சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு இந்தியாவிலேயே 2-வது சிறந்த காவல் நிலையத்துக்கான விருது
- மத்திய அரசு கடந்த 2016-ம்ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த 10 காவல் நிலையங்களைத் தோவு செய்து விருது வழங்கி வருகிறது. இந்த விருது, குற்றங்களைக் கண்டறிதல், குற்றவாளிகளை விரைந்து கைது செய்தல், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல், சட்டம்-ஒழுங்கை பாதுகாத்தல், விபத்துக்களை குறைத்தல், விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுதல், சமுதாயப் பணிகளில் ஆா்வம் காட்டுதல், குற்றப் பதிவேடுகளை கணினி மூலம் பராமரித்தல், பொதுமக்களை வரவேற்கும் முறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது
- கடந்த 2017-ம் ஆண்டில் கோயம்புத்தூா் ஆா்.எஸ்.புரம் காவல் நிலையமும், 2018-ம் ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலையமும், 2019-ம் ஆண்டு தேனி அனைத்து மகளிர் காவல் நிலையமும் இந்த விருதை பெற்றன.
- தற்போது 2020-ம் ஆண்டு சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் நாட்டின் 2-வது சிறந்த காவல் நிலையமாக தேர்வு பெற்று விருது பெற்றுள்ளது.
- சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் என்பதால், இங்கு கணவன்- மனைவி ஆகியோருக்கு இடையிலான பிரச்சினைகளே வழக்குகளாக கொண்டு வரப்படும்.
- அவர்களின் குடும்ப நலன், குழந்தைகள் நலன் கருதி, கணவன்- மனைவிக்கு கவுன்சலிங் கொடுத்து, இருவருக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்த, இந்த காவல் நிலையத்தில் செயல்பட்டு வரும் 2 நெறியாளர்களைக் கொண்ட கவுன்சலிங் பிரிவின் மூலம் பல தம்பதிகளுக்கு மீண்டும் ஒற்றுமை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
- 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மீதான பிரச்சினைகள், பாலியல் தொடர்பான போக்ஸோ வழக்குகள் போன்றவை கையாளப்படுவதால், குழந்தைகளின் மனநலன் பாதிக்கப்படாமல் இருக்க, விளையாட்டு உபகரணங்கள், ஓவியங்கள் நிறைந்த சைல்டு லைன் கேர் என்ற பிரிவும் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செயல்பட்டு வருகிறது.
- புகார்தாரரிடம் வரவேற்பாளர்கள் மூலம் முறையாக மனு பெறுதல், அவர்களுக்கான வசதிகள், குடிநீர், சுற்றுப்புறத் தூய்மை, கழிவறை வசதி உள்ளிட்டவற்றை முறையாக பராமரித்தல் போன்றவற்றின் அடிப்படையிலும், புகார் மனு அளித்தவர்களிடம் போலீஸாரின் செயல்பாடு குறித்தும், விருது குழுவினரால் கருத்து கேட்கப்பட்டுள்ளது..
அறிவுசார் சொத்தில் ஒத்துழைப்பு: இந்தியா, அமெரிக்கா ஒப்பந்தம்
- காப்புரிமை டிரேட்மார்க் தொழிலக வடிவமைப்பு உள்ளிட்டவை அடங்கிய அறிவுசார் சொத்து விவகாரத்தில் இந்தியா அமெரிக்கா இணைந்து செயல்படுவது குறித்து பேச்சு நடந்தது.
- இதையடுத்து தொழில் துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகம் வளர்ச்சி துறை மற்றும் அமெரிக்க அரசின் காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகம் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
- 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் இரு தரப்பும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுஉள்ளன. அதன்படி காப்புரிமை உட்பட அறிவுசார் சொத்தை நடைமுறைபடுத்துவதில் உள்ள புதிய முறைகளை பகிர்ந்து கொள்வது அதிகாரிகளுக்கு பயிற்சி ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
குடியிருப்புப் பெயர்களில் உள்ள சாதிப்பெயர் நீக்கப்படும் - மாகாராஷ்டிர மாநில அரசு
- மகாராஷ்டிரா இந்தியாவின் அதிகளவு வருமான ஈட்டித்தரக்கூடிய தொழில்துறை மாநிலமாக உள்ளது.
- இந்நிலையில், அம்மாநிலத்தில் நிறைய இடங்களில் சாதிப் பெயர்கள் உள்ளதால் வளரும் மாநிலத்திற்கு இது நல்லதல்ல என்று அம்மாநில அமைச்சராவை முடிவெடுத்து, சாதிப்பெயர்களுக்குப்பதிலாக தேசியத் தலைவர்கள் பெயர் வைக்கப்படும் என அமைச்சர் தஞ்செய் முண்டேதெரிவித்துள்ளார்.
கீதாஞ்சலி சிறந்த சிறுமியாக 'டைம்' பத்திரிகை தேர்வு
- அமெரிக்காவின், கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்த, இந்திய வம்சாவளி சிறுமி கீதாஞ்சலி ராவ், 15. இவர், 'கைன்ட்லி' என்ற, 'மொபைல்' செயலியை உருவாக்கினார்.
- இது, 'ஆன்லைன்' துன்புறுத்தல்களை, ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து, பயனாளியை எச்சரிக்கும் திறன் கொண்டது. ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு திறன் உதவியுடன், இந்த செயலிஇயங்குகிறது.
- மேலும், 'டெத்திஸ்' என்ற பெயரில், இவர் உருவாக்கிய செயலி, குடிநீரில் இருக்கும் அசுத்தத்தின் அளவை கணக்கிட உதவுகிறது.இவரை, சிறந்த சிறுமியாக அமெரிக்காவின், 'டைம்' பத்திரிகை தேர்ந்தெடுத்துள்ளது.
30 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவிடம் அரிசியை இறக்குமதி செய்யும் சீனா
- இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே கிழக்கு லடாக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண, இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
- மேலும், கல்வான் பள்ளத்தாக்கு மோதல் எதிரொலியாக சீனாவின் மொபைல் ஆப்கள் பயன்பாட்டுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. சீன நிறுவனங்களுக்கு இந்தியாவில் அளிக்கப்பட்ட திட்டப்பணி ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- இந்த சூழலில் 30 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவிடம் இருந்து அரிசியை சீனா இறக்குமதி செய்யத் தொடங்கி உள்ளது. உலகிலேயே மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இந்தியா இருந்து வருகின்றது.
- அதேபோல், மிகப்பெரிய அரிசி இறக்குமதியாளராக சீனா இருக்கிறது. ஆண்டுக்கு 40 லட்சம் டன் அரிசியை சீனா இறக்குமதி செய்கிறது. இந்திய அரிசி ரகத்தின் தரத்தை பொறுத்து அடுத்து ஆண்டு முதல் இறக்குமதியை சீனா அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- டிசம்பர்-பிப்ரவரியில் ஒரு லட்சம் டன் நொய் அரிசியை வாங்குவதற்கு அது ஒப்பந்தம் செய்துள்ளது. சீனாவுக்கு வழக்கமாக அரிசி விநியோகம் செய்யும் தாய்லாந்து, வியட்நாம், மியான்மர் மற்றும் பாகிஸ்தான் நாடுகள், இந்திய விலையுடன் ஒப்பிடும்போது டன்னுக்கு ரூ.2200 அதிகம் கேட்கின்றன. இதனால், இந்தியாவிடம் சீனா அரிசி வாங்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
செய்திகள் ஒரு வரிகளில்
- குழந்தைகளுக்கு நட்பான காவல் நிலையம் (Balsnehi (child-friendly)) மகாராஷ்டிர மாநிலம் புனேவில் அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையர் (National Commissioner for Protection of Child Rights (NCPCR)) வழங்கிய வழிகாட்டுதலின் படி அமைக்கபட்டுள்ள இந்த காவல் நிலையத்தின் நோக்கம் சிறார் குற்றங்களைத் தடுப்பதும், குழந்தைகள் சீர்திருத்தங்களை உறுதி செய்வதுமாகும்.
- இந்தியாவில் முதல் முறையாக 100 ஆக்டேன் பெட்ரோலை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மதுரா சுத்திகரிப்பு நிலையத்தில் இந்த எரிபொருள் தயாரிக்கப்பட்டது. இந்த பெட்ரோலானது பொதுவாக அதிக செயல்திறன் தேவைப்படும் ரேஷ் வாகனங்கள் மற்றும் சொகுசு வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது ஜெர்மனி, அமெரிக்கா, கிரீஸ், மலேசியா, இந்தோனேசியா மற்றும் இஸ்ரேல் ஆகிய ஆறு நாடுகளில் மட்டுமே கிடைக்கிறது.
- இந்தியாவின் முதல் உடலுறுப்பு தான நினைவு சின்னம் (organ donor memorial ) இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
- தேசிய உடலுறுப்பு தான தினம் (National Organ Donation Day) – நவம்பர் 27
- இந்தியாவின் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு அரசாங்கத் தலைவர்கள் கவுன்சிலின் 19 வது கூட்டத்தை இந்தியா நவம்பர் 30, 2020 அன்று மெய்நிகர் வழியாக நடத்தியது.
- எஸ்சிஓ என்பது இந்தியா , ரஷ்யா , சீனா , பாகிஸ்தான் , கஜகஸ்தான் , கிர்கிஸ்தான் , தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய எட்டு உறுப்பு நாடுகளின் பிராந்தியக் குழுவாகும். ஈரான் , ஆப்கானிஸ்தான் , பெலாரஸ் மற்றும் மங்கோலியா ஆகிய நான்கு பார்வையாளர் நாடுகளும் இதில் உள்ளன
- கியூ . எஸ் ஆசியா பல்கலைக்கழக தரவரிசை 2021 (QS Asia University Rankings 2021) ல் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்தது . இந்த பட்டியலில், ஐ.ஐ.டி- மும்பை (37) , ஐ.ஐ.டி-டெல்லி (47) மற்றும் ஐ.ஐ.டி-மெட்ராஸ் (50) ஆகியவை முதல் 50 இடங்களுக்கு வந்துள்ளன ஆனால் எந்த இந்திய பல்கலைக்கழகமும் முதல் -10 பட்டியலில் இடம் பெறவில்லை.
- யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் முதல் பெண் நடுவராக பிரான்ஸைச் சோ்ந்த ஸ்டெஃபானி ஃப்ராப்பாா்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
- தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் ( National Pollution Control Day ) - டிசம்பர் 2 (போபால் எரிவாயு நிகழ்வின் ( 2 டிசம்பர் 1984) உயிர் இழந்த மக்களின் நினைவாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.)
- சீக்கியர்கள் உடன் பிரதமர் மோடி மற்றும் அவரது அரசாங்கத்தின் சிறப்பு உறவு (PM Modi and His Government’s Special Relationship with Sikhs) என்ற புத்தகத்தை குரு நானக் ஜெயந்தியை முன்னிட்டு தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அவுட்ரீச் கம்யூனிகேஷன் பணியகம் வெளியிட்டுள்ளது
0 comments:
Post a comment