Type Here to Get Search Results !

TNPSC 19th FEBRUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ட்ரோன்களை பயன்படுத்த வேளாண் அமைச்சகத்துக்கு அனுமதி

  • நாடு முழுவதும் கிராம பஞ்சாயத்து அளவில் விவசாய உற்பத்தியை மதிப்பிட வேளாண் துறை ட்ரோன்களை பயன்படுத்த விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி தந்துள்ளது.
  • பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், நாட்டின் 100 மாவட்டங்களில் கிராம பஞ்சாயத்து அளவிலான விவசாய பகுதிகளில் மகசூல் மதிப்பீட்டிற்காக ட்ரோன்களை பயன்படுத்த விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி தந்துள்ளது. 
  • இந்த அனுமதி ஓராண்டுக்கு செல்லுப்படியாகும். அதற்கான விரிவான வழிகாட்டுதல்களையும் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
  • வேளாண் அமைச்சகம் ட்ரோன்களை இயக்க உள்ளூர் நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டியது அவசியம். குறிப்பிடப்பட்டுள்ள ட்ரோன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 
  • பயிற்சி பெற்ற மற்றும் சான்றளிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே ட்ரோன்களை இயக்க வேண்டும். 200 அடி உயரத்துக்குள் ட்ரோன்களை பயன்படுத்த வேண்டும். 
  • சூரிய உதயம் தொடங்கி சூரிய மறைவுக்குள் மட்டுமே ட்ரோன்களை இயக்க வேண்டும். ட்ரோன்கள் மூலம் எடுக்கப்படும் வீடியோக்கள், புகைப்படங்களின் பாதுகாப்புக்கு வேளாண் அமைச்சகமே பொறுப்பு. இது போன்ற 19 வழிகாட்டுதல்களை கூறியுள்ளது.

பீரங்கிகளை தகர்க்கும் ஹெலினா ஏவுகணை சோதனையில் வெற்றி

  • பீரங்கிகளை தாக்கி அழிக்கக் கூடிய ஹெலினா என்ற நவீன ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மற்றம் மேம்பாட்டு அமைப்பு தயாரித்துள்ளது. 
  • மிகவும் குறைவான எடை கொண்ட இது, விரைவில் ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளது. இவை விமானப்படையில் பயன்படுத்தப்படும் துருவ் என்ற இலகு ரக ஹெலிகாப்டரில் இருந்து நேற்று வீசப்பட்டு, வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. 
  • ராஜஸ்தான் பாலைவனத்தில் நடந்த சோதனையில் 4 ஏவுகணைகள் துருவ் ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்பட்டு, பரிசோதிக்கப்பட்டது. நான்கில் மூன்று ஏவுகணைகள் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தன. இந்த ஏவுகணை 7 கிமீ தூரம் வரை பாய்ந்து எதிரிநாட்டு பீரங்கிகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel