Type Here to Get Search Results !

TNPSC 16th MARCH 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

24 வாரங்கள் வரையிலான கருவை கலைக்க அனுமதி வழங்கும் மசோதா
  • மகளிரின் 20 வார காலம் வரையிலான கருவை மட்டும் கலைக்க தற்போது நம் நாட்டில் அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் 24 வாரங்கள் வரையிலான கருவை கலைக்க அனுமதி வழங்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
  • பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிறுமியர் மாற்றுத்திறனாளி பெண்கள் ஆகியோரின் நலனுக்காக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் தாய்க்கோ அல்லது கருவில் உள்ள சிசுவுக்கோ உயிருக்கு ஆபத்து நேரிடும் பட்சத்திலும் கருவை கலைப்பதற்கான காலத்தை நீட்டிக்கவும் இந்த கோரிக்கை வைக்கப்பட்டது.
  • இதையடுத்து நிபந்தனைகளின் அடிப்படையில் 24 வாரங்கள் வரையிலான கருவை கலைக்க அனுமதி வழங்கும் வகையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் சட்ட திருத்த மசோதா - 2020 தயாரிக்கப்பட்டது.
  • இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா லோக்சபாவில் கடந்தாண்டு நிறைவேற்றப்பட்டது.
  • இந்நிலையில் இந்த மசோதாவை ராஜ்யசபாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தாக்கல் செய்தார். குரல் ஓட்டு வாயிலாக இந்த மசோதா ஒருமனதாக நிறைவேறியது. 
2019 - 20ம் ஆண்டில் உலகளவில் காற்றின் தரம் பற்றி ஆய்வு அறிக்கை
  • ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தை சேர்ந்த, ஐ.கியு., ஏர் என்ற நிறுவனம், 2019 - 20ம் ஆண்டில், உலகளவில் காற்றின் தரம் பற்றி ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது. 
  • உலகில், 30 நகரங்கள் மிகவும் மாசடைந்துள்ளன. இதில், 22 நகரங்கள், இந்தியாவில் உள்ளன.உலகில் மிகவும் மாசடைந்த நகரமாக, சீனாவின் ஸின்ஜியாங் நகரம் உள்ளது. 
  • இதற்கு அடுத்த, ஒன்பது இடங்களை, இந்தியாவின், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காஜியாபாத், புலந்த்ஷர், பிஸ்ரக், ஜலால்பூர், நொய்டா, கிரேடடர் நொய்டா, கான்பூர், லக்னோ ஆகிய நகரங்களும், ராஜஸ்தான் மாநிலத்தின் பிவாரி மற்றும் தலைநகர் டில்லி ஆகியவை பிடித்துள்ளன.
  • இதைத்தவிர, உ.பி.,யில், மீரட், ஆக்ரா, முசாபர்நகர், ஹரியானா மாநிலத்தில், பரீதாபாத், ஜிண்ட், ஹிசார், பதேஹாபாத், பந்த்வாரி, குர்கான், யமுனாநகர், ரோத்தக், தருஹீரா ஆகிய நகரங்களும், பீஹாரில் முசாபர்பூரும் அதிக மாசடைந்த நகரங்களாக உள்ளன.
  • டில்லி காற்றின் தரம், 2019 - 20ம் ஆண்டில் 15 சதவீதம் அதிகரித்திருந்தாலும், சர்வதேச அளவில் மிகவும் மாசடைந்த தலைநகர்களில், அது முதலிடத்தில் உள்ளது.

இந்தியக் கடற்படையில் இணையும் ஐஎன்எஸ் துருவ் கப்பல்

  • ஐஎன்எஸ் துருவ் கப்பலானது முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள 'பெருங்கடல் கண்காணிப்பு' கப்பல் ஆகும். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ), தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (என்டிஆர்ஓ) ஆகியவற்றால் இந்தக் கப்பல் உருவாக்கப் பட்டுள்ளது. 'இந்துஸ்தான் ஷிப்யார்ட்' நிறுவனத்தால் விசாகப்பட்டினத்தில் இக்கப்பல் கட்டமைக் கப்பட்டுள்ளது.
  • ஐஎன்எஸ் துருவ் கப்பலில் அதிநவீன மின்னணு ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளதால், இந்தியப் பகுதிகளைக் கண்காணிக்கும் செயற்கைக்கோள்களை எளிதில் அடையாளம் கண்டு ராணுவத்துக்கு தகவல் அளிக்க முடியும். 
  • அதுமட்டுமின்றி, இந்தியாவை நோக்கி வரும் எதிரி நாட்டு ஏவுகணைகளையும் ஐஎன்எஸ் துருவ் கப்பல் கண்டறிந்துவிடும். மேலும், இந்திய - பசிபிக் பிராந்திய நாடுகளில் பயன்படுத்தப்படும் ஏவுகணைகளின் உண்மையான திறனையும் இக்கப்பலால் மதிப்பிட முடியும்.
  • ஐஎன்எஸ் துருவ் கப்பல் இந்தியக் கடற்படையில் இணையும்பட்சத்தில், பெருங்கடல் கண்காணிப்பு கப்பல்களைக் கொண்ட 6-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். 
  • தற்போது வரை அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மட்டும்தான் இந்தக் கண்காணிப்பு ரக கப்பல்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் சுகாதார பாதுகாப்பு நிதியத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை சமீபத்தில் கூடியது. அப்போது, சுகாதாரம் மற்றும் கல்வித் துறைக்கான கூடுதல் வரி வருவாயை சேமிக்க, பிரதமர் சுகாதார பாதுகாப்பு நிதியம் ஏற்படுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
  • கூடுதல் வரிஒரு நிதியாண்டில், இந்த நிதியத்தில் சேகரிக்கப்படும் நிதி, அதே நிதியாண்டிற்குள், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு செலவிடப்பட வேண்டும். 
  • தவறினால், அந்த நிதி, நிதியமைச்சக கருவூலத்தில் சேர்க்கப்பட்டு விடும். தற்போது, கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கு, 4 சதவீத கூடுதல் வரி வசூலிக்கப்படுகிறது.
  • பொது கணக்கின் கீழ், சுகாதாரத் துறைக்கு அந்தந்த நிதியாண்டிற்குள் செலவிட முடியும். சுகாதாரம் மற்றும் கல்விக்கான கூடுதல் வரி வருவாய், பிரதமர் சுகாதார பாதுகாப்பு நிதியத்தில் சேர்க்கப்பட்டு, அந்தந்த துறைகளுக்கு பிரித்து அளிக்கப்படும்.
  • சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின், 'ஆயுஷ்மன் பாரத் - பிரதமர் சுகாதார திட்டம் மற்றும் ஆயுஷ்மன் பாரத் - சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் சார்ந்த சிறப்பு திட்டங்களுக்கு நிதி பயன்படுத்தப்படும்.
  • பேரிடர் காலங்களில் சுகாதாரம் சார்ந்த அவசர உதவிகளுக்கு பயன்படுத்தப்படும்.
  • வளர்ச்சி நிதி அமைப்பு:நடப்பு நிதியாண்டு மத்திய பட்ஜெட்டில், அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க, வளர்ச்சி நிதி அமைப்பு ஏற்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், வளர்ச்சி நிதி அமைப்பு ஏற்படுத்த, மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
தேசிய டேபிள் டென்னிஸ் தியா, ஸ்வஸ்திகா சாம்பியன்
  • தேசிய ஜூனியா் மற்றும் இளையோா் டேபிள் டென்னிஸ் போட்டியில் முறையே ஸ்வஸ்திகா கோஷ், தியா சிதாலே ஆகியோா் செவ்வாய்க்கிழமை சாம்பியன் ஆகினா்.
  • முன்னதாக இளையோா் பிரிவில் நடைபெற்ற அரையிறுதிகளில் மகாராஷ்டிரத்தின் தியா சிதாலே 11-8, 11-8, 11-4, 11-9 என்ற செட்களில் உத்தர பிரதேசத்தின் ராதாபிரியா கோயலை வென்றாா். கா்நாடகத்தின் யஷஸ்வினி கோா்படே 7-11, 11-3, 11-6, 11-8, 11-4 என்ற செட்களில் மகாராஷ்டிரத்தின் அனன்யா பாசக்கை வீழ்த்தினாா்.
  • பின்னா் நடைபெற்ற இறுதிச்சுற்றில் தியா சிதாலே 8-11, 11-7, 11-8, 10-12, 5-11, 11-8, 11-2 என்ற செட்களில் யஷஸ்வினி கோா்படேவை வீழ்த்தி சாம்பியன் ஆனாா்.
  • அதேபோல் ஜூனியா் பிரிவில் நடைபெற்ற அரையிறுதிச் சுற்றுகளில் தில்லியின் ஸ்வஸ்திகா கோஷ் 13-11, 11-6, 9-11, 5-11, 11-3, 11-5 என்ற செட்களில் தில்லியைச் சோந்த லக்ஷிதா நரங்கை வென்றாா்.
  • ஹரியாணாவின் சுஹானா சைனி 8-11, 5-11, 11-6, 11-8, 11-8, 11-8, 11-4 என்ற செட்களில் தமிழகத்தின் நித்யஸ்ரீ மணியை வீழ்த்தினாா். இறுதிச்சுற்றில் ஸ்வஸ்திகா கோஷ் 7-11, 11-13, 11-7, 11-4, 11-6, 11-9 என்ற செட்களில் சுஹானா சைனியை தோற்கடித்து சாம்பியன் ஆனாா்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel