உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 2 தங்கப் பதக்கம்
- டெல்லியில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 3வது நாளான ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மன், ரிஸ்வி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி இறுதி சுற்றில் 17-11 என்ற புள்ளிகள் கணக்கில் வியட்நாம் அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
- இதேபோன்று மகளிருக்கான அணிகள் பிரிவில் யஷஸ்வின் தேஸ்வால், மனு பாகர், வேதா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 16-8 என்ற புள்ளிகள் கணக்கில் போலந்து அணியை வீழ்த்தி தங்கம் வென்றது.
- ஆடவருக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் அணிகள் பிரிவில் இந்தியாவின் தீபக் குமார், பிரதாப் சிங்தோமர், பங்கஜ் குமார் ஆகியோரைஉள்ளடக்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கம் பெற்றது.
உலக அளவிலான மிக வலுவான ராணுவம் முதலிடத்தில் சீனா, இந்தியாவுக்கு 4ம் இடம்
- உலகின் வலிமையான ராணுவங்கள் குறித்த பட்டியலை பாதுகாப்பு துறை சம்மந்தப்பட்ட மிலிட்டரி டைரக்ட் என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது.
- இதில், ராணுவத்திற்கு ஒதுக்கப்படும் பட்ஜெட், ராணுவ வீரர்கள், வாகனங்கள் எண்ணிக்கை, விமானம், கப்பல், தரைவழி படைகளின் எண்ணிக்கை, அணுசக்தி, சராசரி ஊதியம், ஆயுத பலம் ஆகியவற்றை கொண்டு 100 புள்ளிகள் அடிப்படையில் டாப்-10 நாடுகள் பட்டியலிடப்பட்டு உள்ளது.
- இப்பட்டியலில், இந்தியா 61 புள்ளிகளுடன் உலகின் வலிமையான 4வது ராணுவமாக இடம் பெற்றுள்ளது. 81 புள்ளிகளுடன் சீனா முதலிடத்தில் உள்ளது.
- அமெரிக்கா 2வது இடத்திலும் (74 புள்ளி), ரஷ்யா 3வது இடத்திலும் (69 புள்ளி) உள்ளன. பிரான்ஸ் (58 புள்ளி), சவுதி அரேபியா (56), தென் கொரியா (55), ஜப்பான் (45), இங்கிலாந்து (43), ஜெர்மனி (39) ஆகிய நாடுகள் முறையே 5 முதல் 10ம் இடம் வரை பெற்றுள்ளன.
- உலகிலேயே ராணுவத்திற்காக மிக அதிகமாக அமெரிக்கா. ரூ.53.4 லட்சம் செலவிடுகிறது. . சீனா ₹19.12 லட்சம் கோடியும், இந்தியா ₹5 லட்சம் கோடியும் ஒதுக்குகின்றன.
- அமெரிக்கா 14,141 ரஷ்யா 4,682, சீனா 3,587 போர் விமானங்கள் வைத்துள்ளன.
- ரஷ்யா 54,866, அமெரிக்கா 50,326, சீனா 41,641 பீரங்கிகள், கவச வாகனங்கள் வைத்துள்ளன.
- சீனா 406 போர் கப்பல்கள் வைத்துள்ளது. ரஷ்யா 278, அமெரிக்கா 202 போர்க்கப்பல்கள் வைத்துள்ளன.
சரத் - மணிகா ஜோடி ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி
- டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த சரத்கமல் மற்றும் மணிகா பத்ரா ஜோடி தகுதி பெற்றுள்ளது.
- கத்தார் தலைநகர் தோஹாவில் டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டிக்கான ஆசிய தகுதி சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்கள் ஜி.சத்தியன், சுதிர்தா முகர்ஜி, சரத்கமல் மற்றும் மணிக்கா பத்ரா ஆகியோர் கலந்துகொண்டனர்.
- டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் ஜி.சத்தியன், சுதிர்தா முகர்ஜி கொரிய அணியை எதிர்கொண்டனர். ஆனால் அவர்களிடம் தோல்வியைத் தழுவினார்கள்.
- பின்னர் டேபிள் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கொரிய அணியை இந்தியாவின் சரத்கமல் மணிக்கா பத்ரா ஆகியோர் எதிர்கொண்டு 8-11, 6-11, 11-.5, 11-6,13-11,11-8 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
கீழடியில் பண்டைய நெல் சேமிப்பு கலன் கண்டுபிடிப்பு
- தமிழகத்தின் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சிகளில் கண்டறியப்படும் பொருட்கள் தமிழர்களின் பண்டைய வாழ்வியல், நாகரிகம் உள்ளிட்டவற்றை உலகிற்கு வெளிக்காட்டி வருகின்றன. இந்நிலையில் கீழடியில் அகழ்வாய்வு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
- முன்னதாக பானை, கொள்கலன்கள், முதுமக்கள் தாழியின் எச்சங்கள் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது மேலும் சில பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன.
- நெல், தானியங்களை சேமிக்க பயன்படும் மண் கலன், பாசி மணிகள், சில்லுவட்டுக்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கீழடியில் விவசாயம் நடைபெற்றதும், நெல், தானியங்கள் சேமிக்கப்பட்டதையும் அறிய முடிவதாக கூறப்படுகிறது.