இஸ்ரேல் நாட்டிற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் தூதர் பொறுப்பேற்பு
- இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே கடந்த ஆண்டு ஒப்பந்தமான உடன்படிக்கையின்படி, இரண்டு நாடுகளும் தூதரக உறவை ஏற்படுத்தி உள்ளன. இஸ்ரேலிய அதிபர் Reuven Rivlin முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர் முகமது அல் காஜா, ஜெருசலேமில் நடந்த விழாவில் தூதராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
- ஆபிரகாம் லிங்கன் ஏற்படுத்திய ஒப்பந்தப்படி யூத நாடான இஸ்ரேல் உடன் முழு இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த வேண்டும் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார்.
- இதன்படி தூதரக உறவை ஏற்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் முதல்முறையாக ஒப்புக்கொண்டது. இதன்படியே தூதரை அனுப்பி உள்ளது
- ஆபரகாம் லிங்கன் ஒப்பந்தப்படி 1979 ல் எகிப்தும் 1994 ல் ஜோர்டானும் இஸ்ரேலுடன் உத்தியோகபூர்வ உறவுகளை ஏற்படுத்திய மூன்றாவது அரபு நாடாக ஐக்கிய அரபு அமீரகம் மாறி உள்ளது.
- முன்னதாக பஹ்ரைன், மொராக்கோ மற்றும் சூடான் போன்ற நாடுகளும் இஸ்ரேல் உடன் உறவை ஏற்படுத்தின. பாலஸ்தீனியர்களுடன் ஒரு விரிவான சமாதான ஒப்பந்தத்தை அடையும் வரை இஸ்ரேலுடன் எந்த ஒரு உறவும் இருக்கக்கூடாது என்ற நீண்டகாலமாக அரபு நாடுகள் முடிவில் இருந்து வந்தன. இந்த முடிவு தற்போது படிப்படியாக மாறி வருகிறது.
- இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் காபி அஷ்கெனாஜியை ஜெருசலேமில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர் முகமது அல் காஜா, சந்தித்தார், அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முகமது அல் காஜா, இஸ்ரேல் நாட்டின் முதல் அமீகரத்தின் தூதராக இருப்பதற்கு மிகவும் பெருமை அடைகிறேன்.
- இருநாடுகளிடையே உறவை வளர்ப்பது எனது நோக்கம். எங்கள் முடிவு மத்திய கிழக்கு மக்களுக்கு அமைதியையும் செழிப்பையும் தரும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார். முன்னதாக இஸ்ரேல் தனது ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தை ஜனவரி மாதம் திறந்து வைத்தது, மூத்த தூதர் ஈட்டன் நாஹ் அபுதாபியில் தூதராக பொறுப்பேற்றுள்ளார்.
- முதலீட்டு பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான உடன்படிக்கைகள் இஸ்ரேல் மற்றும் அமீரகம் இடையே கையெழுத்தாகி உள்ளன. மேலும் நேரடி விமானங்கள் மற்றும் விசா இல்லாத பயணம் தொடர்பான ஒப்பந்தங்களிலும் இஸ்ரேலும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே ஏற்கனவே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளன
பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.13 லட்சம் கோடி
- பிப்ரவரி மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மூலம் ரூ.1.13 லட்சம் கோடி வசூலாகியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- தொடர்ந்து 5-வது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக வசூலாகியுள்ளது குறிப்பிடத் தக்கது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வசூலான தொகை யுடன் ஒப்பிடுகையில் இது 7 சதவீதம் அதிகம்.
- கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முடங்கிப்போன தொழில்துறைகளை ஊக்குவிக்க அரசு எடுத்த பல்வேறு கட்ட ஊக்குவிப்பு சலுகைகள் மூலம் நிலைமை படிப்படியாக மீண்டு வருவதை ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு உணர்த்துவதாக நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
- இறக்குமதி வருவாய் மூலமான வரி 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
'கோல்டன் குளோப்' விருது 2021
- அமெரிக்காவில், 'ஹாலிவுட் பாரின் பிரெஸ் அசோசியேஷன்' என்ற தன்னார்வ அமைப்பு, ஆண்டுதோறும், சர்வதேச அளவில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு 'கோல்டன் குளோப்' விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.
- கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்த ஆண்டிற்கான 'கோல்டன் குளோப்' விருது வழங்கும் விழா, நேற்று முன்தினம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்தது. இதில், சிறந்த திரைப்பட, 'டிராமா'வுக்கான கோல்டன் குளோப் விருது, நொமட்லேண்ட் திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்டது.
- சிறந்த இயக்குனருக்கான விருதையும், இதே படத்தின் இயக்குனர் சோலி ஜாவோ, தட்டிச்சென்றார்.இதில், சிறந்த நடிகருக்கான விருது, மா ரெய்னீஸ் பிளாக் பாட்டம் படத்தில் நடித்த, மறைந்த நடிகர் சாட்விக் போஸ்மேனிற்கு அறிவிக்கப்பட்டது.
- இசை மற்றும் நகைச்சுவை பிரிவில் சிறந்த திரைப்படத்திற்கான விருது, போரத் சப்ஸிகுவன்ட் மூவி பில்ம் படத்திற்கு வழங்கப்பட்டது. இந்த படத்தில் நடித்த சச்சா பரோன் கோஹனுக்கு, சிறந்த நடிகருக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
- சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதையும்; சிறந்த பின்னணி இசைக்கான விருதையும், 'சோல்' திரைப்படம் வென்றது.