ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனியார் வேலைகளில் 75% இடஒதுக்கீடு
- மாநில தனியார் துறையில் வேலைக்கு விண்ணப்பிக்கும் உள்ளூர் வேட்பாளர்களுக்கு மாதம் ₹ 50,000 க்கும் குறைவாக வழங்கும் மசோதாவுக்கு ஹரியானா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- தனியார் துறை வேலைகளில் மாநில இளைஞர்களுக்கு 75 சதவீத ஒதுக்கீட்டை வழங்கும் முக்கியமான மசோதாவுக்கு ஹரியானா சட்டமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா ஆளுநரிடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகு சட்டமாக மாறும்.
- 2020 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு மசோதாவில் உள்ளூர் வேட்பாளர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீட்டை ஹரியானா மாநிலம் வழங்குகிறது, இதில் தனியார் துறை வேலைகளில் உள்ள உள்ளூர் மக்களுக்கு சம்பளம் மாதத்திற்கு ரூ.50,000-க்கும் குறைவாக உள்ளது.
சுகாதாரம், சரக்கு மேலாண்மை குறித்த பயிற்சிக்காக உயர் திறன் மேம்பாட்டு மையங்கள் சென்னை கிண்டி, ஒரகடத்தில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
- தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டு திட்டம் 2-வது நிலையின் ஒரு பகுதியாக ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை - தமிழக அரசு இடையே 50 சதவீத விகிதாச்சார பங்களிப்புடன் ரூ.20 கோடி திட்ட மதிப்பீட்டில் சுகாதார நலனுக்கான தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம் அமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.
- அதைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் பங்காக ரூ.1 கோடி, தொழில் நிறுவன கூட்டமைப்பின் சரிசமப் பங்காக காவேரி மருத்துவமனையின் பங்களிப்பு ரூ.1 கோடி என பொது மற்றும் தனியார் கூட்டமைப்பாக லாப நோக்கமற்ற நிறுவனமாக சுகாதார நலனுக்கான தமிழ்நாடு உயர்திறன் மேம்பாட்டு மையம் சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
- இந்த மையத்தில் உலகத் தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகள் கொண்ட வகுப்பறைகள், ஆடியோ காட்சி விரிவுரை அரங்கம், நிர்வாக அலுவலகங்கள், மாநாடு மற்றும் உட்கூட்ட அரங்குகள் போன்ற கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
- இதன் மூலமாக மருத்துவர்கள், செவிலியர்கள், நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் அனைத்து நிலை சுகாதார பணியாளர்களுக்கும் உயர்நிலை திறன் பயிற்சி மற்றும் உயர் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு, உயரிய வேலைவாய்ப்பை அவர்கள் பெற உறுதி செய்வதே இம்மையத்தின் முக்கிய நோக்கமாகும்.
- இங்கு உலக சுகாதார அமைப்புடன் இணைந்து கரோனா தொற்று தொடர்புடைய பயிற்சி பாடத் திட்டம் தொடங்கப்படுகிறது.
- அதேபோல, தமிழக அரசு சார்பில் திறன் மேம்பாட்டு கழகத்தின் பங்காக ரூ.1 கோடி, தொழில்நிறுவன கூட்டமைப்பின் சரிசமபங்காக, சரக்கு நகர்வு மேலாண்மைக்கான திறன் குழுமத்தின் ரூ.1 கோடி பங்களிப்புடன் பொது மற்றும் தனியார் கூட்டமைப்பாக லாப நோக்கமற்ற நிறுவனமாக சரக்கு நகர்வு மேலாண்மை மற்றும் போக்குவரத்து (லாஜிஸ்டிக்ஸ்) பிரிவுக்கான தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள இன்டோஸ்பேஸ் தொழிற்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது.
- இந்த மையத்தையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்த மையத்தில் உலகத் தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் சரக்கு நகர்வு மேலாண்மை குறித்த உயர் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
- முதல்வர் முன்னிலையில், வாணியம்பாடியில் ரூ.20.37 கோடி செலவில் தோல் பதனிடுதல் துறையில் பல்நோக்குத் திறன் மேம்பாட்டு மையம் அமைக்க மத்திய காலணி பயிற்சி நிறுவனத்துக்கும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- நேபாளம் சென்றுள்ள இந்திய ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே, அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி பூா்ணசந்திர தாப்பாவை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்துவது, ராணுவ ஒத்துழைப்பு குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.
- பிராந்தியத்தில் சீனா தனது ஆளுமையை விரிவுபடுத்துவதற்கான தீவிர முயற்சியை எடுத்து வருவதைத் தொடா்ந்து, இந்தியாவும் மியான்மா், மாலத் தீவுகள், வங்கதேசம், இலங்கை, பூட்டான், ஆப்கானிஸ்தான் நாடுகளுடனான உறவை மேலும் வலுப்படுத்த முடிவெடுத்து, அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
- அதுபோல, நேபாளத்துடனும் நட்புறவை மீண்டும் வலுப்படுத்தும் வகையில், ராணுவ தலைமைத் தளபதியை அந்நாட்டு அனுப்பத் தீா்மானித்தது.
- அதனடிப்படையில், நேபாள ராணுவ தலைமைத் தளபதி தாப்பா அழைப்பின் பேரில், ராணுவ தலைமைத் தளபதி நரவணே மூன்று நாள் பயணமாக நேபாளத்துக்கு சென்றாா்.
- அங்கு, போா் நினைவிடத்துக்கு வியாழக்கிழமை சென்று அஞ்சலி செலுத்திய நரவணே, ராணுவ தலைமையகத்தில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றாா். பின்னா் தலைமைய வளாகத்தில் பிகான் மரக் கன்றை நட்டுவைத்தாா்.
- அதன் பிறகு, நேபாள ராணுவ மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள், மருத்துவ உபகரணங்கள், செயற்கை சுவாசக் கருவிகளை இந்தியா சாா்பில் நரவணே வழங்கினாா்.
- அதுபோல, நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு லட்சம் மருத்துவ முகக் கவசங்களையும், அமைதியின் அடையாளமான புத்தா் சிலையையும் நரவேணவுக்கு தாப்பா வழங்கினாா்.
- பின்னா் ராணுவ தலைமை அலுவலகத்தில் இரு நாட்டு ராணுவத தலைமைத் தளபதிகளும் ஆலோசனை மேற்கொண்டனா்.
- முன்னதாக, நேபாள அதிபா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நரவணேவுக்கு அந்நாட்டு ராணுவத்தின் கௌரவ தளபதி பதவியை அதிபா் வித்யாதேவி பண்டாரி வழங்கினாா். அதன் அடையாளமாக நரவணேவுக்கு வீரவாள் உள்ளிட்டவற்றை அதிபா் வழங்கினாா்.
ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் சவுதியின் முதலீட்டு நிறுவனம் ₹9,555 கோடி முதலீடு
- ரிலையன்ஸ் குழுமத்தின் ரீடெய்ல் நிறுவனத்தில், சவுதி அரேபியாவின் பொது முதலீடு நிதி நிறுவனம் (PIF) ₹9555 கோடி (1.3 பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீடு செய்கிறது. இதன் மூலம், ரிலையன்ஸ் ரீடெய்லில் 2.04% பங்குகளை வாங்குகிறது.
- இது சவூதி நிறுவனம் ரிலையன்ஸ் குழுமத்தில் இரண்டாவது முதலீடு ஆகும். ஏற்கெனவே ஜியோவில் சவூதி முதலீட்டு நிறுவனம் 2.32 விழுக்காடு பங்குகளை வாங்கியுள்ளது. இதுவரை ரிலையன்ஸ் ரீடெய்லின் 10.09% பங்குகள் விற்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ₹47265 கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது.