Type Here to Get Search Results !

TNPSC 5th FEBRUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

வரும் நிதி ஆண்டில் ஜிடிபி வளர்ச்சி 10.5% ஆக உயரும்: இந்திய ரிசர்வ் வங்கி கணிப்பு

  • கரோனா தடுப்பு ஊசி போடும் பணிகள் தொடங்கிய நிலையில் வளர்ச்சி விகிதமும் கணிசமாக உயர்ந்துள்ளது என ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
  • வரும் நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் இந்தியாவின் ஜிடிபி 8.3 சதவீதம் முதல் 26.2 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது. நிதி அமைச்ச கம் வளர்ச்சி விகிதம் 11 சதவீதம் என்று கணித்துள்ளது. 
  • ஆனால் ரிசர்வ் வங்கி கணித்துள்ள ஜிடிபி 10.2 சதவீதமாக இருக்கும் என தெரிகிறது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் ஆங்கில எழுத்து வி போன்று இருக்கும் என பட்ஜெட்டுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் சட்டப்பேரவையில் 8 மசோதாக்கள் நிறைவேற்றம்

  • விழுப்புரத்தில் ஜெயலலிதா பெய ரில் பல்கலைக்கழகம் அமைப்பது, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடைவிதிப்பது உள்ளிட்ட 8 சட்ட மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன.
  • கடந்த 2020 செப்டம்பர் 16-ம் தேதி சட்டப்பேரவையில் விதி 110-ன்கீழ் அறிக்கை அளித்த முதல்வர் பழனிசாமி, திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்பட்டு, விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும். புதிய பல்கலைக்கழகம் இந்த கல்வி ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும்' என்று அறிவித்தார்.
  • அதன்படி, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்பட்டு, விழுப்புரத்தில் 'டாக்டர்ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம்'என்ற புதிய பல்கலைக்கழகத்தை நிறுவ அரசு முடிவு செய்துள்ளது. 
  • விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகியமாவட்டங்களில் உள்ள கல்லூரிகள், டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தில் இணைக்கப்படும்.
  • அதைத் தொடர்ந்து வரதட்சணை மரணங்களுக்கான குறைந்தபட்ச சிறைத் தண்டனையை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாகவும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச சிறைத் தண்டனையை 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாகவும், அதிகபட்ச சிறைத் தண்டனையை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாகவும் அதிகரிக்க வழி செய்யும் சட்ட மசோதாவும் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
  • இதுதவிர 2021 அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா, 2021 தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) திருத்தச் சட்ட மசோதா ஆகியவையும் நேற்று நிறைவேற்றப்பட்டன.
  • மேலும், சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தனி அலுவலர்கள் பதவிக் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு, தேர்தல் நடை பெறாத மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்கள் பதவிக் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு,கூட்டுறவுச் சங்கங்களில் நடக்கும் முறைகேடுகள், கையாடல்களை விரைந்து வெளிக்கொண்டுவருவதற்கான புலன் விசாரணை காலவரம்பை குறைக்க வழி செய்யும் சட்ட மசோதா என மொத்தம் 8 சட்ட மசோதாக்கள்சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன.

நாட்டில் முதல் முறையாக இடி, மின்னல் ஆய்வுக்கு ஒடிசாவில் தனி மையம்

  • இடி, மின்னலுடன் கூடிய பெரும் மழைதாக்குதலால் ஏற்படும் உயிரிழப்புக்கள், சேதங்களை தவிர்க்கும் நோக்கத்துடன் இது பற்றி தனியாக ஆய்வு செய்வதற்காக, நாட்டில் முதல் முறையாக ஒடிசாவில் ஆராய்ச்சி சோதனை களம் அமைக்கப்பட உள்ளது. இதேபோல், போபால் அருகே பருவமழை சோதனை களம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 
  • மத்திய புவி அறிவியல் அமைச்சகம், இந்திய வானிலை ஆய்வு மையம், டிஆர்டிஓ, இஸ்ரோ ஆகியவை இணைந்து இந்த திட்டங்களை செயல்படுத்த உள்ளன.

விவசாயிகள் பயிர்க் கடன் ரூ.12,110 கோடி தள்ளுபடி

  • ''கூட்டுறவு வங்கிகளில், 16.43 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்க் கடன், 12 ஆயிரத்து, 110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்,'' என, சட்டசபையில் நேற்று முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார்.ச
  • பை விதி, 110ன் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்பு:விவசாயிகளுக்கு துயர் ஏற்படும் போதெல்லாம், ஜெ., அரசு உதவிக்கரம் நீட்டி, அவர்களை காப்பதில் முன்னிலையில் இருந்து வருகிறது.அதனால் தான், 2016ல், ஜெ., மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், 2016 மார்ச் 31 வரை நிலுவையில் இருந்த, 5,319 கோடி ரூபாய், விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார். அதனால், 12.02 லட்சம் சிறு, குறு விவசாயிகள் பயன் பெற்றனர்.கடந்த, 2017ல் ஏற்பட்ட கடும் வறட்சி காரண மாக, இழப்பை சந்தித்த விவசாயிகளுக்கு, 2,247 கோடி ரூபாய், வறட்சி நிவாரணத் தொகையாக அரசு வழங்கியது. 
தேர்தல் கமிஷனுடன் தபால் துறை ஒப்பந்தம்
  • வாக்காளர் பட்டியலில், புதிதாக பெயர் சேர்க்கப்பட்டவர்களுக்கு, தபால் வழியாக, இலவசமாக அடையாள அட்டை வழங்குவதற்காக, தபால் துறையுடன், தேர்தல் கமிஷன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
  • புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு, இலவசமாக வண்ண அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதை, தபால் துறை உதவியுடன், விரைவு தபாலில், அவர்களின் வீடுகளுக்கு அனுப்ப உள்ளோம். 
  • இதற்காக, தபால் துறையுடன், ஐந்து ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.தமிழகத்தில் புதிதாக, 21.39 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
  • தொடர்ந்து, ஐந்து ஆண்டுகளுக்கு, புதிதாக விண்ணப்பிக்கும் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை, தபால் வழியே, அவர்களின் வீடுகளுக்கு அனுப்பப்படும்.
மாற்றுப் பாலினத்தவருக்கான தையல் கூட்டுறவு சங்கம்; விசேஷ செயலி: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
  • 'தமிழகத்தில் சமூக நலத்துறை சார்பில், ஏழைப் பெற்றோரின் மகள், ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்துகொள்ளும் விதவையர், ஏழை விதவையரின் மகள், கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியர் ஆகியோர் பயன்பெறும் வகையில், ஐந்து வகையான திருமண நிதியுதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
  • இத்திட்டங்களின் கீழ் பட்டதாரியல்லாதோருக்கு ரூ.25,000/- நிதியுதவியும், பட்டம் / பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50,000/- நிதியுதவியும் வழங்கப்படுகிறது. மேற்படி நிதியுதவித் தொகையுடன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மூலம் திருமாங்கல்யம் செய்வதற்கு தங்க நாணயம் வழங்கும் திட்டத்தைக் கடந்த 17.05.2011 முதல் தொடங்கி வைத்து, 4 கிராம் (22 காரட்) தங்க நாணயம் வழங்கப்பட்டு வந்தது.
  • பின்னர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 23.05.2016 அன்று திருமாங்கல்யம் செய்வதற்கு வழங்கப்பட்டு வரும் தங்க நாணயத்தை 8 கிராமாக உயர்த்தினார். மேற்கண்ட திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ், 2011-2012ஆம் ஆண்டு முதல் 2019-2020ஆம் நிதியாண்டு வரை, மொத்தம் 12,50,705 பயனாளிகளுக்கு 1,791 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் 6,099.08 கிலோ தங்கமாகவும், நிதியுதவியாக ரொக்கம் 4,371 கோடியே 22 லட்சம் ரூபாய், என மொத்தம் 6,162 கோடியே 27 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
  • மேலும், 2020-2021ஆம் நிதியாண்டிற்குத் திருமண நிதியுதவித் திட்டத்திற்காக 95,739 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 726 கோடியே 31 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கிடும் விதமாக, முதல்வர் பழனிசாமி 7 பயனாளிகளுக்குத் தங்க நாணயங்களும் திருமண நிதியுதவித் தொகையையும் வழங்கித் தொடங்கி வைத்தார்.
  • சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையின் 2020-21ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், மூன்றாம் பாலினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், பொருளாதார முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் வகையிலும், மூன்றாம் பாலின உறுப்பினர்கள் கொண்ட தையல் கூட்டுறவு சங்கம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 100 மூன்றாம் பாலினரைக் கொண்டு 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் மூன்றாம் பாலினர் தையல் கூட்டுறவு சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்த மூன்றாம் பாலினர் தையல் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 4 பேருக்குத் தமிழ்நாடு முதல்வர் விலையில்லா தையல் இயந்திரங்களை வழங்கினார். இதன் மூலம், மூன்றாம் பாலினருக்குத் தையல் தொழில் பயிற்சி அளித்துப் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் விலையில்லாச் சீருடை திட்டத்தின் கீழ் சீருடை தைத்து வழங்கும் பணியினை மற்ற தையல் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குவது போன்று மூன்றாம் பாலினருக்கும் வழங்கி அவர்களும் நிரந்தர வருமானம் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.
  • சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையின் 2019-2020ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், மூன்றாம் பாலினர், அரசின் நலத் திட்டங்களைப் பயன்படுத்தி சமூகப் பொருளாதார மேம்பாடு அடையும் வகையில் 10 லட்சம் ரூபாய் செலவில் கைபேசி செயலி ஒன்று உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 
  • அதன்படி, மூன்றாம் பாலினர் தங்களது தனிப்பட்ட விவரங்களைப் பிறர் அறிந்திடாத வண்ணம் தாமாகவே முன்வந்து பதிவு செய்வதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேகமான கைபேசி செயலியைத் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel