மேற்கு வங்கம், மகாராஷ்டிரா வரிசையில் சிபிஐ அமைப்புக்கான ஒப்புதலை வாபஸ் பெற்றது கேரள அரசு
- மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) டெல்லி சிறப்பு காவல் நிறுவன (டிஎஸ்பிஇ) சட்டத்தின் கீழ் இயங்குகிறது. எந்த ஒரு மாநிலத்திலும் விசாரணை நடத்துவதற்கு அந்த மாநில அரசின் பொதுவான ஒப்புதல் தேவை. இந்த ஒப்புதல் அவ்வப்போது புதுப்பிக்கப்படுவது வழக்கம்.
- இந்நிலையில், கடந்த 2018-ல்சிபிஐ அமைப்புக்கான பொதுவான ஒப்புதலை மேற்கு வங்கஅரசு திரும்பப் பெற்றது. எதிர்க்கட்சியினரை பழிவாங்குவதற்காக சிபிஐ அமைப்பு தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியது.
- இதையடுத்து, காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர், ராஜஸ்தான் அரசுகளும் சிபிஐ அமைப்புக்கான ஒப்புதலை வாபஸ் பெற்றன. இதுபோல, மகாராஷ்டி ராவில் சமீபத்தில் எழுந்த தொலைக்காட்சி டிஆர்பி முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்த நிலையில், அம்மாநில அரசும் சிபிஐ அமைப்புக்கான ஒப்புதலை வாபஸ் பெற்றது.
- இந்நிலையில், கேரளாவில் ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது. இதற்கு கேரள உயர் நீதிமன்றம் கடந்த மாதம் இடைக்கால தடை விதித்தது.
- இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கிடையே மோதல் நிலவி வந்த நிலையில், சிபிஐ அமைப்புக்கான அனுமதியை கேரள அரசு வாபஸ் பெற்றது. முன்னதாக, அமைச்சர வையில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இனிமேல், கேரளாவில் சிபிஐ வழக்கு பதிவு செய்ய மாநில அரசிடம் முன்அனுமதி பெற வேண்டியது அவசியம்.
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.294 கோடி திட்டப் பணிகள் தொடக்கம்: ரூ.324 கோடி பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல்
- சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.162.43 கோடியில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, தேனி ஊராட்சி ஒன்றியங்களில் அமைய உள்ள கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
- கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.9.90 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம், கீழமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.8.46 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம், திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரம் பேரூராட்சியில் ரூ.9.62 கோடியில் குடிநீர் மேம்பாட்டு திட்டம், நாகை மாவட்டத்தில் ரூ.42.46 கோடியில் கூடுதல் நீர் ஆதாரம் ஏற்படுத்துவதற்கான திட்டம், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.91.13 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் என மொத்தம் ரூ.324 கோடி குடிநீர் திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
- திருச்சி மாவட்டம் வையம்பட்டி, மருங்காபுரி ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.46.32 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம், தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி கிராமத்தில் ரூ.6.60 கோடியில் கட்டப்பட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய திட்ட அலுவலக கட்டிடம், மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் ரூ.2 கோடியிலான நகராட்சி அலுவலக கட்டிடம்,
- தேனி அல்லிநகரம் நகராட்சியில் ரூ.3 கோடியிலான தூய்மை பணியாளர் குடியிருப்பு, ஆவடி மாநகராட்சியில் ரூ.197.20 கோடியிலான 4 எம்எல்டி சுத்திகரிப்பு நிலையம் என மொத்தம் ரூ.255.12 கோடியிலான தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறையின் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.
- சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் ரூ.21.82 கோடியில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புடன் சீரமைக்கப்பட்ட 31 நீர்நிலைகள், சென்னை மாநகராட்சியால் சீரமைக்கப்பட்ட 117 சமுதாய கிணறுகள், சென்னை பெருநகர் குடிநீர் வடிகால்,
- கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் சீரமைக்கப்பட்ட 174 சமுதாய கிணறுகள் என மொத்தம் 291 சமுதாய கிணறுகள், திரு.வி.க. நகர் ஸ்டிரஹான்ஸ் சாலையில் ரூ.13.49 கோடியிலான புதிய மண்டல அலுவலக கட்டிடம்,
- துரைப்பாக்கம் ராஜீவ்காந்தி சாலையில் ரூ.1.95 கோடியிலான நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையக் கட்டிடம், தேனாம்பேட்டை கே.பி.தாசன் சாலையில் ரூ.69 லட்சத்திலான சிறப்பு காப்பக கட்டிடம், வில்லிவாக்கம் சிட்கோநகர் 4-வது பிரதான சாலை குடியிருப்பு பகுதியில் ரூ.1.08 கோடியிலான பூங்கா என மொத்தம்ரூ.39.03 கோடி மதிப்பிலான சென்னை மாநகராட்சி திட்டங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
- சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.27 லட்சத்தில் 3 நடமாடும் அம்மா உணவகங்கள், குப்பைகளை உறிஞ்சி அகற்றுவதற்கு ரூ.4.34 கோடியிலான 15 சிறிய வகை வாகனங்களை பயன்பாட்டுக்கு முதல்வர் வழங்கினார்.
- புவி வெப்பமாதலைக் கட்டுப்படுத்துவதற்காக சா்வதேச நாடுகள் பாரீஸ் நகரில் மேற்கொண்ட பருவநிலை மாற்றத்திலிருந்து விலகும் முடிவை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடநத 2017-ஆம் ஆண்டு அறிவித்தாா்.
- அந்த ஒப்பந்தத்திலிருந்து விலக நினைக்கும் நாடுகள், அதற்காக 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று அதில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
- அதன்படி, அமெரிக்காவின் காத்திருப்பு காலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா அதிகாரப்பூா்வமாக விலகியுள்ளது.
- பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், புவியின் சராசரி வெப்பநிலையை 2 டிகிரி செல்ஷியசுக்குக்குக் கீழே வைத்திருப்பதற்கான சா்வதேச ஒப்பந்தம், பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் கடந்த 2016-ஆம் ஆண்டில் கையெழுத்தானது.
- அதற்காக, தங்களது நாடுகளின் தொழிற்சாலைகள் வெளியிடும் கரியமில வாயுவின் அளவை குறிப்பிட்ட அளவுக்குக் கட்டுப்படுத்த அந்த ஒப்பந்தத்தில் நாடுகள் ஒப்புக் கொண்டன. அந்த ஒப்பந்தத்தில், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கையெழுத்திட்டன.
பினாகா ஏவுகணை சோதனை வெற்றி
- ராணுவ ஆராய்ச்சிமற்றும் மேம்பாட்டு அமைப்பு பினாகா ஏவுகணையை உருவாக்கியது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணை சோதனை ஒடிசா கடற்கரை பகுதியில் உள்ள சண்டிப்பூர் ஏவுதளத்தில்இருந்து பரிசோதிக்கப்பட்டது.
- மொத்தம் ஆறு பினாகா ராக்கெட் ஏவுகணைகள் சோதிக்கப்பட்டன. இதில் அனைத்து ராக்கெட் ஏவுகணைகளும் குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தன.
செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநராக பாஸ்கர பாண்டியன் நியமனம்
- செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநராக டி.பாஸ்கர பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் க.சண்முகம் புதன்கிழமை வெளியிட்டாா்.
- ஹா் சகாய் மீனா: பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை செயலாளா் - பயிற்சி (அயல் பணியை முடித்து மாநிலப் பணிக்குத் திரும்பியுள்ளாா்)
- ஜெ.இ. பத்மஜா: பெரம்பலூா் சாா் ஆட்சியா் (விடுப்பில் இருந்து பணிக்குத் திரும்பியுள்ளாா்)
- டி.பாஸ்கர பாண்டியன்: செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை இயக்குநா், தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவன நிா்வாக இயக்குநா் (முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி)
- இ.சரவணவேல் ராஜா: முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி (தமிழ்நாடு கனிமங்கள் துறை நிா்வாக இயக்குா்)
- எல்.சுப்பிரமணியன்: கனிமம் மற்றும் சுரங்கவியல் துறை இயக்குநா் (கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் பொறுப்பை கூடுதலாகக் கவனிப்பாா்)
- தாரேஷ் அகமது : தொழில் வழிகாட்டி நிறுவன நிா்வாக இயக்குநா் (விடுப்பில் இருந்து பணிக்குத் திரும்பியுள்ளாா்).
1 கோடியே 14 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் அதிநவீன திரவ பிராணவாயு கலனை காணொலி காட்சி மூலம் முதல்வர் திறப்பு
- தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில், சேலம் மாவட்டம், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ₹1 கோடியே 14 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 35,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட அதிநவீன திரவ பிராணவாயு கலனை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
- மேலும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக புதிதாக தெரிவு செய்யப்பட்ட 95 சிறப்பு மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.