அமெரிக்க சிபிசி அமைப்பின் தலைவராக இந்திய - அமெரிக்கா் பரிமளா ஜெயபால் தோவு
- அமெரிக்க ஜனநாயக கட்சியின் சக்திவாய்ந்த பிரிவான காங்கிரஸின் முற்போக்கு காகஸின் (சிபிசி) தலைவராக இந்திய வம்சாவளியைச் சோந்த காங்கிரஸ் பெண்மணி பிரமிளா ஜெயபால் தோந்தெடுக்கப்பட்டுள்ளாா். 117-ஆவது காங்கிரஸின் சக்தி வாய்ந்த அமெரிக்க நாடாளுமன்றத்தின் உறுப்பினா்களில் ஒருவா் ஆவாா்.
கரோனா தடுப்பு பில் கேட்ஸ் ரூ.1,842 கோடி நன்கொடை
- உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவலக் கட்டுப்படுத்தும் பணிகளுக்காக, கூடுதலாக 25 கோடி டாலரை (சுமாா் ரூ.1,842 கோடி) பில்கேட்ஸ் அண்டு மெலிண்டா அறக்கட்டளையை நன்கொடையாக அளித்துள்ளது.
- அதில் ஒரு பகுதி, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகளில் கரோனா தடுப்பூசி விநியோகிப்பதற்குப் பயன்படுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈர்ப்பு விசையை அறிய 2 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக அனுப்பியது சீனா
- பூமியின் மேற்பரப்பில் இருந்து மேலே 9.25 லட்சம் கிலோ மீட்டருக்கு ஈர்ப்பு விசை இயங்குகிறது. இந்த ஈர்ப்பு விசையினை பற்றி ஆய்வு செய்வதற்காக 2 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக சீனா ஏவியுள்ளது. சிசுவான் மாகாணத்தில் இருக்கும் ஷிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து இவை அனுப்பப்பட்டுள்ளன.
- 'லாங் மார்ச் 11' என்கிற ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டுள்ள இந்த செயற்கைக் கோள்களானது காமா கதிர்வீச்சின் வெடிப்புகள், ரேடியோ கதிர்வீச்சின் வெடிப்புகள், காந்தக் கதிர்வீச்சு வெடிப்புகள் மற்றும் நியூட்ரான் நட்சத்திரங்கள், கருந்துளை ஆகியவற்றை ஆய்வு செய்யவுள்ளது. மேலும் விண்வெளியில் உள்ள சக்தி வாய்ந்த கதிர்வீச்சுக்கான காரணிகள் குறித்தும் ஆய்வு செய்ய இருக்கிறது.
- இவற்றுடன் சூரியனின் வெப்பக்கதிர்கள், பூமியின் காமா கதிர்வீச்சுகள் மற்றும் மின்னணு ஆதாரங்கள் தொடர்பான ஆய்வுகளையும் இந்த செயற்கைக்கோள்கள் மேற்கொள்ள இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். 'ஜெசெம் ப்ராஜெக்ட்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தை சீனாவின் அறிவியல் கழகம் மேற்கொண்டுள்ளது.
ரூ.971 கோடியில் பிரமாண்டமாக அமைகிறது புதிய நாடாளுமன்ற கட்டிடம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
- மக்களவையில் 888 இருக்கை, மாநிலங்களவையில் 384 இருக்கை வசதிகளுடன், நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தின் போது மைய மண்டபத்தில் 1,224 பேர் அமரும் வகையிலும் இதன் கட்டிடம் வடிவமைக்கப்படுகிறது.
- அடிக்கல் நாட்டும் விழா நேற்று மதியம் ஒரு மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் நடந்தது. கர்நாடகாவை சேர்ந்த சிருங்கேரி மடத்தினர் பூமி பூஜை, அடிக்கல் நாட்டும் பூஜை ஆகியவற்றிற்கான வேதமந்திரங்களை சொல்லி பூஜையைத் தொடங்கி வைத்தனர்.
- கொரோனா தொற்று காரணமாக காணொலி மூலம் மட்டுமே நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த பிரதமர் மோடி பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டும் விழாவில் நேரடியாக கலந்து கொண்டார். இதற்கு முன், அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையிலும் அவர் நேரடியாக வந்து கலந்து கொண்டார்.
- பல்வேறு மதங்களின் புனித தன்மையையும், இணைந்து செயல்படுவதையும் பிரதிபலிக்கும் வகையில், புதிய நாடாளுமன்றம் முக்கோணமாக வடிவில் அமைக்கப்படுகிறது.
- இது மக்களவை, மாநிலங்களவை, மத்திய பகுதி என மூன்று பிரிவுகளாக கட்டப்பட உள்ளது.
- இதன் உட்புறத்தில் தாமரை, மயில், ஆலமரம் ஆகிய மூன்று தேசிய சின்னங்களின் அடையாளங்கள், மைய கருத்தாக இடம் பெற உள்ளன.
- மக்களவையில் தேசிய பறவையான மயிலும், மாநிலங்களவை பகுதியில் தேசிய மலரான தாமரையும், மத்தியில் தேசிய மரமான ஆலமரமும் இடம் பெறுகின்றன.
- நாடாளுமன்றத்தின் முகப்பு பகுதியை தேசிய சின்னமான நான்முகம் சிங்கம் அலங்கரிக்க உள்ளது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டும் ஒப்பந்தம் டாடா நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது.
- நூற்றாண்டு பழமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டிடம் அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது.
- புதிய நாடாளுமன்றத்தில், ராஷ்டிரபதி பவனில் இருப்பதை போன்று நாட்டின் பாரம்பரியத்தை எடுத்து காட்டும் வகையில் பல்வேறு வண்ணங்களுடன் கூடிய தரை விரிப்புகள் பயன்படுத்தப்படும்.
- இது தவிர, நாடாளுமன்ற நிலைக்குழு அறைகள், உறுப்பினர்களின் ஓய்வறைகள், உணவருந்தும் பகுதி உள்ளிட்ட அனைத்தும் பாரம்பரிய மிக்க, கலைநயத்துடன் கூடிய படங்கள், பொருட்களுடன் அலங்கரிக்கப்படும்.
- மத்திய அரசியலமைப்பு சட்ட அரங்கப் பகுதி, நாட்டின் பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாகவும், இந்திய ஜனநாயகத்தில் மக்களின் மனதில் இடம் பிடித்த தலைவர்களின் படங்களும் இடம் பெற உள்ளன.
டிஆர்டிஓ-வின் 5.56x30 mm கார்பைன் ரக தானியங்கி துப்பாக்கி பரிசோதனை வெற்றி
- பாதுகாப்பு படையினர் உபயோகத்துக்காக, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ) தயாரித்த கார்பைன் ரக தானியங்கி துப்பாக்கிப் பரிசோதனை முழு வெற்றி பெற்றுள்ளது.
- ராணுவத்தின் தேவைகளுக்குத் தகுந்தபடி 5.56X30 எம்எம் அளவுள்ள குண்டுகளைப் பயன்படுத்தும் கார்பைன் ரக தானியங்கி துப்பாக்கியை, புனேவில் உள்ள டிஆர்டிஓ பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் வடிவமைத்தது.
- இந்தத் துப்பாக்கி கான்பூரில் உள்ள ஆயுத தொழிற்சாலையிலும், இதற்கான குண்டுகள் புனேயில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையிலும் தயாரிக்கப்பட்டது.
- 3 கிலோ எடையுள்ள இந்தத் துப்பாக்கியால் 100 மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் சுட முடியும். நேரத்தியான வடிவமைப்பில், ஒரு கையால் சுடும் அளவுக்கு இந்த கார்பைன் ரக துப்பாக்கி தயாரிக்கப்பட்டுள்ளது.
வீரபாண்டி அருகே புதிய அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் அடிக்கல் நாட்டினார் முதல்வர்
- முதல்வர், கடந்த 20.3.2020 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தேனி மாவட்டத்தில் ஒரு புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்தார்கள்.
- அதன்படி, தேனி மாவட்டம், தேனி வட்டம், வீரபாண்டி கிராமத்தில் 253.64 ஏக்கர் நிலப்பரப்பில் 265 கோடியே 87 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு முதல்வர் இன்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
- புதிதாக அமையவுள்ள இக்கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமானது மதுரை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள கால்நடைகளுக்கான மருத்துவ சேவையை பூர்த்தி செய்யும்.
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றத்திற்கு மரண தண்டனை: மகாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல்
- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் மசோதாக்களுக்கு மகாராஷ்டிர அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
- இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் மாநில அரசால் 2 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து அந்த மசோதாக்களுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கும் இந்த மசோதாக்கள் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.