Saturday, 13 March 2021

TNPSC 12th MARCH 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

'குவாட்' மாநாடு

 • இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பங்கேற்கும், 'குவாட்' மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், உரையாற்றினர்.
 • சீனாவுடன் மோதல் போக்கு உடைய நாடுகளான, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து, 'குவாட்' எனப்படும், நாற்கர பாதுகாப்பு பேச்சுக்கான அமைப்பை, 2017ல் புதுப்பித்தன. 
 • ராணுவ பயிற்சிகடந்த ஆண்டு நவம்பரில், குவாட் நாடுகள் ஒன்றிணைந்து, வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில், கூட்டாக ராணுவ பயிற்சி நடத்தின. இந்நிலையில், குவாட் நாடுகளின் தலைவர்கள் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்தது.
 • இதில், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோர் பங்கேற்றனர்.
 • அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்ற பின், முதல் முறையாக பிரதமர் மோடியை, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக சந்தித்தார்.

சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் மித்தாலி 10,000 ரன்கள்

 • சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 10,000 ரன் குவித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையும், உலக அளவில் இந்த சாதனையை நிகழ்த்திய 2வது வீராங்கனை என்ற பெருமையும் இந்திய அணி கேப்டன் மித்தாலி ராஜ் (38 வயது) வசமாகி உள்ளது. 
 • தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக நேற்று நடந்த 3வது ஒருநாள் போட்டியில் அவர் 36 ரன் எடுத்தபோது இந்த மைல்கல்லை எட்டினார். 1999ல் இந்திய அணியில் இடம் பிடித்த மித்தாலி இதுவரை 10 டெஸ்ட் (663 ரன்), 212 ஒருநாள் (6974 ரன்), 89 டி20ல் (2364 ரன்) விளையாடி உள்ளார். 
 • மகளிர் கிரிக்கெட் ரன் குவிப்பில் இங்கிலாந்தின் சார்லோட்டி எட்வர்ட்ஸ் 10,273 ரன் (316 இன்னிங்ஸ்), மித்தாலி ராஜ் 10,001 ரன் (291 இன்னிங்ஸ்), நியூசிலாந்தின் சூஸி பேட்ஸ் 7849 ரன் (238 இன்னிங்ஸ்), வெஸ்ட் இண்டீசின் ஸ்டெபானி டெய்லர் 7816 ரன் (229 இன்னிங்ஸ்), ஆஸ்திரேலியாவின் மெக் லான்னிங் 6,900 ரன் (191 இன்னிங்ஸ்) ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர்.

எழுத்தாளர் இமையத்தின் 'செல்லாத பணம்' நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது

 • இமையம் எழுதிய செல்லாத பணம் என்ற நாவலுக்கு இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாவலை க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
 • கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் 1964ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதியன்று பிறந்தார் இவர். பெற்றோர் சூட்டிய பெயர் அண்ணாமலை. தற்போது அரசுப் பள்ளிக்கூட ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். 
 • 'கோவேறு கழுதைகள்' என்ற நாவலின் மூலம் தமிழ் எழுத்துலகில் பரவலாக அறியப்பட்ட இமையம், 'கோவேறு கழுதைகள்' , 'ஆறுமுகம்', 'எங் கதெ', 'செடல்', 'செல்லாத பணம்' ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். 
 • இவர் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு 'மண் பாரம்', 'கொலைச்சேவல்', 'சாவு சோறு', 'வீடியோ மாரியம்மன்', 'நன்மாறன் கோட்டைக் கதை' ஆகிய தொகுப்புகளாக வெளியாகியிருக்கின்றன.

சர்வதேச மகளிர் துணிவு விருது கவுசல்யா சங்கருக்கு அமெரிக்க தூதரகம் கவுரவம்

 • சென்னையில் செயல்பட்டுவரும் அமெரிக்க தூதரகம் ஏற்பாடு செய்த "தைரியமான பெண்கள் நாளைய உலகுக்கு வழிகாட்டுவார்கள்" என்ற நிகழ்ச்சியில் அமெரிக்க துணைத் தூதர் ஜூடித் ரேவின் கலந்துகொண்டு சாதி ஒழிப்புப் போராளியும், மனித உரிமை பாதுகாப்பு ஆர்வலருமான கவுசல்யா சங்கரை கவுரவித்தார்.
 • அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் "சர்வதேச மகளிர் துணிவு" விருதுக்காக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் பரிந்துரைக்கப்பட்டிருப்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கௌசல்யா சங்கர்.
 • குடும்பம், சமூகம், மற்றும் தேசம் என பல்வேறு தளங்களில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கத்துடன் வீரத்தையும், மனோதரியத்தையும், தலைமை பண்புகளையும் வெளிப்படுத்தும் பெண்களை கௌரவிப்பதே இந்த விருதின் நோக்கம்.

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a comment