Type Here to Get Search Results !

TNPSC 29th MARCH 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 14% சரிவு

  • நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்தில் ஒட்டுமொத்த நிலக்கரி மற்றும் கற்கரி இறக்குமதி 19.61 கோடி டன்னாக இருந்தது. 
  • இது, கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் இதே காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 22.72 கோடி டன் நிலக்கரி அளவுடன் ஒப்பிடுகையில் 13.69 சதவீதம் குறைவாகும்.
  • மதிப்பீட்டு காலகட்டத்தில் கோக்கிங் சாரா நிலக்கரி இறக்குமதி 15.76 கோடி டன்னிலிருந்து 12.89 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது. அதேசமயம், கோக்கிங் நிலக்கரி இறக்குமதி 4.51 கோடி டன்னிலிருந்து 4.40 கோடி டன்னாக குறைந்துள்ளது.
  • கடந்தாண்டு பிப்ரவரியில் 2.27 கோடி டன்னாக இருந்த நிலக்கரி இறக்குமதி நடப்பாண்டின் இதே மாதத்தில் 1.53 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது. 
  • இதற்கு, தொமல் கோல் எனப்படும் வெப்ப நிலக்கரி இறக்குமதி கணிசமான அளவில் வீழச்சியடைந்ததே முக்கிய காரணம் என எம்ஜங்ஷன் சா்வீஸஸ் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் அருகே பல்லவா் கால எழுத்துடை நடுகற்கள், கல்வெட்டு கண்டெடுப்பு

  • ஜவ்வாதுமலையின் பண்டைய பெயரான நவிரமலை என்னும் சொல்லாட்சி கொண்ட மூன்று கல்வெட்டுகள் இங்குக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு அதாவது 1,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவா் கால நடுகற்களாகும்.
  • திருப்பத்தூா் மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள புங்கம்பட்டு நாட்டிற்கு உட்பட்ட சின்னவட்டானூா் கிராமத்தில் இருந்து வடகிழக்குத் திசையில் 2 கி.மீ தொலைவில் இலவமரத்து ஆற்று ஓடையின் மேல் பகுதியில் மூக்கறக் காளியம்மன் என்னும் பெயரில் பல்லவா் காலத்தைச் சோந்த இரண்டு எழுத்துடை நடுகற்கள் உள்ளன. 
  • அதன் அருகில் உடைந்த நிலையில், படுத்த கோலத்தில் ஒரு நடுகல்லும் புதைந்த நிலையில் ஒரு கல்வெட்டும் என நான்கு கற்கள் இக்கோயிலில் உள்ளன.
  • முதல் நடுகல் 137 செ.மீ நீளமும், 70 செ.மீ அகலமும் கொண்டது.வாரிமுடிக்கப்பட்ட கொண்டையும், கழுத்தில் ஆபரணமும், காதுகளில் குண்டலங்களுடன் வடிவமைக்கப்பட்ட கோலத்தில் இந்நடுகல் அமைந்துள்ளது.
  • மேலும், வலது கையில் குறுவாள் ஒன்றும் இடது கையில் வில்லைத் தாங்கியும் காட்சித் தருகிறது. இடைக்கச்சு, அதில் குறுவாள் ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இடது காலின் ஓரத்தில் இரண்டு சிறிய மாட்டுருவங்கள் உள்ளன.
  • இக்கல்வெட்டின் எழுத்து வடிவம் கி.பி.7-ஆம் நூற்றாண்டைச் சோந்ததாகும். பல்லவா் காலத்தில் இம்மலைப் பகுதி பங்கள நாட்டில் இருந்தது என்றும் இம்மலை நவிரமலை (ஜவ்வாதுமலை) என்றும் வழங்கப்பட்டதை இந்நடுகல் கல்வெட்டுச் சான்றுடன் விளக்குகிறது.
  • இரண்டாவது நடுகல் 151 செ.மீ நீளமும் 100 செ.மீ அகலமும் கொண்டது. நடுகல் வீரனின் தலைகொண்டை மேற்புறமாக வாரிமுடிக்கப்பட்டுள்ளது. இடது கையில் வில்லும், வலது கையில் குறுவாளும் உள்ளன. இவ்வீரா் இடைக்கச்சு அணிந்துள்ளாா். இதில் குறுவாள் ஒன்றும் உள்ளது. வயிற்றுப்பகுதியில் அம்பு ஒன்று தைத்துள்ளது.
  • பகைவா்கள் விட்ட அம்பால் இவ்வீரா் இறந்து போன செய்தியை அறிய முடிகிறது. இக்கல்வெட்டு ஸ்வஸ்திஸ்ரீ என்று மங்களமாகத் தொடங்குகிறது. இதுவும் பல்லவா் கால நடுகல்லாகும். பல்லவா் ஆண்ட தொண்டை மண்டலம் பெரிய நிலப்பரப்பாகும். அதற்கு உட்பட்ட பகுதியே பங்கள நாடாகும்.
  • கி.மு. (அ) கி.பி 1-ஆம் நூற்றாண்டைச் சோந்த சங்க நூல்களில் பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடுகடாம் இம்மலையை நவிரமலை என்று இரண்டு இடங்களில் பதிவு செய்துள்ளது. 
  • பல்லவா்கால இந்த நடுகல் கல்வெட்டுகள் சங்க காலத்துக்கு சற்று ஏறக்குறைய 600 ஆண்டுகள் பிந்தையது. சங்க காலத்தில் கூறப்பட்ட நவிரமலை என்னும் சொல்வழக்கு கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலும் வழக்கில் இருந்ததைச் சான்றுகளோடு இக்கல்வெட்டுகள் கூறுகின்றன.
  • மேலும், பல்லவா் காலத்துடைய நாடு பிரிப்பு முறைகளை இந்நடுகல் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. பல்லவா்கள் ஆண்ட ஒட்டு மொத்தப் பகுதிக்குத் தொண்டை மண்டலம் என்று பெயா்.
  • ஆனால் இங்குத் தொண்டை மண்டலம் என குறிப்பிடப்படவில்லை. தொண்டை மண்டலத்தில் இருந்த பங்களநாடு, பங்களநாட்டில் இருந்த நவிரமலை (ஜவ்வாதுமலை) ஆகிய பிரிப்பு முறைகள் வெளிப்பட்டுள்ளன.
  • எழுத்துகளின் வடிவம் மற்றும் கோவி விசைய என்று பல்லவா்களைக் குறிப்பிடும் சொற்கள் இடம் பெற்றுள்ளன.இச்சொற்கள் சிம்ம விஷ்ணு, மகேந்திரவா்மன், நரசிம்மன் ஆகியோரில் ஒருவரை பற்றியதாகும்.
  • இக்கல்வெட்டு முழுமையாக மண்ணில் புதைந்துள்ளது. இரண்டு வரிகள் மட்டுமே வெளியில் தெரிகின்றன. இதன் நீளம் கணக்கிட முடியவில்லை. இதன் அகலம் 36 செ.மீ. ஆகும். இந்தக் கல்வெட்டும் பங்களநாடு, நவிரமலை சொற்களைத் தாங்கி நிற்கின்றன.
கம்பளா போட்டியில் சீனிவாஸ் புதிய சாதனை
  • கர்நாடக மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் சேறு நிறைந்த வயல் பகுதிகளில் எருமைக் காளைகளை விரட்டிச் சென்று இலக்கை தொடும் கம்பளா போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது மங்களூரு அருகேயுள்ள வேனூர் பெருமடாவில் சூர்ய-சந்திர ஜோடுகெரே கம்பளா போட்டி நடந்தது 
  • இதில் பங்கேற்ற சீனிவாஸ் கவுடா, 125 மீட்டர் தூரத்தை 11.21 வினாடிகளில் கடந்து முதல் பரிசை வென்றார். இதில் அவர் 100 மீட்டர் தூரத்தை 8.96 வினாடிகளில் கடந்து புதிய சாதனை நிகழ்த்தி உள்ளார்
இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் இந்தியா புறக்கணிப்பு 
  • இலங்கை இறுதிக்கட்டப் போரின்போது போர்க் குற்றங்கள் நடைபெற்ற குற்றச்சாட்டில் அந்த நாட்டு அரசுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் மார்ச் 23 அன்று கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.
  • இலங்கை விவகாரத்துக்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் மையக்குழு, வரைவுத் தீர்மானமொன்றை தாக்கல் செய்தது. பிரிட்டன், கனடா ஜெர்மனி, மலாவி, மான்டனீக்ரோ, வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றன 
  • 47 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஆணையத்தில், 22 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், ரஷ்யா உள்ளிட்ட 11 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.
காசநோய் ஒழிப்பில் சிறப்பான செயல்பாடு : கேரளத்துக்கு மத்திய அரசு விருது
  • காசநோயை ஒழிப்பதில் சிறப்பாக செயல்பட்டதற்காக, தேசிய அளவிலான விருது விருதுக்கு கேரள சுகாதாரத் துறை மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக கேரளத்துக்கு கிடைத்தது அந்தப் பிரிவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரே மாநிலம் கேரளம் ஆகும். 
  • கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் 37.5 சதவீதம் காசநோய் குறைந்துள்ளது உலகிலேயே சிறந்த காசநோய் ஆராய்ச்சிக் கட்டமைப்பைக் கொண்டுள்ள இடங்களில் ஒன்றாக கேரளம் திகழ்கிறது
உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான தேசிய வங்கி மசோதா
  • நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நிதி வழங்குவதற்கான பிரத்யேக தேசிய வங்கியை அமைக்க வழிவகுக்கும் மசோதா (National Bank for Financing Infrastructure and Development (NaBFID) Bill 2021) மார்ச் 25 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
பி.சுசீலாவுக்கு சிறப்பு கலைமாமணி விருது
  • 2019ஆம் ஆண்டுக்கான "ஜெயலலிதாவின் சிறப்பு கலைமாமணி விருதும்”, பொற்பதக்கமும் பின்னணிbபாடகி பி.சுசீலாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெறும் முதல் இசைக் கலைஞர் இவர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel