Type Here to Get Search Results !

TNPSC 2nd MARCH 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

சர்வதேச மிச்செலின் ஸ்டார் விருது

  • சமையல் கலைக்கு வழங்கப்படும் ஒரு அங்கீகாரமாக மிச்செலின் நிறுவனத்தின் மிச்செலின் ஸ்டார் விருது கருதப்படுகிறது. பிரெஞ்ச் நாட்டின் டயர் நிறுவனமாக மிச்செலின், சிறந்த சமையல் கலைஞர்களையும், அவர் சார்ந்த நிறுவனத்தையும் பெருமைப்படுத்தும் ஆண்டுதோறும் மிச்செலின் ஸ்டார் விருது வழங்கி வருகிறது.
  • அந்த வகையில் இந்தாண்டு இந்த விருது முதல் முறையாக இந்திய பெண்மணியான கரிமா அரோரா என்ற சமையல் கலைஞர் பெற்றுள்ளார்.

இந்தியா, ஜப்பான் உதவியுடன் கொழும்பு துறைமுகத்தை மேம்படுத்தும் திட்டம் இலங்கை அரசு ஒப்புதல்

  • இந்திய அரசும் ஜப்பான் அரசும் நியமித்த நிறுவனங்களுடன் இலங்கை துறைமுக ஆணையம் இணைந்து கொழும்பு துறைமுகத்தின் மேற்கு சரக்குப் பெட்டக முனையத்தை மேம்படுத்த உள்ளன. இந்த திட்டத்துக்கு இலங்கை அமைச்சரவை மாா்ச் 1-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இவ்வாறு மேம்படுத்தப்படும் முனையம், வரையறுக்கப்பட்ட அரசு-தனியாா் கூட்டு நிறுவனமாகச் செயல்படும்.
  • அமைச்சரவையின் ஒப்புதல் நகல், இந்தியாவின் அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் அதானி குழுமம் செயல்படுவதற்கு இந்திய தூதரகம் ஒப்புதல் அளித்துள்ளது என்று அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்படி, அந்த முனையத்தை கூட்டு நிறுவனம் 30 ஆண்டுகளுக்கு இயக்கும்.

கீழடி 7ம் கட்ட அகழாய்வில் சுடுமண் மூடி குமிழ் கண்டுபிடிப்பு

  • சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் கணேசன் என்பவரது நிலத்தில் கடந்த பிப்.13ம் தேதி துவங்கியது. 
  • கீழடி அகழாய்வில் ஆறு குழிகள் தோண்ட திட்டமிடப்பட்டு முதலில் ஒரு குழி மட்டும் தோண்டப்பட்டது. இதுவரை இரண்டு மீட்டர் ஆழம் தோண்டப்பட்ட நிலையில் மணிகள், பாசிகள், பானை ஒடுகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன.
  • நேற்றைய அகழாய்வின்போது இரண்டு செ.மீ விட்டமுள்ள சுடுமண் மூடி குமிழ் சேதமடைந்த நிலையில் கண்டறியப்பட்டது. தண்ணீர் வைக்க பயன்படுத்தப்படும் மண் பானை மூடி போன்ற அமைப்பை உடையதாக உள்ளது. 
  • மிகவும் சிறியதாக இருப்பதால் 2,600 ஆண்டுகளுக்கு முன் சிறுமியரின் விளையாட்டு பொருளாக இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
அரியானா மாநில மக்களுக்கு தனியார் துறை வேலைவாய்ப்பில் 75% இட ஒதுக்கீடு ஆளுநர் ஒப்புதல்
  • அரியானா (Haryana) இளைஞர்களுக்கு மிகப்பெரிய செய்தி வெளியாகி உள்ளது. உள்ளூர் இளைஞர்களுக்கு தனியார் துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 75 சதவீத இடஒதுக்கீடு கிடைத்துள்ளது. 
  • இந்த முக்கியமான மசோதாவுக்கு அரியானா கவர்னர் சத்யதேவ் நாராயண் ஆர்யா (Satyadev Narayan Arya) செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தார். இந்த தகவலை மாநில துணை முதல்வர் துஷ்யந்த் சவுதலா (Dushyant Chautala) தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
  • அரியானா மாநில துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலா, இன்று மாநில இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான நாள் என்று கூறினார். இப்போது மாநில இளைஞர்களுக்கு தனியார் வேலைகளில் 75 சதவீத வேலைவாய்ப்பு கிடைக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel