Type Here to Get Search Results !

பிப்ரவரி 24 - இ.எஸ்.ஐ.சி. நிறுவன தினம் / FEBRUARY 24 - ESI FOUNDATION DAY


  • இ.எஸ்.ஐ.சி. எனப்படும் தொழிலாளர் அரசு காப் பீட்டுத் திட்டம் சமூக பாதுகாப்புடன் ஒருங்கிணைந்த பல்நோக்கு நலத் திட்டமாகும். இது அரசு ஈட்டுறுதிக் கழகமாக (Employee's State Insurance Corporation) 1952ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது அந்த தொடக்க தினமே இந்தியாவில் ஆண்டுதோறும் இ.எஸ்.ஐ.சி. நிறுவன தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
  • இந்த அமைப்பு நாடு முழுவதும் உள்ள குறைந்த வருவாய்ப் பிரிவு பணியாளர்களுக்குத் தேவையின் அடிப்படையில் சமூக காப்பீடு அளிக்கும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டது. 
  • இது தொழிலாளர் அரசு காப்பீட்டுச் சட்டத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு அவ்வப்போது நேரிடும் உடல்நலக் குறைவு, பெண் தொழிலாளர்களுக்கான மகப்பேறு, வேலை செய்யும்போது ஏற்படும் விபத்தினால் உண்டாகும் தற்காலிகமான அல்லது நிரந்தரமான ஊனம் மற்றும் மரணம், சம்பவிக்கும் காலங்களில் பண உதவி வழங்கியும் தொழிலாளர்கள் தாம் செய்யும் வேலையால் ஏற்படும் உடல் சுகவீனம் தற்காலிக இயலாமை போன்ற காலங்களில் தொழிலாளர்களுக்கும் அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும் உரிய முழு மருத்துவச் சேவையுடன் கூடிய பராமரிப்பை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு, சட்டச்செயல் வடிவம் கொண்டு அமல் செய்யப்பட்டுள்ளது
  • தொழிலாளர்கள் மட்டுமே, இ.எஸ்.ஐ. திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உரிய பயன்களை பெற்றுக் கொள்ளும் வசதி மத்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 
  • ஒரு மாத சம்பளம் ₹15,000-க்கும் மேல் ஊதியம் பெறும் தொழிலாளர் களுக்கு இ.எஸ்.ஐ. சட்ட விதிகள் மற்றும் அமலாக்கங்கள் தற்போது நடைமுறைப்படுத்த வழிவகைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel