Type Here to Get Search Results !

TNPSC 7th NOVEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி

  • அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை தற்போது முடிவடைந்துள்ளது. மொத்தம் உள்ள 538 தேர்தல் வாக்குகளில், வெற்றி பெற 270 வாக்குகள் தேவைப்படும் நிலையில், ஜோ பைடன் 290 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். 
  • அவரை எதிர்த்து போட்டியிட்ட டிரம்ப் 214 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். இந்த அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 
  • அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்ந்தெடுப்பதும் உறுதியாகியுள்ளது.

ஊராட்சி தலைவர், உறுப்பினரை திரும்ப பெறும் மசோதா ஹரியாணா பேரவையில் நிறைவேறியது

  • ஹரியாணா சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளான நேற்று முன்தினம் 2020-ம் ஆண்டுக்கான ஹரியாணா பஞ்சாயத்து ராஜ் (இரண்டாவது திருத்தம்) மசோதாவை துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா தாக்கல் செய்தார்.
  • கிராம பஞ்சாயத்து தலைவர்கள், ஒன்றிய அளவிலான பஞ்சாயத்து சமிதிகள் மற்றும் மாவட்ட அளவிலான ஜில்லா பரிஷத் உறுப்பினர்கள் சரியாக செயல்படத் தவறினால் அவர்களை திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமையை மக்களுக்கு இந்த மசோதா வழங்குகிறது.
  • மேலும் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 8 சதவீத இடஒதுக்கீடும் வழங்க இந்த மசோதாவில் வகை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
  • இதன் மூலம் ஊரகப் பகுதிகளில் கிராம பஞ்சாயத்து தலைவரையோ அல்லது ஒன்றிய மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் உறுப்பினர்களையோ அவர்களின் பதவிக் காலம் முடிவதற்கு முன்பேமக்கள் திரும்ப அழைத்துக் கொள்ள முடியும். 
  • உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்வு செய்யப்படுவோரின் பொறுப்புடைமையை அதிகரிப்பதே இந்த திருத்தத்தின் நோக்கமாக கூறப்பட்டுள்ளது.
  • தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் ஹரியாணாவைச் சேர்ந்தவர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா மாநில சட்டப்பேரவையில் கடந்த வியாழக் கிழமை நிறைவேற்றப்பட்டது.

இஓஎஸ்-01 உள்ளிட்ட 10 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

  • இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வருகிறது. 
  • இந்தநிலையில், பி.எஸ்.எல்.வி-சி49 ராக்கெட் மூலம் இஓஎஸ்-01 என்ற நவீனரக புவிகண்காணிப்பு செயற்கைக்கோள் நவம்பர் 7ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்தது. 
  • அதன்படி நேற்று ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி49 ராக்கெட்டை விண்ணில் ஏவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 26 மணி நேர கவுண்டவுன் தொடங்கியது.
  • ராக்கெட்டை நேற்று மாலை 3.02 மணிக்கு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக ராக்கெட்டை திட்டமிட்டபடி விண்ணில் ஏவும் பணிகள் தடைபட்டது. இதையடுத்து கவுண்டவுன் நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர்,
  • ராக்கெட் புறப்படும் நேரம் 9 நிமிடம் தாமதமாக மதியம் 3.11 மணி என மாற்றப்பட்டது. அதன்படி, சரியாக 3.11 மணிக்கு முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி49 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. 
  • பூமியில் இருந்து புறப்பட்டு 15 நிமிடம் 20 வினாடியில் 575 கி.மீ தூரத்தில் இந்தியாவின் இ.ஓ.எஸ்-01 செயற்கைகோள் அதன் சுற்றுவட்டப்பாதையில் திட்டமிட்டப்படி நிலைநிறுத்தப்பட்டது. 
  • இதையடுத்து, வணிக ரீதியாக ஏவப்பட்ட லக்சம்பெர்க்கிற்கு சொந்தமான 4 செயற்கைக்கோள்கள், அமெரிக்காவிற்கு சொந்தமான 4 செயற்கைக்கோள்கள், லிதுவேனியா நாட்டிற்கு சொந்தமான 1 செயற்கைக்கோள் என 9 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
  • இஓஎஸ்- 01 செயற்கைக்கோள் புவிகண்காணிப்பு, விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் கண்காணிப்பு ஆகிய பணிகளை துல்லியமாக மேற்கொள்ளும். இது 630 கிலோ எடை கொண்டது. 
  • இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதில் உள்ள எக்ஸ்பேண்ட் சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் அதிக திறன் கொண்ட படங்களை எந்த காலநிலையிலும் துல்லியமாக எடுக்கும். 
ஐ.நா., ஆலோசனை குழு உறுப்பினராக இந்திய துாதர் விதிஷா மைத்ரா நியமனம்
  • ஐக்கிய நாடுகள் சபையில், 193 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இவை, ஐ.நா., நிர்வாகம் மற்றும் பட்ஜெட் கேள்விகளுக்கான ஆலோசனைக் குழுவிற்கு, பிராந்தியம் மற்றும் தகுதி அடிப்படையில், 16 உறுப்பினர்களை தேர்வு செய்கின்றன.
  • இக்குழுவின், 2021 - 23ம் ஆண்டிற்கான உறுப்பினர் தேர்வு நடந்தது. இதில், ஆசிய - பசிபிக் நாடுகள் பிரிவில், விதிஷா மைத்ரா தேர்வு செய்யப்பட்டார்.இவருக்கு ஆதரவாக, 126 ஓட்டுக்கள் கிடைத்தன.
  • எதிர்த்து போட்டியிட்ட, ஈரான் பிரதிநிதி அலி முகமது பேக் அல் தபாக், 64 ஓட்டுக்கள் பெற்றார். இதையடுத்து, நிர்வாக - பட்ஜெட் கேள்விகளுக்கான ஆலோசனைக் குழுவிற்கு, விதிஷா மைத்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
  • மேலும், ஐ.நா., நிர்வாகம், சிறப்பு முகமை அமைப்புகளின் நிதி பரிவர்த்தனைகள் உள்ளிட்டவை தொடர்பான ஆலோசனைகளையும், இந்த குழு, பொதுச் செயலருக்கு வழங்கும்.விதிஷா, டில்லியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel