Type Here to Get Search Results !

TNPSC 15th MARCH 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

பார்சல் மேலாண்மை திட்டம்
  • பயணிகள் ரயில்களில் சரக்குகளை அனுப்ப பார்சல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. முக்கிய நகரங்கள், நடுத்தர நகரங்களில் உள்ள சிறு குறு வர்த்தகர்கள், பொருட்களை குறைந்த செலவில் அனுப்புவதற்கு இந்த பார்சல்சேவை உதவுகிறது. பொதுமக்களும் தங்கள் இருசக்கர வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்களையும் அனுப்பலாம்.
  • தற்போது ரயில்வே பார்சல்சேவை 'பார்சல் மேலாண்மை திட்டம்' என்ற பெயரில் நவீனமயமாகி வருகிறது. ஏற்கெனவே 84 ரயில் நிலையங்களில் பார்சல் பதிவுமற்றும் போக்குவரத்து கணினிமயமாக்கப்பட்டுள்ளது.
  • அடுத்து 2-வதுகட்டத்தில் 143 ரயில் நிலையங்களிலும் 3-வது கட்டத்தில் 523 ரயில்நிலையங்களிலும் கணினிமயமாக்கப்பட இருக்கின்றன. இந்தத் திட்டத்துக்காக www.parcel.indianrail.gov.in என்றஇணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. 
  • பார்சல்களை அனுப்ப 120 நாட்களுக்கு முன்பு இதில் முன்பதிவு செய்து கொள்ளலாம். பதிவுபெற்ற வாடிக்கையாளர்கள் இணையதளம் மூலமாகவே பார்சல் பதிவு செய்ய விண்ணப்பம் அனுப்பலாம். 
  • கணினி மயமாக்கப்பட்ட பார்சல் அலுவலகங்களில் பதிவு செய்யும்போது அந்தப் பொருட்களின் எடை, மின்னணு எடை இயந்திரம் வாயிலாக கணிப்பொறிக்கு செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • பார்சல் பதிவு செய்த விபரம், பார்சல் குறிப்பிட்ட ரயில் நிலையத்துக்குச் சென்ற விவரம் ஆகியவைகுறுஞ்செய்திகளாக வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும். 
தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோா் பயிற்சி மற்றும் மேலாண்மை மசோதா, 2019
  • தமிழகத்தின் தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதப்படுத்ததுதல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஹரியாணா மாநிலம் குண்ட்லியில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவோா் பயிற்சி நிறுவனம் ஆகிய இந்த இரண்டு நிறுவனங்களையும் தேசிய நிறுவனங்களாக அறிவிக்கும் 'தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோா் பயிற்சி மற்றும் மேலாண்மை மசோதா, 2019' என்ற மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • இந்த இரண்டு நிறுவனங்களும் தேசிய நிறுவனங்களாக ஆக்கப்படுவதன் மூலம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடஒதுக்கீடு நடைமுறை உள்ளிட்ட அனைத்து கொள்கைகளும் இந்த நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்படும்.
  • இந்த மசோதா முன்னதாக கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு மசோதா நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 
  • மசோதாவில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்தது. அதன் மூலம், இப்போது இந்த மசோதா மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. அனைத்து உறுப்பினா்களும் இதன் மீது ஆலோசனைகளை வழங்கியதோடு, இப்போது திருப்தியையும் வெளிப்படுத்தியிருக்கின்றனா்.
  • இந்த இரண்டு நிறுவனங்களும் முழு சுதந்திரத்துடன், ஐஐடி, ஐஐஎம் நிறுவனங்களுக்கு இணையாக செயல்பட முடியும். இந்தியா பல வகையான தானியங்கள் உற்பத்தியில் முன்னணி நாடாக விளங்கியபோதும், அவற்றை பாதுகாப்பாக குளிரூட்டிகளில் சேமித்து வைத்தல், பதப்படுத்துதல் துறைகளில் தொடா்ந்து சவால்களை சந்தித்து வருகிறது. 
  • எனவே, இந்தத் துறையில் அதிக கவனம் செலுத்தி பணியாற்றவேண்டியது அவசியம். அதன் மூலம், தானியங்கள் உள்ளிட்ட விளை பொருள்கள் வீணாவதைக் குறைக்கவும், வேலைவாய்ப்பை பெருக்கவும் முடியும் என்பதோடு, வேளாண் பொருள்கள் ஏற்றுமதியையும் ஊக்குவிக்க முடியும்.
  • மத்திய அரசின் 'கிசான் சம்பதா யோஜனா' திட்டத்தின் கீழ் 107 லட்சம் டன் உணவுப் பொருள்கள் பதப்படுத்தப்பட்டிருப்பதோடு, 444 லட்சம் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மேலும், 147 லட்சம் விவசாயிகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்திருக்கின்றனா்.
  • இந்த மசோதா தவிர, சிறார் சீர்திருத்த மசோதாவை அமைச்சர் ஸ்மிருதி இரானி தாக்கல் செய்தார். அதன்படி, சிறார் சீர்திருத்த பள்ளிகளை கண்காணிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்கள், கூடுதல் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • மேலும், சுரங்கங்கள் மற்றும் தாதுவளங்கள் மேம்பாடு மற்றும் முறைப்படுத்துதல் திருத்த மசோதாவை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மக்களவையில் தாக்கல் செய்தார். 
  • கலங்கரை விளக்கம் கப்பல்களுக்கு வழிகாட்டியாக இருப்பதால், அதன் பெயரை கடல் வழிகாட்டுதல்' என்று மாற்றி கடல் வழிகாட்டுதல் உதவி மசோதாவை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தாக்கல் செய்தார். அகமதாபாத், கவுகாத்தி, ஹாஜிபூர், ஐதாராபாத், கொல்கத்தா, ரேபரேலி உள்ளிட்ட 6 மருந்தக நிறுவனங்களுக்கு தேசிய அங்கீகாரம் அளிக்கும் தேசிய மருந்தக கல்வி மற்றும் ஆராய்ச்சி மசோதாவை அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்தார். 
  • 74 சதவீத வெளிநாட்டு நேரடி முதலீடுகளை விற்க வகை செய்யும் வகையில் காப்பீடு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரும் மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.

கிராமி விருது 2021

  • இசைத் துறைக்கான மிகப் பெரிய 'கிராமி' விருதுகளை, இந்தாண்டு அதிகமான பெண்கள் அள்ளிச் சென்றனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், 63வது கிராமி விருது விழா, நடைபெற்றது. 
  • கொரோனா விதிகளை பின்பற்றி நடந்த இந்த விழாவில், ஆண்களை விட பெண்கள் அதிக விருதுகளை பெற்றனர்.ஒன்பது பிரிவுஇதில், பாடகி பியான்ஸ், மிக அதிக விருதுகளை வென்று, கிராமி வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார். 
  • இவர், 'சேவேஜ், பிளாக் பரேட், பிரவுன் ஸ்கின் கேர்ள்' உட்பட, பாடல், வீடியோ என, ஒன்பது பிரிவுகளில் தேர்வாகி, அவற்றில் நான்கில் விருது களை அள்ளிச் சென்றார். இதன் மூலம், மொத்தம், 28 விருதுகளை வென்று, கிராமி வரலாற்றில் அதிகம் விருது வென்ற பெண் என்ற சிறப்பை, பியான்ஸ் படைத்துள்ளார்.
  • இவர், தற்போது, 31 கிராமி விருதுகளை வென்ற, இசையமைப்பாளர், சர்.ஜார்ஜ் சோல்டிக்கு அடுத்த இடத்தில் உள்ளார். பியான்சுடன் இணைந்து பாடிய அவரது, ஒன்பது வயது மகள், புளு ஐவி கார்ட்டருக்கு, சிறந்த இணை பாடகிக்கான கிராமி விருது கிடைத்துள்ளது. 
  • இதன் மூலம் குறைந்த வயதில் கிராமி விருது பெற்ற இரண்டாவது பெண் என்ற சிறப்பை, புளு ஐவி கார்ட்டர் பெற்றுள்ளார். இந்த ஆண்டிற்கான சிறந்த இசை ஆல்பமாக, டெய்லர் ஸ்விப்ட்டின், 'போக்லோர்' தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • மூன்றாவது முறையாக இவ்விருது வென்ற முதல் பெண் என்ற சிறப்பை, டெய்லர் ஸ்விப்ட் பெற்று உள்ளார். இதற்கு முன், ஸ்டீவ் வன்டர், பிராங்க் சினாட்ரா, பால் சைமன் ஆகியோர் தான் மூன்று முறை விருதுகளை வென்றுள்ளனர். 
  • விரைவில் வெளியாக உள்ள, 'நோ டைம் டு டை' ஜேம்ஸ்பாண்ட் படத்தின் 'டைட்டில்' பாடலுக்காக, எய்லிஷ் விருது வென்றார். முதன் முறையாக, வெளியாகாத ஒரு படத்தின் பாடலுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
  • புதிய பாடகிக்கான விருதை, 'வேப்' பாடலுக்காக, மெகன் தட்டிச் சென்றார். முக கவசம்இரட்டையர் பிரிவில், 'ரெய்ன் ஆன் மீ' பாடலுக்கான விருது, லேடி காகா, அரியனா கிராண்டே ஆகியோருக்கு கிடைத்தது. 
  • இந்தாண்டு, சிதார் இசைக் கலைஞர், ரவி சங்கரின் மகள், அனுஷ்கா சங்கர், மும்பையைச் சேர்ந்த, பிரியதர்ஷனி ஆகியோரின் இசை ஆல்பங்கள், விருதுக்கு தேர்வான போதிலும், வெற்றி வாய்ப்பை இழந்தன. 
டெல்லி தேசிய தலைநகர பிராந்திய திருத்த மசோதா (என்சிடிடி) 2021
  • ஆட்சி அதிகாரத்தில் டெல்லி துணைநிலை ஆளுநரின் பங்கு மற்றும் அதிகாரத்தை வரையறுக்கும் திருத்த மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி, டெல்லி தேசிய தலைநகர பிராந்திய திருத்த மசோதா (என்சிடிடி) 2021ஐ மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
  • அதன்படி, முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தில்,
  • சட்டத்தின் 21வது பிரிவில், கூறப்பட்டுள்ள அரசு' என்ற வார்த்தை துணைநிலை ஆளுநரை' குறிப்பதாக மாற்றப்பட வேண்டும். இதற்காக பிரிவு 21ல் புதிதாக துணைப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். ஏனெனில், உச்ச நீதிமன்றம் அரசு என்று குறிப்பிட்டது துணைநிலை ஆளுநரையே சேரும்.
  • சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட எந்தவொரு மசோதாவையும் ஏற்று கொள்ளவோ, நிறுத்தி வைக்கவோ அல்லது ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கவோ துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று கூறப்பட்டுள்ள 24வது பிரிவுடன், சட்டப்பேரவை அதிகார எல்லைக்கு அப்பாற்பட்ட எந்தவொரு விஷயத்தையும் வெளியே சொல்லக் கூடாது என்ற புதிய உட்பிரிவு கூடுதலாக சேர்க்கப்பட வேண்டும்.
  • 33வது துணைப்பிரிவு (1)ல் அதன் அலுவல் நடத்தை தொடர்பான' என்ற வார்த்தைகளுக்கு பிறகு, `மக்கள் சபையின் அலுவல் நடத்தை நடைமுறை மற்றும் விதிகளை பாதிப்பதாக இருக்காது,' என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட வேண்டும்.
  • திருத்த மசோதா அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, தலைநகரின் அன்றாட நிர்வாகம் அல்லது நிர்வாக முடிவு தொடர்பாக விசாரணை நடத்த சட்டப்பேரவைக்கோ அல்லது அதன் குழுவுக்கோ அதிகாரம் உண்டு என்று உருவாக்கப்பட்ட விதிகள் ரத்து செய்யப்பட வேண்டும்.
  • துணைநிலை ஆளுநர் அல்லது அவரது அதிகாரிகளால் எடுக்கப்படும் அனைத்து நிர்வாக நடவடிக்கை முடிவுகளையும் துணைநிலை ஆளுநர் கூறியதாக எடுத்து கொள்ள வேண்டும்.
  • அரசியலமைப்பு சட்டம் 239ஏஏ.ன் கீழ் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, பேரவை செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்ட சில விஷயங்களில் துணைநிலை ஆளுநர் விதிகளை உருவாக்கலாம். 
  • தமிழக நிறுவனத்துக்கு தேசிய அங்கீகாரம் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் உள்ள தமிழ்நாடு உணவு தொழில்நுட்ப நிறுவனம், அரியானாவில் குண்ட்லியில் உள்ள உணவு தொழில்நுட்ப நிறுவனங்களை தேசிய நிறுவனங்களாக அறிவித்து மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
"நாயணவியல் அறிஞர்” இரா.கிருஷ்ணமூர்த்தி 
  • இவர் சங்க காலத்தில் பழந்தமிழ் மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களைக் கண்டறிந்து பெரும் ஆய்வு மேற்கொண்டவர். பிரிட்டனில் உள்ள “லண்டன் ராயல் நாணயவியல் கழகம்” (The Royal Numismatic Society) இவரை சிறப்பிக்கும் வகையில் கௌரவ உறுப்பினராக அங்கீகரித்துள்ளது
  • நாளிதழில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் முதன்முதலில் கண்டவர், கணினியில் தமிழ் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் எழுத்துருக்களை உருவாக்கியவர் என்ற பெருமையையும் கொண்டவர் நாணயவியல் தொடர்பாக 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். 
  • தமிழுக்கு இவர் செய்த நற்பணியைப் பாராட்டி 2012-13-ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது” குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது தமிழ் "செம்மொழி” என்ற தகுதியைப் பெற, இவரது நாணயவியல் கண்டுபிடிப்புகளை தமிழக அரசு முக்கிய வரலாற்று ஆதாரமாகச் சமர்ப்பித்தது.
வானிலுள்ள இலக்குகளை தாக்கி அழிப்பதற்கான புதிய தொழில்நுட்பம் சோதனை 
  • வானிலுள்ள இலக்குகளை, வானிலிருந்து செலுத்தப்படும் ஏவுகணைகள் மூலமாக துல்லியமாகத் தாக்கி அழிப்பதற்கான புதிய தொழில்நுட்பத்தை ஒடிசாவின் பாலேசுவரம் மாவட்டத்தில் உள்ள சந்திப்பூர் பகுதியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (DRDO) வெற்றிகரமாக சோதனை செய்தது.
  • இந்தத் தொழில்நுட்பத்தில், திட எரிபொருளைக் கொண்ட குழாய் வடிவ இயந்திரமானது ஏவுகணையுடன் (Solid Fuel-Ducted Ramjet (SFDR) technology missile propulsion system) இணைக்கப்படும். 
  • இது ஏவுகணையை ஏவுவதற்கு வழக்கமாகப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தைக் காட்டிலும் திறன்மிக்கதாகும். வானிலுள்ள இலக்குகளை தரையிலிருந்து தாக்கி அழிக்கும் ஏவுகணைகளிலும் இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும் தற்போது இந்தத் தொழில்நுட்பத்தை குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளே பயன்படுத்தி வருகின்றன.

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel