TNPSC 21st JANUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

'கவாச்' - ராணுவம் கூட்டுப் பயிற்சி

 • இந்திய ராணுவம், கடற்படை , விமானப்படை மற்றும் கடலோர காவல் படை ஆகியவை இணைந்து, அந்தமான் கடல் பகுதியில், வரும் வாரத்தில் மிகப் பெரியளவிலான கூட்டு பயிற்சியை மேற்கொள்கின்றன.
 • அந்தமானில் உள்ள கூட்டுப்படை கட்டுப்பாட்டு மையத்தின் தலைமையில் இந்த பயிற்சிகள் நடைபெறுகின்றன. இதில் ராணுவத்தின் நீர் மற்றும் நிலப்பகுதியில் போரிடும் படைப் பிரிவு, கடற்படையின் போர்க்கப்பல்கள், விமானப்படையின் ஜாக்குவார் மற்றும் போக்குவரத்து விமானங்கள், கடலோர காவல் படை கப்பல்கள் பங்கேற்கின்றன.
 • கடல்சார் கண்காணிப்பு கருவிகள், விமானப்படை மற்றும் கடற்படை ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் தாக்குதல் பயிற்சி, வான் பாதுகாப்பு பயிற்சி உட்பட பல பயிற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
 • ஒரே நேரத்தில் முப்படைகளின் பல்வேறு தொழில்நுட்ப, மின்னணு மற்றும் மனித உளவுத்துறை சம்பந்தப்பட்ட கூட்டு கண்காணிப்பு மற்றும் மறுமதிப்பீடு (ஐ.எஸ்.ஆர்) பயிற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

நீர்வாழ் உயிரின ஆய்வகம் படப்பையில் அடிக்கல்

 • படப்பையில், நீர்வாழ் உயிரின தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகத்திற்கு, மத்திய மீன்வளத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங், அடிக்கல் நாட்டினார்.
 • காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, படப்பையில், 3 ஏக்கர் பரப்பளவில், நீர்வாழ் உயிரின தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
 • இதற்காக, மத்திய மீன்வளத் துறை சார்பில், 19.27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக, 4 கோடி ரூபாய் மதிப்பில், ஆய்வகத்தின் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா, நடந்தது.
 • மத்திய மீன்வளத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, அடிக்கல் நாட்டினர்.
 • இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் நீர்வாழ் உயிரினங்களை, இந்த ஆய்வகத்தில் தனிமைப்படுத்தி, நோய் தொற்று உள்ளனவா என, பரிசோதனை செய்யப்பட உள்ளது.

விமான நிலைய தகர்ப்பு ஆயுதம் சோதனை வெற்றி

 • எதிரி நாடுகளின் விமான தளங்களில் உள்ள ஓடுபாதைகள், ரேடார்கள், இதர ராணுவ சம்பந்தப்பட்ட தளவாடங்களை தாக்கி அழிப்பதற்காக, 'ஸ்மார்ட் ஆன்டி ஏர்பீல்ட் ஆயுதம்' எனப்படும், விமான நிலைய அழிப்பு ஆயுதத்தை பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் ஏரோநாட்டிகள் நிறுவனம் (எச்ஏஎல்), உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரித்துள்ளது. 
 • இது, 'ஹாக்-1' விமானத்தின் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு, வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது. ஒடிசா மாநில கடற்கரையில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது.

பிரதமரின் திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் மேலும் 1.68 லட்சம் புதிய வீடுகள் மத்திய அரசு அனுமதி

 • வரும் 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற இலக்குடன், 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2015ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், நகர்ப்புறங்களில் 1.12 கோடி வீடுகள் கட்டப்பட உள்ளன. 
 • இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 1.68 லட்சம் வீடுகள் கட்ட, ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 
 • திட்டமிட்ட இலக்குடன் பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் செயல்படுகிறது.இதுவரை 41 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 70 லட்சம் வீடுகள் தயாராகி வருகின்றன. தற்போது, ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 606 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாரீஸ் ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைவது உள்ளிட்ட 17 உத்தரவுகளில் பைடன் கையெழுத்து

 • அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
 • இவர்கள் இருவரும் வாஷிங்டனில் பதவியேற்று கொண்டனர். அதன் பிறகு, தேர்தலில் அமெரிக்க மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் விதத்தில் ஒரே நாளில் 17 நிர்வாக உத்தரவுகளில் பைடன் கையெழுத்திட்டார்.
 • அவற்றில் பெரும்பாலானவை, கடந்த ஆட்சியில் அதிபராக இருந்த டிரம்ப்பால் நீக்கப்பட்டவை. குறிப்பாக, தேசிய பாதுகாப்பு கொள்கை, குடியுரிமை சட்டங்கள், பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவது, உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகியது போன்ற முடிவுகளை அவர் எடுத்திருந்தார். 
 • நேற்று போட்ட 17 கையெழுத்துகளின் மூலம், அவற்றை எல்லாம் ரத்து செய்த பைடன், எல்லாவற்றையும் பழைய நிலைக்கே கொண்டு வந்துள்ளார்.
 • வெளியுறவு கொள்கையில் புதிய மாற்றங்கள்.
 • தேசிய பாதுகாப்பு கொள்கை முடிவுகள்.
 • பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைதல்.
 • உலக சுகாதார அமைப்பில் அமெரிக்கா இருந்து விலகியதை திரும்ப பெறுதல்.
 • முஸ்லிம்கள் மீதான பயணத் தடையை நீக்குதல்.
 • மெக்சிகோவில் எழுப்பப்படும் எல்லைச் சுவர் கட்டுமான பணியை உடனடியாக நிறுத்துதல்.
 • கொரோனா தொற்று, பொருளாதார சிக்கல்களுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை.
 • முதல் 100 நாள் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்குதல்.
 • பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் கட்டுப்பாடுகளை திரும்ப பெறுதல்.
 • இன வேறுபாடுகளை வேரறுக்கும் கூட்டாட்சி அமைப்பு.
 • அமெரிக்க குடியுரிமை சட்ட திருத்த மசோதா உள்பட 17 நிர்வாக உத்தரவுகளில் பைடன் கையெழுத்திட்டு உள்ளார்.

100 கி.மீ தொலைவு இலக்குகளை தாக்கும் உள்நாட்டு தயாரிப்பு Hawk-i விமானம் சோதனை வெற்றி

 • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) ஆராய்ச்சி மையமான Imarat (RCI) வடிவமைத்துள்ள விமான எதிர்ப்பு ஆயுதம் (SAAW) முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டிருக்கும் ஒரு முக்கிய ஆயுதமாகும். 
 • இதனை பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இதனை Hawk-i போர் விமானத்தில் பொருத்தி ஒடிசா கடற் பகுதியில் சோதனை நடத்தினர். முதல் முறையாக இவ்வாறான ஒரு ஆயுதத்தை Hawk-i Mk132 போர் விமானத்தில் பொருத்தி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
 • SAAW ஆயுதம் பொருத்தப்பட்ட Hawk-i விமானத்தை ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தின் சோதனை விமானிகளான ஓய்வு பெற்ற விங் கமாண்டர்கள் அவாஸ்தி மற்றும் பட்டேல் செலுத்தி சோதனை நடத்தினர்.
 • டிஆர்டிஓ மற்றும் சிஎஸ்ஐஆர் ஆய்வகங்களால் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஆயுதங்களுக்கு சான்றளிப்பதில் Hawk-i தளம் விரிவாகப் பயன்படுத்தப்படுகிறது என்றார்.
 • தற்போது சோதிக்கப்பட்டுள்ள SAAW விமான எதிர்ப்பு ஆயுதம் மூலம் 100 கிலோ மீட்டருக்குள் இருக்கும் எதிரிகளின் ரேடார்கள், பதுங்கு குழிகள், டாக்ஸி தடங்கள், ஓடுபாதை உள்ளிட்டவற்றை தாக்கி அழிக்க முடியும் என கூறப்படுகிறது.
 • இந்தியன் ஹாக் எம்.கே .132 பயிற்சி விமானத்தில் இருந்து சுடப்பட்ட முதல் ஸ்மார்ட் ஆயுதம் இதுவாகும்.
 • பிரிட்டிஷாரின் வழித்தோன்றலான ஹாக் எம்.கே .132 விமானத்தை விமானப்படை அதன் போர் விமானிகளுக்கு பயிற்சியளிப்பதற்காக 2008 ஆம் ஆண்டில் சேர்த்துக்கொண்டது. போர் விமான பயிற்சியில் ஹாக் விமானங்கள் முக்கிய பங்காற்றுவது குறிப்பிடத்தக்கது.

ரேசன் பொருட்கள் டோர் டெலிவரி  திட்டத்தை துவக்கி வைத்தார் ஜெகன் மோகன்

 • ஆந்திராவில் ஓய்.எஸ்.ஆர். காங்., கட்சி தலைவரும் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி, 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் ரேசன் பொருட்கள் வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை கொண்டு வருவேன் என வாக்குறுதியளித்தார். 
 • இதையடுத்து இத்திட்டத்தை இன்று விஜயவாடாவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி துவக்கி வைத்தார். அம்மாநில அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், பொதுவிநியோக திட்டத்தின் கீழ் ரேசன் பொருட்களை வீடுகளுக்கு நேடியாக சென்று டெலி வரி செய்யும் திட்டம் வரும் பிப்.1-ம் தேதி முதல் கொண்டு வர உத்தரவிடபட்டுள்ளது.
 • இதற்காக 2,500 குழுக்கள் அமைக்கப்பட்டு ரூ. 539 கோடியில் 9,260 நடமாடும் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் மூலம் தரமான அரிசி உள்ளிட்ட பல்வேறு ரேசன் பொருட்கள், வீடுகள் தோறும் நேரடியாக சென்று விநியோகிகப்படும். இதன் மூலம் மாநிலம் முழுவதும் 5 கோடி 81 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேசன் கார்டு தாரர்கள் பயனடைவர். 

0 Comments