சென்னை - சேலம் எட்டு வழிச் சாலைக்கு அனுமதி
- சென்னை - சேலம் இடையே, 277 கி.மீ., துாரத்துக்கு, எட்டு வழி பசுமை சாலை திட்டத்தை, 1௦ ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கு, நிலங்கள் கையகப்படுத்த, மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.
- மக்கள் நலன்இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், விவசாயி பி.வி.கிருஷ்ணமூர்த்தி, காங்., வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம், பா.ம.க., - எம்.பி., அன்புமணி, வழக்கறிஞர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
- சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட, இத்திட்டம் தொடர்பான நடவடிக்கைகளை, மத்திய அரசும், தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் தொடரலாம் என, பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.
- கருத்து கேட்புசுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த விரிவான ஆய்வை, மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் ஒப்புதல் கோருவதற்கு முன், பொது மக்கள் கருத்து கேட்பும் அவசியம்.எனவே, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன.
- தனியார் நிலங்களை, அரசு நிலங்களாக, வருவாய் ஆவணங்களில் குறிப்பிட்டிருந்ததை மாற்றி, புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். அதை, நில உரிமையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
பாலஸ்தீனத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க இந்திய அரசு உதவி
- மேற்காசிய நாடான பாலஸ்தீனத்தில், பல வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதற்காக, இரு நாடுகளுக்கு இடையே, இருதரப்பு புரிந்துணர்வு உதவி திட்டம், 2016ல் கையெழுத்தானது.
- இத்திட்டத்தின் கீழ், 215 படுக்கை வசதிகளை உடைய பல்நோக்கு மருத்துவமனை, தொழில்நுட்ப பூங்கா, துாதரக பணியாளர்கள் பயிற்சி நிலையம், மூன்று பள்ளிகள் உள்ளிட்டவைகளை கட்டித்தர, 442 கோடி ரூபாய் உதவி தொகையை, இந்தியா அளிக்கிறது.
- அதன் ஒருபகுதியாக, தலைநகர் ராமல்லாவில், தொழில்நுட்ப பூங்கா அமைக்க, இந்திய அரசு, 90 கோடி ரூபாய் அளிக்கிறது. இந்த உதவி தொகையின் கடைசி தவணையான, 22.50 கோடி ரூபாய், வழங்கப்பட்டது.
- அந்நாட்டு அதிபரின் ஆலோசகர் டாக்டர் மஜ்தி அல்கால்தியிடம், 22.50 கோடி ரூபாய்க்கான காசோலையை, இந்திய பிரதிநிதி சுனில் குமார் வழங்கினார்.
இந்தியா டி20 போட்டியில் 2-1 என தொடரை கைப்பற்றியது
- இந்திய அணியுடனான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், ஆஸ்திரேலியா 12 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை வசப்படுத்தியது. இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி கோப்பையை முத்தமிட்டது.
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் தமிழ்வழி மாணவர்களுக்கு 20% இடஒதுக்கீடு சட்டத் திருத்தத்திற்கு ஆளுநர் ஒப்புதல்
- தமிழ் வழியில் படிப்போருக்கு தமிழக அரசு பணிகளில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்க வழிவகை செய்யும் சட்டம் 2010 செப். 30ல் தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. இதனால் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைத்தது.
- ஆனால் குறிப்பிட்ட வகுப்பு வரை ஆங்கில வழி கல்வியில் படித்தவர்களும் அடுத்த கல்வியை தமிழ் வழி கல்வியில் படித்ததாக கூறி வேலை பெற்றதால் குழப்பம் ஏற்பட்டது.
- இதற்கு தீர்வு காண துவக்கம் முதல் தமிழ் வழி கல்வியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்தாண்டு மார்ச்சில் சட்டசபையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அந்த சட்ட திருத்த மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார்.
- புதிய சட்ட திருத்தத்தின்படி அரசு பணிகளுக்கு எந்த கல்வி தகுதி நிர்ணயிக்கப்படுகிறதோ அதை முழுமையாக தமிழ் வழி கல்வியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.
- இதன்படி கல்வித்தகுதி 10ம் வகுப்பு என நிர்ணயிக்கப்பட்டால் அதுவரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும். அதுவே பிளஸ் 2; இளநிலை; முதுநிலை பட்டப்படிப்பு கல்வித்தகுதி என்றால் அந்த கல்வி வரை தமிழில் படித்திருக்க வேண்டும்.
சாலையில் ஆடப்படும் 'பிரேக் டான்ஸிங்' நடனத்துக்கு ஒலிம்பிக் அந்தஸ்து: பாரீஸில் 2024-ல் நடக்கும் போட்டியில் சேர்ப்பு
- மேற்கத்திய நாடுகளில் இளைஞர்கள் சாலையில் ஆடும் பிரேக் டான்ஸிங் (ஹிப் ஹாப்) நடனத்துக்கு ஒலிம்பிக் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. பாரீஸில் 2024-ம் ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பிரேக் டான்ஸிங் நடனம் சேர்க்கப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.
- மேலும், ஸ்கேட் போர்டிங் (பலகையில் சறுக்குதல்), ஸ்போர்ட் கிளிம்பிங் (மலை ஏற்றம்), சர்பிங் (அலைச்சறுக்கு) ஆகிய விளையாட்டுகளும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டோக்கியோவில் நடப்பதாக இருந்த ஒலிம்பிக் போட்டியில் 3 விளையாட்டுப் போட்டிகள் அறிமுகப்படுத்தப்படுவதாக இருந்தன. ஆனால், கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒலிம்பிக் போட்டி ஓராண்டு தாமதமாகியுள்ளது.
- 2021, ஜூன் 23-ம் தேதிதான் ஒலிம்பிக் தொடங்குகிறது. டோக்கியோவில் மொத்தம் 339 பதக்கங்களுக்கான போட்டி நடப்பதாக இருந்தது. ஆனால், இது 10 போட்டிகள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் குறைக்கப்பட்டுள்ளது.
- இதில் குறிப்பாக பளு தூக்குதல், குத்துச்சண்டை போன்றவை பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இடம் பெறாது. பொதுவாக 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்குதல் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்களில் பாதியளவு போட்டியிட வேண்டும்.
- அதாவது, பாரீஸ் ஒலிம்பிக்கில் பளு தூக்குதலில் 120 போட்டியாளர்கள் குறைந்தபட்சம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தப் போட்டியைக் கைவிடலாம். அதுமட்டுமல்லாமல், பளு தூக்குதல் வீரர்களுக்கு இடையே ஊக்கமருந்து விவகாரமும் தீவிரமாக இருந்து வருவதால் அந்தப் போட்டி நீக்கப்பட்டுள்ளது.
- அலைச்சறுக்கு விளையாட்டு பசிப் பெருங்கடலில் தஹிதி கடற்கரையில் 15 ஆயிரம் கி.மீ.க்கு மேல் நடத்தவும் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் சம்மதித்துள்ளது.
முதலீட்டு ஊக்குவிப்பு விருது 2020-ன் வெற்றியாளராக இந்தியாவை அறிவித்தது ஐ.நா
- 2020 ஐக்கிய நாடுகள் முதலீட்டு ஊக்குவிப்பு விருதின் வெற்றியாளராக இன்வெஸ்ட் இந்தியாவை ஐக்கிய நாடுகள் சபை (வர்த்தகம் மற்றும் வளர்ச்சி குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு) அறிவித்துள்ளது.
- இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஜெனிவாவில் உள்ள வர்த்தகம் மற்றும் வளர்ச்சி குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டு தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
- உலகிலேயே மிகச் சிறந்த நடைமுறைகளை மேற்கொள்ளும் முதலீட்டு ஊக்குவிப்பு முகமைகளுக்கு சிறப்பான சாதனைகளை செய்ததற்காக இவ்விருது வழங்கப்படுகிறது.
- உலகெங்கிலும் உள்ள 180 தேசிய முதலீட்டு ஊக்குவிப்பு முகமைகளின் பணியை ஆய்வு செய்த பிறகு விருதின் வெற்றியாளரை வர்த்தகம் மற்றும் வளர்ச்சி குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு முடிவு செய்கிறது.
4வது இந்தியா மொபைல் மாநாட்டை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக டெல்லியில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
- இந்திய மொபைல் சேவை சங்கத்தினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 4வது இந்தியா மொபைல் மாநாட்டை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
- கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக இந்த மாநாடு நடைபெறுகிறது. மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
- 30 நாடுகளை சேர்ந்த, 210 பேச்சாளர்களும், 150 நிறுவனங்களும், 3,000 பிரதிநிதிகளும் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். உங்கள் புதுமை மற்றும் முயற்சிகளால் தான் தொற்றுநோய் இருந்தபோதிலும் உலகம் செயல்பட்டது என இந்திய மொபைல் சேவை மாநாட்டில் பேசினார்.
- உங்கள் முயற்சியால் தான் ஒரு மகன் தனது தாயுடன் வேறு நகரத்தில் இணைந்திருக்கிறான், ஒரு மாணவன் வகுப்பறையில் இல்லாமல் தனது ஆசிரியரிடமிருந்து கற்றுக்கொண்டான் என கூறினார்.
- எதிர்காலத்தில் பாய்ச்சுவதற்கும் மில்லியன் கணக்கான இந்தியர்களை மேம்படுத்துவதற்கும் 5ஜி சரியான நேரத்தில் வெளியேறுவதை உறுதிப்படுத்த நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பேசினார்.
- தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக, கைபேசிகள் மற்றும் கேஜெட்களை அடிக்கடி மாற்றும் கலாச்சாரம் எங்களிடம் உள்ளது.
- மின்னணு கழிவுகளை கையாளுவதற்கும் வட்ட பொருளாதாரத்தை உருவாக்குவதற்கும் ஒரு சிறந்த வழியைப் பற்றி சிந்திக்க தொழில்துறையால் ஒரு பணிக்குழுவை உருவாக்க முடியுமா? என கேட்டறிந்தார்.