TNPSC 1st DECEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

நவம்பர் 2020-ல் ரூபாய் 1,04,963 கோடி சரக்கு மற்றும் சேவை வரியாக வசூல்

 • 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரியாக ரூபாய் 1,04,963 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ரூபாய் 19,189 கோடியும், மாநில சரக்கு மற்றும் சேவை வரி ரூபாய் 25,540 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி ரூபாய் 51,992 கோடியும் (சரக்குகளின் இறக்குமதியின் மூலம் பெறப்பட்ட ரூபாய் 22,078 கோடி உட்பட), செஸ் வரி ரூபாய் 8,242 கோடியும் (சரக்குகளின் இறக்குமதியின் மூலம் பெறப்பட்ட ரூபாய் 809 கோடி உட்பட) அடங்கும்.
 • ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து வழக்கமான பைசல் தொகையாக மத்திய சரக்கு மற்றும் சேவை வரிக்கு ரூபாய் 22,293 கோடியையும் மாநில சரக்கு மற்றும் சேவை வரிக்கு ரூபாய் 16,286 கோடியையும் அரசு வழங்கியுள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தின் வருவாய் 1.4 சதவீதம் உயர்ந்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல்

 • சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 75. அதில் தற்போது தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியுடன் சேர்த்து மொத்தம் 53 பேர் நீதிபதிகளாக பதவி வகித்து வருகின்றனர்.
 • இந்நிலையில் மாவட்ட நீதிபதிகளாக பணிபுரிந்துவரும் கண்ணம்மாள் சண்முகசுந்தரம், சதிகுமார் சுகுமார குரூப்,முரளிசங்கர் குப்புராஜூ, மஞ்சுளாராமராஜு நல்லையா, தமிழ்ச்செல்வி டி வளையபாளையம், கோவிந்தராஜூலு சந்திர சேகரன், ஏ.ஏ.நக்கீரன், வீராச்சாமிசிவஞானம், கணேசன் இளங்கோவன், ஆனந்தி சுப்ரமணியன் ஆகிய 10 பேரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது.
 • இந்நிலையில் இந்த 10 பேரையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் நீதிபதிகளின் எண்ணிக்கை 63 ஆக உயருகிறது.
அந்தமான் நிகோபார் தீவுகள் பகுதியில் எதிரி கப்பல்களை அழிக்கும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை
 • அந்தமான் நிகோபார் தீவுகள் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ரன்விஜய் போர்க் கப்பலில் இருந்து நேற்று காலை 9.25 மணிக்கு இந்த ஏவுகணை ஏவப்பட்டது. வங்காள விரிகுடாவில் கார் நிகோபார் தீவுகள் அருகே நிறுத்தப்பட்டிருந்த கப்பலுக்கு அருகில் உள்ள இலக்கை இது வெற்றிகரமாக தாக்கி அழித்தது.
 • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தால் (டிஆர்டிஓ) உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணை, 300 கி.மீ. வரை சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டது. 
 • இந்திய கடற்படை இதற்கு முன் கடந்த நவம்பர் 24-ம் தேதி நிலத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்க வல்ல பிரம்மோஸ் ஏவுகணையை அந்தமான் நிகோபார் தீவுகளில் இருந்து செலுத்தியது. இந்த ஏவுகணை மற்றொரு தீவில் உள்ள இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.
69% இடஒதுக்கீடு வழக்கில் புள்ளி விவரம் சமர்ப்பிக்க சாதிவாரி கணக்கெடுப்புக்கு தனி ஆணையம்: தமிழக அரசு அறிவிப்பு
 • தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு காலக்கட்டங்களில் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். 
 • அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் பயன் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை அரசு உறுதிபடுத்த வேண்டியுள்ளது.
 • மேலும், 69 சதவீத இடஒதுக்கீடு சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்கையும் எதிர்கொள்ள இத்தகைய புள்ளி விபரங்கள் தேவைப்படுகின்றன. 
 • இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற தற்போதைய காலக்கட்டத்தில் உள்ள சாதிவாரியான அளவிடக்கூடிய முழுமையான புள்ளிவிவரங்கள் அவசியம் தேவைப்படுகிறது. 
 • எனவே, தமிழ்நாடு முழுவதும் சாதிய அடிப்படையிலான புள்ளிவிவரத்தை சேகரிப்பதால் மட்டுமே முழு தகவல் கிடைக்கப் பெறும். சாதி வாரியான தற்போதைய நிலவரப்படியான புள்ளி விவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உரிய தரவுகளை சேகரித்து, அறிக்கை சமர்ப்பிக்க அதற்கென பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்படும்.
அணு மையங்களில் சா்வதேச ஆய்வுகளுக்குத் தடை: ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல்
 • ஈரானின் அணுசக்திக் கொள்கைகளில் மாற்றங்கள் செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
 • அந்த மசோதாவில், ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய்த்துறை மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை தளா்த்துவதற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு 3 மாத கால கெடு விதிக்கப்பட்டுள்ளது.
 • அந்தக் கெடுவுக்குள் பொருளதாரத் தடைகள் தளா்த்தப்பட்டு, சா்வதேச வங்கிக் கட்டமைப்பைப் பயன்படுத்த ஈரான் அனுமதிக்கப்படாவிட்டால் வல்லரசு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் பல நிபந்தனைகளை மீற அந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 • அதன்படி, ஈரான் அணு மையங்களில் சா்வதேசக் கண்காணிப்பாளா்கள் ஆய்வு செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை அதிகாரிகள் ரத்து செய்ய முடியும். மேலும், அணுசக்தியைப் பெறுவதற்கான யுரேனியம் எரிபொருளை 20 சதவீதம் வரை செறிவூட்ட அந்த மசோதா அனுமதிக்கிறது.
 • அணு ஆயுதங்களை உருவாக்குவதற்குத் தேவையானதைவிட (85 சதவீதத்துக்கும் மேல்) இது மிகவும் குறைவு என்றாலும், மின்சாரம் தயாரிப்பதற்குத் தேவையானதைவிட (சுமாா் 5 சதவீதம்) இது அதிகமாகும்.
 • இதுதவிர, கெடு தேதிக்குள் பொருளாதாரத் தடைகள் தளா்த்தப்படாவிட்டால் நடான்ஸ் மற்றும் ஃபோா்டோ பகுதிகளில் உள்ள அணுசக்தி மையங்களில் புதிய யுரேனியம் செறிவூட்டிகளை நிறுவவும் அந்த மசோதா வழிவகை செய்துள்ளது.
 • 290 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் அந்த மசோதா செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டபோது, மசோதாவுக்கு ஆதரவாக 251 வாக்குள் பதிவாகின. அதையடுத்து அந்த மசோதா வெற்றி பெற்றது.
 • அதையடுத்து, அந்த மசோதா மேலும் ஒரு நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு விடப்படும். அதிலும் மசோதா வெற்றி பெற்றால், கண்காணிப்பு கவுன்சிலின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
ஹெல்மெட்டிற்கு BIS சான்றிதழ், ISI மார்க்கை கட்டாயமாக்கியது மத்திய அரசு
 • ஜூன், 2021 முதல் BIS சான்றிதழ் இல்லாத ஹெல்மெட் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்திய தர நிர்ணய பணியகத்திலிருந்து (Bureau of Indian Standards) சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட் மட்டுமே நாட்டில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்ய முடியும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 • புதிய அறிவிப்பின் படி, BIS மற்றும் ISI சான்றிதழை பெற்ற இரு சக்கர வாகன ஹெல்மெட் மட்டுமே நாட்டில் விற்க அனுமதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். 
 • குறைந்த தரம் வாய்ந்த இரு சக்கர வாகன ஹெல்மெட் விற்பனையை முற்றுப்புள்ளி வைத்து வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

0 Comments