளார்.
- ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரினும், சிந்துவும் மோதிய இந்த இறுதி போட்டியில் கரோலினா 21-12, 21-5 என நேர் செட் கணக்கில் வீழ்த்தியுள்ளார்.
உலக மல்யுத்த வீராங்கனைகள் பட்டியல் முதலிடத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட்
- இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் உலக மல்யுத்த வீராங்கனைக்கான ரேங்கிங்கில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு தங்கம் வென்றதன் மூலம் வினேஷ் போகாட் முதலிடம் பிடித்துள்ளார். 53 கிலோ எடைப் பிரிவில் உலக அளவில் 14 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
- உலக ரேங்கிங்கில் மூன்றாம் இடத்தில் இருந்த வினேஷ் போகாட் தற்போது முதலிடத்திற்கு முந்தியுள்ளார். கனடாவின் டயானா மேரியை 4 - 0 என்ற கணக்கில் வீழ்த்தி முதலிடம் பிடித்துள்ளார் வினேஷ்.
- இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற Matteo Pellicone Ranking Series நிகழ்வில் டயானாவை வினேஷ் வீழ்த்தியதன் மூலம் தங்கம் வென்றார். கடந்த வாரம் ஒரு தங்க பதக்கத்தை அவர் வென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.