Type Here to Get Search Results !

TNPSC 20th MARCH 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF


டி20 தொடரை வென்றது இந்திய அணி

  • முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் சேர்த்தது. 225 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்து 36 ரன்களில் தோல்வி அடைந்தது.
  • இதன் மூலம் டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியை 2-3 என்ற கணக்கில் வென்று இந்திய அணி கோப்பையை வென்றது. 
  • 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் கொடுத்து 17 டாட் பந்துகளுடன் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஷ்வர் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்தத் தொடரில் 231 ரன்கல் குவித்த விராட் கோலி தொடர் நாயகன் விருது பெற்றார்.

பெண்களுக்கு அதிகாரம் வழங்கலை மேம்படுத்த இந்தியா உறுதி ஐ.நா. மாநாட்டில் ஸ்மிருதி இரானி உரை

  • பெண்களின் நிலை தொடர்பான ஐ.நா. ஆணையத்தின் 65-வது அமர்வின் பொது விவாதத்தில் பங்கேற்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது:
  • உலகெங்கும் உள்ள பெண்கள்மற்றும் எங்கள் மகள்களுக்கு கரோனா பரவலுக்கு பிந்தையகாலத்தில் மிகவும் நியாயமான மற்றும் சமமான உலகை கட்டமைப்பது என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியுடன் உள்ளது.
  • பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் வழங்குதலை மேம்படுத்த இந்தியா உறுதி பூண்டுள்ளது. பெண்களுக்கு வேலைவாய்ப்பு, சுய வேலைவாய்ப்பு சுகாதாரம், ஊட்டச்சத்து, பாதுகாப்பு மற்றும் கல்விக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துவதற்காக முதன்மையான திட்டங்களை இந்தியாவில் நாங்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்.
  • உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதால் 13.7 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் பிரதிநிதிகள் சமூக அளவில் பாலின பொதுக் கொள்கைகளை வகுத்து செயல்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகின்றனர். தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டங்களில் பெண்களுக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படுகிறது. 
உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் தொடரின் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் யாஷஸ்வினிக்கு தங்கம்

  • ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் தொடரின் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் யாஷஸ்வினி சிங் தேஸ்வால் 238.8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். 
  • இதே பிரிவில் பங்கேற்ற நட்சத்திர வீராங்கனை மானு பேக்கர் (236.7 புள்ளி) 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். பெலாரசின் விக்டோரியா சாய்கா (215.9) வெண்கலம் வென்றார். இந்தியாவின் நிவேதா பரமானந்தம் (193.5) 4வதாக வந்தார்.

சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி வெள்ளி வென்ற செளரப் செளத்ரி

  • தில்லியில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு சார்பில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவின் இரண்டாவது நாள் போட்டி இன்று (மார்ச் 20) தொடர்ந்தது.
  • உலகின் 4-ம் நம்பர் வீரரான இந்தியாவின் செளரப் செளத்ரி 243.2 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். அவருக்கு அடுத்தபடியாக மற்றொரு இந்திய வீரர் அபிஷேக் வர்மா 221.8 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார். மற்றொரு வீரர் ஷாஜார் ரிஸ்வி 177.1 புள்ளிகளுடன் 5-ம் இடம் பிடித்துள்ளார்.

வட்டு எறிதல் வீராங்கனை கமல்பிரீத் கவுர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

  • பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடந்து வரும் இந்தப் போட்டியில் 5-வது மற்றும் கடைசி நாளான நேற்று நடந்த பெண்களுக்கான வட்டு எறிதலில் பஞ்சாப் வீராங்கனை கமல்பிரீத் கவுர் 65.06 மீட்டர் தூரம் எறிந்து தேசிய சாதனையோடு தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். 
  • தனது முதல் முயற்சிலேயே நீண்ட தூரம் வீசி அசத்திய 25 வயதான கமல்பிரீத் கவுர் ஜூலை-ஆகஸ்டில் நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.
  • ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி இலக்கு 63.5 மீட்டர் தூரமாகும். தடகளத்தில் தனிநபர் பிரிவில் இருந்து ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்ற 10வது இந்தியர் கமல்பிரீத் கவுர் ஆவார்.
  • கமல்பிரீத் வட்டு வீசிய தூரம் புதிய தேசிய சாதனையாகவும் பதிவானது. இதற்கு முன்பு நட்சத்திர வீராங்கனை கிருஷ்ண பூனியா 2012-ம் ஆண்டில் 64.76 மீட்டர் தூரம் வீசியதே தேசிய சாதனையாக இருந்தது. அந்த 9 ஆண்டு கால சாதனையை முறியடித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel