Type Here to Get Search Results !

TNPSC 15th, 16th & 17th JANUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

எண்ணெய், எரிவாயு சேமிப்புக்கு ஒத்துழைப்பு தமிழகத்துக்கு மத்திய அரசு விருது

  • எண்ணெய் மற்றும் எரிவாயு சேமிப்பு மாதம், 'சக்‌ஷம்' என்ற பெயரில் ஜன.16 முதல் பிப்.15-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதன் தொடக்க விழா 16-ம் தேதி நடந்தது. 
  • இதில், எண்ணெய், எரிவாயு சேமிப்புக்காக பொதுத் துறைபெட்ரோலிய நிறுவனங்கள் கடந்த 2020-ல் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காக, தேசிய அளவில் தனிச்சிறப்பு மிக்க செயல்பாட்டுக்கான விருது தமிழகத்துக்கு வழங்கப்பட்டது.
  • அதேபோல, கடந்த ஆண்டில் பெட்ரோலிய தொழில் துறையில் அதிகபட்ச அளவில் சேமிப்புகளை மேற்கொண்டதற்காக, தமிழகத்தின் மாநில அளவிலான பெட்ரோலிய துறை ஒருங்கிணைப்பாளருக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.
  • சக்‌ஷம்-2021 நிகழ்ச்சியை முன்னிட்டு, பிப்.15 வரை எண்ணெய் மற்றும் எரிவாயுவை சேமித்து சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் வேகமாக வளரும் தொழில்நுட்ப நகரங்களில் பெங்களூரு சாதனை ஆய்வில் தகவல்

  • லண்டனின் சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டு ஆய்வு நிறுவனமான லண்டன் அண்ட் பார்ட்னர்ஸ் மற்றும் டீல்ரூம்.கோ ஆய்வு நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வில் வேகமாக வளரும் தொழில்நுட்ப நகரங்களில் பெங்களூரு முதலிடத்தில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
  • இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகரமாக விளங்கும் பெங்களூருவில் செய்யப்படும் முதலீடுகடந்த நான்கு ஆண்டுகளில் 5.4 மடங்கு அளவுக்கு உயர்ந்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. 2016-ல் பெங்களூருவில் செய்யப்பட்ட முதலீடு 1.3 பில்லியன் டாலராக இருந்தது, 2020-ல் 7.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
  • அடுத்தடுத்த இடங்களில் லண்டன், முனிச், பெர்லின் மற்றும் பாரிஸ் ஆகியவை உள்ளன. இந்தியாவின் நிதி மையமாக விளங்கும் மும்பை ஆறாம் இடத்தில் உள்ளது. மும்பையின் முதலீட்டு வளர்ச்சி 1.7 மடங்கு உயர்ந்துள்ளது.
  • வேகமாக வளரும் நகரமாக மட்டுமல்லாமல் முக்கியமாக பெங்களூரு வென்சர் கேபிடல் முதலீடுகளுக்கான நகரங்களில் ஒன்றாகவும் விளங்குவது மிக மகிழ்ச்சியான விஷயம். வென்சர் கேபிடல் முதலீட்டில் ஆறாம் இடத்தில் பெங்களூரு உள்ளது. 
  • லண்டனும் பெங்களூருவும் தொழில்முனைவு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் வலுவாக வளர்ந்து வருகின்றன. இவை மிகப்பெரிய அளவில் தொழில்நுட்ப முதலீட்டாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்கும் என லண்டன் அண்ட் பார்ட்னர்ஸின் இந்தியப் பிரதிநிதி ஹெமின் பாருச்சா கூறியுள்ளார்.

கோவை வனக்கோட்டத்தில் வன பறவைகள் கணக்கெடுப்பு

  • கோவை வனக்கோட்டத்தில் உள்ள கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன் பாளையம், காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம் ஆகிய 7 வனச்சரகங்களில் உள்ள பல்வேறு வகையான பறவைகள், பட்டாம்பூச்சிகளை அறிந்துகொள்ள மாவட்ட வன அலுவர் து.வெங்கடேஷின் அறிவுறுத்தலின்படி, இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பு (டிஎன்பிஎஸ்), கோயம்புத்தூர் நேச்சர் சொசைட்டி (சிஎன்எஸ்), டபிள்யு.டபிள்யு.எஃப் இந்தியா ஆகிய அமைப்புகள் இணைந்து 2020 ஜனவரி மாதம் கணக்கெடுப்புப் பணியைத் தொடங்கின.
  • ஜனவரி, மார்ச், ஜூன், அக்டோபர் என 4 கட்டங்களாக இந்த கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது. ஒவ்வொரு வனச்சரகத்திலும் ஒரு குழு கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்டது. இறுதியாக டிசம்பர் 12, 13-ம் தேதிகளில் நடைபெற்ற கணக்கெடுப்பில் மொத்தம் 70 தன்னார்வலர்கள், 43 வனப்பணியாளர்கள் அடங்கிய 15 குழுக்கள் ஈடுபட்டன.
  • இவ்வாறு கடந்த ஆண்டு முழுவதும் நடைபெற்ற கணக்கெடுப்பில் கோவை வனக்கோட்டத்தில் மொத்தம் 275 வகைப் பறவைகள், 229 வகைப் பட்டாம்பூச்சிகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
  • அதில், கருங்கொண்டை வல்லூறு ('பிளாக் பாசா') எனும் பறவை போளுவாம்பட்டி, காரமடை வனச்சரகங்களில் தென்பட்டது. இவை, வடகிழக்கு இந்தியா, தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் இருந்து இங்கு வருகின்றன. 
  • மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் தென்பட்ட கொண்டை குயில் ('செஸ்ட்நட் விங்டு குக்கூ') எனும் பறவை இமயமலைப் பகுதிகளில் இருந்து வருகிறது. செந்தலை கூம்பலகன் ('ரெட் ஹெட்டட் பன்டிங்') பறவை சிறுமுகையிலும், பழுப்புத் தலை கூம்பலகன் ('கிரே நெக்டு பன்டிங்') பறவை கோவை வனச்சரகத்திலும் தென்பட்டுள்ளது. இவை, மேற்கு, மத்திய ஆசியப் பகுதிகளில் இருந்து வருபவை.
  • கோவை மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 278 பட்டாம்பூச்சி வகைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதில், கடந்த ஓராண்டு தொடர் கணக்கெடுப்பின்போது 229 வகை பட்டாம்பூச்சிகள் இருப்பது தெரியவந்துள்ளது. காரமடை வனச்சரகத்தில் 'காமன் ஆல்பட்ராஸ்' வகை பட்டாம்பூச்சிகள் ஆயிரக்கணக்கில் தென்பட்டன.
  • கோவை வனக்கோட்டத்தில் முதல்முறையாக 'நீலகிரி டைகர்' வகை பட்டாம்பூச்சி சிறுவாணி, மேல்முடி பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, அரிதினும் அரிதாகத் தென்படும் 'ஆட்டம் லீப்' வகை பட்டாம்பூச்சி தென்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.

சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு செல்ல 8 புதிய ரயில்கள்

  • 'ஒற்றுமை சிலை' என்று அழைக்கப்படும் குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள சர்தார் வல்லபாய் சிலைக்கு செல்ல தடையற்ற போக்குவரத்தை இணைப்பதற்காக சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 8 புதிய ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  • இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்டோரும் கொடியசைத்து புதிய ரெயில்களை தொடங்கி வைத்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel