உலகின் சிறந்த மருத்துவமனைகளில் காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனை தேர்வு
- உலகளாவிய தர ஆராய்ச்சி நிறுவனமான ஸ்டாடிஸ்டா நிறுவனம், நியூஸ் வீக் இதழ் இணைந்து 2021-ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த மருத்துவமனைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
- இந்த பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா மற்றும் இந்தியா உள்ளிட்ட 25 நாடுகளின் மருத்துவமனைகள் இடம்பெற்றுள்ளன. மருத்துவமனைகளின் நிலையான சிறப்பு செயல்பாடு, சிறந்த மருத்துவர்கள், செவிலியர் பணிவிடை, அதிநவீன தொழில் நுட்பம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
- உலகின் சிறந்த மருத்துவமனைகளாக இந்தியாவில் இருந்து 11 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், சிறந்த குழந்தைகள் மருத்துவமனையாக சென்னையில் செயல்பட்டு வரும் காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
விஜய் ஹசாரே டிராபி 4வது முறையாக மும்பை சாம்பியன்
- விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் பைனலில் உத்தர பிரதேச அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை அணி, 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.
- டெல்லி, அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த உத்தர பிரதேச அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 312 ரன் குவித்தது.
- மும்பை பந்துவீச்சில் தனுஷ் கோட்டியான் 2, சோலங்கி 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 50 ஓவரில் 313 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, கேப்டன் பிரித்வி ஷா, ஆதித்யா தாரே, ஷிவம் துபே ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 41.3 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 315 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது.
- 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற மும்பை அணி, 4வது முறையாக விஜய் ஹசாரே டிராபியை கைப்பற்றியது. அந்த அணியின் ஆதித்யா தாரே ஆட்ட நாயகன் விருதும், பிரித்வி ஷா தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.
- நடப்பு தொடரில் பிரித்வி 8 இன்னிங்சில் 827 ரன் குவித்து (அதிகம் 227*, சராசரி 165.40, சதம் 4, அரை சதம் 1) முதலிடம் பிடித்தார். கர்நாடகாவின் படிக்கல் (737), சமர்த் (613) அடுத்த இடங்களை பிடித்தனர்.
ஐஎஸ்எல் இறுதிப்போட்டி சாம்பியன் பட்டம் வென்ற மும்பை சிட்டி அணி
- கோவாவில் நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து போட்டி தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை சிட்டி, ஏ.டி.கே.மோகன் பகான் எப்சி அணிகள் மோதின. இதில் மோகன் பகான் அணியின் வீரர் வில்லியம்ஸ் 18வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார்.
- தொடர்ந்து 29வது நிமிடத்தில் மோகன் பகான் அணியின் வீரர் டிரி, same side கோல் அடித்ததால், முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் ஒன்றுக்கு- ஒன்றுக்கு என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.
- தொடர்ந்து இரண்டாவது பாதியில் இருஅணிகளும் கோல் அடிக்க கடுமையாக முயன்றன. இந்நிலையில் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மும்பை வீரர் பார்தோலெமெவ் பாஸ் செய்த பந்தை பிபின் சிங் வெற்றிக்கான கோலினை அடித்தார்.
- இதனையடுத்து மும்பை அணி 2-க்கு1 என்ற கணக்கில் மோகன்பகான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
- தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றாா். இதன்மூலம், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற இந்தியாவின் முதல் வாள்வீச்சு போட்டியாளா் என்ற சாதனையை அவா் படைத்துள்ளாா்.
- சரிசெய்யப்பட்ட அதிகாரப்பூா்வ தரவரிசையின் அடிப்படையில் பவானி தேவி ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றாா். ஆசியா மற்றும் ஓசியானியா பிராந்தியங்களைச் சோந்தோா் டோக்கியோ ஒலிம்பிக்கில் தகுதிபெறுவதற்காக உலகத் தரவரிசையின் அடிப்படையில் இரு இடங்கள் இருந்தன.
- உலகத் தரவரிசையில் தற்போது 45-ஆவது இடத்திலிருக்கும் பவானி தேவி, அதில் ஓா் இடத்தை உறுதி செய்துள்ளாா்.
- பயணிகளுக்கு புத்தாண்டு பரிசாக, ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு மேம்படுத்தப்பட்ட இ-டிக்கெட் இணையதளம் மற்றும் கைபேசி செயலியை இந்திய ரயில்வே அமைச்சகம் தொடங்கியுள்ளது.
- பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற தொலைநோக்குப் பார்வையின்படி, இந்திய ரயில்வே, தனது இ-டிக்கெட் இணையதளம் www.irctc.co.in மற்றும் ஐஆர்சிடிசி ரயில் இணைப்பு கைபேசி செயலி ஆகியவற்றை புதுப்பித்து மேம்படுத்தியுள்ளது.
- சிறப்பான அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட இ-டிக்கெட் இணையதளம் மற்றும் கைபேசி செயலியை ரயில்வே அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று தொடங்கி வைத்தார். இது அனைத்து பயணிகளுக்கும் ரயில்வேயின் புத்தாண்டு பரிசாக இருக்கும்.
- தடையின்றி இ-டிக்கெட் சேவைகளை வழங்க அடுத்த தலைமுறைக்கான இ-டிக்கெட் முறை கடந்த 2014ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த மேம்படுத்தப்பட்ட இ-டிக்கெட் இணையதளம் மற்றும் கைபேசி செயலி ரயில் பயணிகளுக்கு அடுத்த கட்ட சேவைகள் மற்றும் அனுபவத்தை வழங்கும்.
- ரயில்வே பயணிகளை கருத்தில் கொண்டு, உலகத்தரத்திலான இந்த இ-டிக்கெட் முன்பதிவு இணையதளம் வடிவமைக்கப்பட்டது. இதில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள், உணவு, தங்கும் இடம் ஆகியவற்றையும் முன்பதிவு செய்வதற்கான வசதிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
- இந்த இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நபர் உள்நுழைந்ததும், உணவு முன்பதிவு, தங்கும் அறைகள் மற்றும் விடுதிகள் முன்பதிவு ஆகிய வசதிகளும் ஒருங்கிணைக்கப்படும். பயணிகளின் அனைத்து தேவைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு கிடைக்கும்படி இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
- பயணி ரயில்வே நிலையத்துக்குள் நுழைந்ததும், அவருக்கு தேவையான ஆலோசனைகள், செயற்கை நுண்ணறிவு மூலம் வழங்கப்படும். பிளாட்பாரங்களை தேடுதல் போன்றவற்றில் உள்ள சிரமத்தை இது வெகுவாக குறைக்கும். டிக்கெட் முன்பதிவு செய்வதில் நேரத்தை மிச்சப்படுத்தும்.
- கட்டணத்தைத் திரும்பப் பெறும் நிலவரங்களையும் இந்த இணையதளம் மற்றும் செயலியில் எளிதில் அறிந்து கொள்ளலாம். இதற்கு முன், இந்த அம்சம் எளிதாக இல்லை.
- வழக்கமான அல்லது பிடித்த பயணங்களை எளிதாக முன்பதிவு செய்ய முடியும். ரயில்களை தேடுதல் மற்றும் தேர்ந்தெடுத்தல் முறையும் எளிதாக்கப்பட்டுள்ளது. ரயில் முன்பதிவு குறித்து அனைத்து விவரங்களும் ஒரே பக்கத்தில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் மிக எளிதாக ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும்.
- கம்ப்யூட்டர்களை அதிகம் பயன்படுத்தாதவர்களும், எளிதில் முன்பதிவு செய்யலாம். ரயிலில் இருக்கைகள் நிலவரத்தை அறிய புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ரயில்களில் டிக்கெட் நிலவரத்தை தாமதமின்றி தெரிவிக்கும்.
- அடுத்தடுத்த தேதிகளில் டிக்கெட்டுகளின் நிலவரமும், அதே பக்கத்தில் தெரிந்து கொள்ள முடியும். பணம் செலுத்தும் போது, பயண விவரங்களும் தெரிவிக்கப்படும். இது பயணம் செய்பவர் தனது பயண விவரத்தை சரிபார்த்துக் கொள்ள உதவும்.
- இந்த இணையதளத்தில் பாதுகாப்பு வசதிகள் அதிகம் உள்ளன. இந்த இணையதளம் மற்றும் செயலியில் உள்ள அம்சங்கள் அனைத்தும் மிகச் சிறந்தவை. ஈடு-நிகர் இல்லாத வகையில் இந்த இணையதளம் மற்றும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
- தற்போது, ஐஆர்சிடிசி இ-டிக்கெட் இணையளத்தை 6 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர். நாள் ஒன்றுக்கு 8 லட்சம் டிக்கெட்டுகளுக்கு மேல் முன்பதிவு செய்யப்படுகிறது. 83 சதவீத முன்பதிவு டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படுகின்றன.
- நேரடி ரயில் போக்குவரத்து இல்லாத இடங்களில், இணைப்பு ரயில்களில் முன்பதிவு செய்வதற்காக ‘ஸ்மார்ட் முன்பதிவு’ அறிமுகம் செய்வது குறித்தும் ஐஆர்சிடி பணியாற்றிக் கொண்டிருக்கிறது.